75வது பிறந்தநாளுக்கு செல்ல அனுமதி கேட்ட கோமதி, பாண்டியன் சொன்ன வார்த்தை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 17/10/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பழனியின் காலில் அடிபட்டு விடுவதால் அவரை சரவணன், சாரில் உட்கார்ந்து இருந்த மாணிக்கத்தை எழுப்பி உட்கார வைத்தார். இதனால் தங்கமயிலுக்கு கடுப்பானது. பின் கொஞ்ச நேரம் கழித்து தங்கமயில், எனக்கு கால் வலிக்கிறது. சாரில் இருந்து எழுங்கள் என்று சொல்லி உட்கார்ந்து கொண்டார். இதையெல்லாம் பார்த்து சரவணனுக்கு பயங்கர கோபம் வந்தது. உடனே பழனி, ஒன்னும் பிரச்சினை இல்லை. நான் வீட்டிற்கு போகிறேன் என்று சென்று விட்டார். வீட்டில் பழனிக்கு, சுகன்யா மருந்து போட்டுக் கொண்டிருந்தார்.

காந்திமதியின் 75 வது பிறந்த நாளை பற்றி கோமதி பேசிக் கொண்டிருந்தார். அப்போது கதிர், கோவிலில் நடப்பதால் எல்லோருமே போகலாம். நீங்கள் அப்பாவிடம் மட்டும் அனுமதி வாங்குங்கள் என்றார். இதையெல்லாம் கேட்ட சுகன்யா, முத்துவேல் வீட்டிற்கு சென்று நடந்ததை சொன்னார். உடனே கோபத்தில் சக்திவேல், அவர்களை யார் கூப்பிட்டது? வந்தால் கலவரமே நடக்கும் என்றார். காந்திமதி, எந்த பிரச்சினையும் செய்யாமல் இரண்டு குடும்பமும் சேர்ந்து நடத்தினால் இந்த கொண்டாட்டத்தை நான் ஏற்றுக்கொள்வேன். இல்லை என்றால் எந்த கொண்டாட்டமும் வேண்டாம் என்றார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

சக்திவேல், பாண்டியன் குடும்பம் வந்தால் கோவிலிலேயே வெட்டுவேன் என்றெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் வீட்டில் போட்டது போட்டபடியே இருக்கிறது என்று செந்தில் கோபப்பட்டு சண்டை வாங்கினார். கோபத்தில் மீனா, நானா வீட்டிற்கு இந்த வீட்டிற்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டேன். நீங்கள் தான் செய்யணும் என்று திட்டி விட்டு சென்றார். பின் செந்தில், தன்னால் முடிந்த அளவுக்கு வேலை செய்துவிட்டு ஹோட்டலில் சாப்பாடு வாங்கிட்டு வரப் போனார். அந்த சமயம் பார்த்து கோமதி போன் செய்து விசாரிக்க, மீனா எமோஷனலாக பேசி இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் செந்தில்-மீனா இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது செந்தில், தன் அப்பா கொடுத்த பணத்தை பற்றி கேட்கிறார். மீனா, தர முடியாது. எதுவாக இருந்தாலும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்றெல்லாம் திட்டிக் கொண்டிருக்கிறார். பின் வழக்கம் போல் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகி சண்டை நடக்கிறது. இன்னொரு பக்கம் கோமதி, தன்னுடைய அம்மாவின் 75 வது பிறந்த நாளை பற்றி பாண்டியனிடம் சொல்கிறார். ஆரம்பத்தில் பாண்டியன் தயங்கினாலும் பின் கடைசியில் பிறந்தநாளுக்கு செல்வதற்கு ஒத்துக்கொள்கிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் பழனிக்கு கால் வலி என்பதால் சரவணன் மருந்து தேய்த்து காலை அமுத்தி விட்டுக் கொண்டிருக்கிறார். மணி ஆகுவதை கூட கவனிக்காமல் பழனி, சரவணன் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வந்த சுகன்யா, சரவணனை திட்டிவிட்டு பழனியை அழைத்துக்கொண்டு செல்கிறார். பின் தங்கமயில், விஉன் மாமாவிற்கு சேவகம் செய்து கொண்டு இருப்பீர்களா? நான் இந்த வீட்டில் ஒரு மனுசியாக இருப்பதே தெரியவில்லையா? எதற்காக என்னை கல்யாணம் செய்தீர்கள்? என்றெல்லாம் கேட்கிறார். இதனால் கோபப்பட்ட சரவணன், அதுதான் எனக்கும் தெரியவில்லை. தயவு செய்து கிளம்பி உன் அம்மா வீட்டிற்கு போ என்றெல்லாம் திட்டுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full