நேருக்கு நேர் மோதிக்கொண்ட மாமியார்- மருமகள்கள், அடுத்து என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 19/12/2024

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் கதிரை பார்க்க பாண்டியன் வீட்டுக்கு அப்பத்தா சென்று இருந்ததால் பயங்கர கலவரமே நடந்தது. இதனால் பாண்டியன், அவருடைய மகன்கள் எல்லோருமே அப்பத்தாவிற்கு சப்போர்ட் செய்தார்கள். கடைசியில் அப்பத்தா, பாண்டியனிடம் கையெடுத்து கும்பிட்டு தன் மகன்கள் உடன் சென்று விட்டார். இதனால் பாண்டியனும் அவருடைய குடும்பமும் ரொம்ப கவலைப்பட்டார்கள். இந்த வாரம் கதிர் மீண்டும் வேலைக்கு போக தயாரானார். பின் தங்கமயிலை அழைத்த பாண்டியன், உன்னை வேலைக்கு வர சொல்கிறார்கள். நீ ஏன் கிளம்பவில்லை? என்று கேட்க, அவர் ரொம்பவே பதறி போனார்.

பின் இதைப் பற்றி சரவணன் இடம் தங்கமயில் பேச, அப்பா சொல்வது போல நடந்து கொள் என்று கிளம்பி விட்டார். இதையெல்லாம் கவனித்த மீனா, ராஜிக்கு சந்தேகம் வந்தது. பின் அவர்கள் இதை பற்றி தங்கமயிலிடம் விசாரித்தார்கள். அப்போது தங்கமயிலும் உண்மையை சொல்ல பார்த்தார். அந்த சமயம் பார்த்து கோமதி வந்தவுடன் அவர் அமைதியாகி விட்டார். இன்னொரு பக்கம் அரசி வருவதை பார்த்த சக்தி, அவரை கரெக்ட் பண்ண தன்னுடைய நண்பர்களை வைத்து திட்டம் போட்டார். அவர்களும் அரசி இடம் வம்பு இழுத்து இருந்தார்கள். நேற்று எபிசோட்டில் பழனி, செந்தில் இருவருமே அந்த நபர்களை அடித்து துரத்தி விட்டு அரிசியை பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வந்தார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இதை செய்தது சக்தி தான் என்று பழனி புரிந்து கொண்டார். இன்னொரு பக்கம் தங்கமயில், பாண்டியன் வீட்டில் நடந்த விஷயத்தை தன்னுடைய அப்பா அம்மாவிடம் சொல்லி அழுது புலம்பி இருந்தார். அவர்களும் சமாதானம் செய்தும் தங்கமயில் கேட்கவில்லை. பின் அவர், நான் உண்மையை சொல்லிவிடுகிறேன் என்று சொல்ல, ஏதாவது செய்கிறேன் என்று ஆறுதல் சொன்னார் தங்கமயில் அப்பா. இன்னொரு பக்கம் கதிர், சவாரி வந்திருக்கிறது என்று கிளம்பினார். பாண்டியன் சொல்லியுமே அவர் கேட்காமல் சென்று விட்டார்.

நேற்று எபிசோட்:

உடனே கோமதி-ராஜி இருவருமே எடுத்து சொல்லியும் கேட்காமல் கதிர் சென்று விட்டார். அதற்குப்பின் இதை பற்றி பாண்டியன், கோபப்பட்டு வீட்டில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது செந்தில், நீங்கள் இப்போது பணம் கொடுப்பீர்கள். பிறகு ஏதாவது காரணம் சொல்வீர்கள் என்று சொன்னவுடன் பாண்டியன் ரொம்பவே வருத்தப்பட்டார். அதோடு தன் மனதில் இருந்த சின்ன சின்ன ஆதங்கத்தையும் வெளிப்படையாக செந்தில் பேசி இருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் செந்தில் சொன்ன வார்த்தையால் வருத்தப்பட்டு பாண்டியன் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

இன்றைய எபிசோட்:

உடனே கோமதி செந்தில் இடும் சண்டை போடுகிறார். அப்போது செந்தில், நான் என்னுடைய மனைவிக்கு ஒரு புடவை வாங்கி தர வேண்டும் என்றால் கூட என்னிடம் பணம் கிடையாது. அப்படியே அவரிடம் கேட்டாலும் 1008 கேள்வி கேட்பார். அந்த நிலைமை கதிருக்கு வேண்டாம். என்னுடைய நிலைமை தான் இப்படி? என்று ரொம்ப எமோஷனலாக பேசிவிட்டு செல்கிறார். ஆனால், அதை புரிந்து கொள்ளாமல் கோமதி, செந்தில் பேசியதை நினைத்து திட்டிக் கொண்டிருக்கிறார். ராஜி சமாதானம் செய்தும் கோமதி ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த சமயம் பார்த்து வந்த மீனா, வழக்கம் போல காமெடியாக கோமதியிடம் பேச , அவர் கோபத்தில் கத்துகிறார்.

சீரியல் ட்ராக்:

மீனாவிற்கு ஒன்னும் புரியவில்லை. உடனே கோமதி, இதற்கு முன் என் மகன்கள் இப்படி இல்லை. எல்லாம் சொல்லிக் கொடுத்துதான் நடக்கிறார்கள் என்று சொன்னவுடன் மீனாவிற்கு கோபம் வந்து அங்கிருந்து எழுந்து சென்று விடுகிறார். தங்கமயில்-ராஜி இருவரும் மீனாவிற்கு சப்போர்ட் செய்து பேச, நீங்களும் உங்கள் புருஷனை ஏற்றி விடுகிறவர்கள் தான். குடும்பத்தைப் பிரிக்க திட்டம் போடுகிறீர்கள் என்று ரொம்ப மோசமாக பேசி இருந்தார். பின் கிச்சனில் கோமதி இடம் பேசாமல் மூவருமே தங்களுடைய வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். அரசி பேசியும் அவர்கள் சரியாக பேசவில்லை. இதனால் மீண்டும் மருமகளுக்கும் மாமியாருக்கும் இடையே வாக்குவாதம் வருகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full