மோதிக்கொண்ட பாண்டியன்-கதிர், ராஜி எடுத்த அதிரடி முடிவு - விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் வேதனையில் இருக்கும் அம்மாவிடம் அவருடைய இரண்டு மகன்கள், பழனி அங்கிருக்கும் வரை திருமணம் நடக்காது. நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்றெல்லாம் சொன்னார்கள். இதனால் பாண்டியனை தனியாக சந்தித்த அப்பத்தா, பழனியை வீட்டிற்கு வர சொல்லி ரொம்ப எமோஷனலாக அழுது பேச, பாண்டியனும் மனமுடைந்தார். பின் வீட்டிற்கு வந்த பாண்டியன், பழனியை அவர் வீட்டிற்கு போக சொன்னார். ஆனால், பழனி முடியாது என்று மறுத்தார். உடனே கோபத்தில் பாண்டியன், பழனியை திட்டி விட்டார்.
வீட்டில் எல்லோருமே கண் கலங்கி பழனிக்கு சப்போர்ட் செய்தார்கள். ஆனால், பாண்டியன் யார் சொல்வதையும் கேட்கவில்லை. பின் மனம் இல்லாமல் பழனி அங்கிருந்து கிளம்பினார். ஆனால், பாண்டியன் எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் அப்பத்தா, பழனி வீட்டிற்கு வந்து விடுவான். அவனுக்கு பிடித்த சாப்பாடு செய்து விடுங்கள். நான் கோமதியின் கணவரை சந்தித்து பழனியை அனுப்பி விட சொன்னேன் என்று சொன்னார். அப்போது பழனி வீட்டிற்கு வந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அப்போது அவருடைய அண்ணன்கள், பழனியை பார்த்து நக்கலாக பேசி இங்கேதான் இருக்கணும் கிளம்பக்கூடாது என்று சொன்னார்கள். பழனிக்கு மனதே இல்லை. அவருடைய நினைப்பு முழுவதுமே பாண்டியன் வீட்டின் மேல் தான் இருக்கிறது. அப்போது மாரி, பாண்டியனிடம் அப்பத்தா சொன்ன விஷயத்தை சொன்னவுடன் பழனி, ஷாக் ஆகி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். அப்போது அவர் அண்ணன்கள் பார்த்த பெண்ணின் போட்டோ எல்லாம் காண்பித்தார்கள். ஆனால், பழனி போட்டோ எதையும் பார்க்காமல் சோகமாகவே இருந்தார்.
நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் காம்பிடிஷன் நடப்பதால் கதிர், ராஜியை அழைத்துக் கொண்டு கடைக்கு சென்று ஷு வாங்கி தந்தார். அதை எல்லாம் பார்த்து ராஜிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நேற்று எபிசோட்டில் பழனிக்கு தன்னுடைய அண்ணன்கள் வீட்டில் இருக்க முடியாமல் பாண்டியன் வீட்டிற்கு வந்து விடுகிறார். பாண்டியனும் எதுவும் சொல்லாமல் ஏற்றுக்கொள்கிறார். வீட்டில் உள்ள எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள்.
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் ப்ராக்டிஸ் செய்ய கதிர்- ராஜி இருவருமே கிரவுண்டுக்கு சென்று இருக்கிறார்கள். அங்கு பாண்டியன் கடை விஷயமாக ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
இன்றைய எபிசோட்:
அப்போது அவர், உங்கள் மருமகள் போலீஸாக பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். உங்களுக்கு தெரியாதா? என்று கேட்டவுடன் பாண்டியன் ஷாக் ஆகிறார். பின் இருவருமே கிரவுண்டில் பயிற்சி எடுத்திருப்பதை பார்த்து கோபப்பட்டு அங்கிருந்து பாண்டியன் கிளம்பி விடுகிறார். பின் அவர், வீட்டில் எல்லோரிடமும் நடந்ததை சொல்கிறார். என்ன செய்வது? என்று புரியாமல் எல்லோருமே அமைதியாக இருக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து கதிர்-ராஜி வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது அவரிடம் நடந்ததை பாண்டியன் கேட்க, கதிர் உண்மை எல்லாம் சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
உடனே பாண்டியன், போலீஸ் வேலை தேவையில்லை. வேறு ஏதாவது வேலை செய் என்று சொல்கிறார். அதற்கு கதிர், முடியாது. அது ராஜியின் கனவு. நான் அவளுக்கு உறுதுணையாக நிற்பேன். யார் எது சொன்னாலும் கேட்க மாட்டேன் என்று தன்னுடைய தந்தையிடம் எதிர்த்து பேசுகிறார். பின் கதிர்- பாண்டியன் இருவருக்குமே வாக்குவாதம் முற்றுகிறது. இதை எல்லாம் பார்த்த ராஜி, நான் போலீஸ் ஆகவில்லை என்று கதிரிடம் சொல்ல, அவர் கோபப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.