ராஜி சொன்ன வார்த்தையால் கோமதி அண்ணன் மகனை அடிக்க சென்ற பாண்டியன்- விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 22/9/2024

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் மீனா, தங்கமயில், ராஜி மூவருமே தன்னுடைய மாமனாரின் பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க ஷாப்பிங் போனார்கள். இதற்கிடையில் மீனா, செந்திலுக்கு நிறைய முறை போன் செய்து கொண்டே இருந்தார். பின் மீனா, இதுதான் நீங்கள் என்னிடம் பேசுவது கடைசி என்று மெசேஜ் அனுப்பி இருந்தார். இதை பார்த்து செந்தில் அதிர்ச்சி ஆகி கதிர் இடம் சொல்லி இருவரும் தேடி அலைந்து கொண்டு இருந்தார்கள்.

அப்போது மீனா போனை ஆன் செய்தவுடன் செந்தில் கால் செய்தார். பிறகு மீனா இருக்கும் இடத்திற்கு செந்தில் போனார். இருவரும் மனதை விட்டு பேச ஒரு வழியாக அவர்களுக்கு இடையில் நடந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது. இந்த வாரம் கதிர் சவாரி போனதை நினைத்து ராஜி - கோமதி ரொம்ப வருத்தப்பட்டு புலம்பி கொண்டிருந்தார்கள். உடனே கோமதி, ராஜி வந்த பின் தான் இந்த ப்ரச்சனை என்று சொல்ல, மீனா கோபப்பட்டு ராஜிக்கு ஆதரவாக பேசி இருந்தார். இருந்தாலும், வேதனையில் ராஜி வருத்தப்பட்டு உள்ளே சென்றுவிட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

மறுநாள் காலையில் கதிர், ராஜிவிடம் பணத்தை கொடுக்க, ராஜி வாங்க மறுத்து இருவருக்கும் மத்தியில் சண்டை நடந்தது. ஒரு கட்டத்தில் சண்டை அதிகமாகி, நான் எல்லா உண்மையும் எங்கள் வீட்டில் சொல்லப்போகிறேன் என்று ராஜி தன்னுடைய அப்பாவை பார்க்க போனார். இந்த உண்மையை எல்லாம் மீனா கோமதியிடம் சொல்ல, கோமதியும் என்ன நடக்குமோ? என்ற பயத்தில் இருந்தார். பின் கதிர், ராஜிவை தடுத்து நிறுத்தி எவ்வளவோ சமாதானம் செய்தார். கடைசியில் ராஜி, நான் போடுற கண்டிஷனுக்கு ஒத்துக்கொண்டால் நான் வீட்டுக்கு வருவேன் என்று சொன்னார்.

சீரியல் கதை:

அதற்கு கதிரும் ஒத்துக் கொண்டார். பின் ராஜி, என்னுடைய படிப்பு செலவிற்கு நீ எந்த காசும் கொடுக்க கூடாது. எனக்கு உன்னுடைய பணம் வேண்டாம். நான் டியூஷன் எடுக்க போகிறேன். இதை நான் வீட்டிலும் சொல்லி விடுவேன் என்று சொன்னவுடன் கதிர் சம்மதித்தார். நேற்று எபிசோட்டில், ராஜி வீட்டுக்கு வந்தார். பின் டியூஷன் எடுக்கும் விஷயத்தையும் சொன்னவுடன் கோமதி அதிர்ச்சி ஆகி மறுத்தார். அதெல்லாம் முடியாது நான் டியூஷன் எடுப்பேன். இதை நீங்கள் மாமாவிடம் எப்படியாவது சொல்ல வேண்டும் என்று ராஜி மிரட்டுகிறார்.

நேற்று எபிசோட்:

கோமதியும் வேறு வழி இல்லாமல் ஒத்துக்கொள்கிறார். அந்த சமயம் பார்த்து தங்கமயில் உள்ளே வந்த உடனே எல்லோரும் பேச்சை நிறுத்திக் கொண்டார்கள். இதனால் அவர் முகமே வாடியது. அதற்கு பின் பாண்டியன், செலவிற்கு கொஞ்சம் பணத்தை சித்தப்பாவிடம் கொடுக்க, அவர் சந்தோஷப்பட்டார். பின் டியூஷன் எடுக்கும் விஷயத்தை சொல்ல சொல்லி கோமதி இடம் ராஜி சிக்னல் கொடுக்க, அவர் பயத்தில் அமைதியாக நின்றார். மீண்டும் கோமதி- ராஜி சேர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது தங்கமயில் வந்தவுடன் அமைதி ஆனார்கள்.

https://www.youtube.com/watch?v=qVwHRi4CAds

சீரியல் ப்ரோமோ:

இதனால் வேதனைப்பட்ட தங்கமயில், சரவணன் இடம் சொல்லி புலம்ப, அவர் கண்டுகொள்ளாமல் வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், ராஜிவின் அண்ணனை பெண் பார்க்க வரும் வீட்டினர் பாண்டியனிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த சமயம் அந்த கோமதியின் அண்ணன்கள், பாண்டியனை ரொம்ப கேவலமாக பேசுகிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த ராஜி, சரவணன் மாமா கல்யாணத்திற்கு முன்னாடி உங்கள் மகன் எங்களை கடத்தி இருந்தார். இது தெரியுமா உங்களுக்கு? என்று கேட்டவுடன் கோபப்பட்டு பாண்டியன், அவனை அடிக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full