பாண்டியனை கேவலமாக பேசிய கோமதி அண்ணன்கள், பயத்தில் ராஜி- விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 27/8/2024

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் தன் வீட்டிற்கு அண்ணன் வந்ததை பார்த்து ராஜி அம்மா வடிவு அதிர்ச்சி ஆகி இருந்தார். அப்போது ராஜி சித்தப்பா, உங்களுக்கு கஷ்டம் என்று எங்களிடம் கேட்டால் பணத்தை கொடுப்போம். நீங்கள் எதற்காக அன்னி நகை வாங்கினீர்கள்? என்று சொன்னவுடன், நான் எதற்கு என் தங்கைக்கு போட்ட நகையை வாங்க போறேன்? என்று கோபமாக பேசி விட்டு சென்று விட்டார். கடைசியில் ராஜியின் அப்பா, எங்கே நகை? என்ன செய்தாய்? என்று கேட்க எதுவுமே பேசாமல் அமைதியாக வடிவு நிற்கிறார்.

உண்மையை சொல்லும் வரை இந்த வீட்டில் தண்ணி, சாப்பாடு எதுவுமே சாப்பிடக்கூடாது என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். இன்னொரு பக்கம், சரவணன்-தங்கமயில் இருவரும் சேர்ந்து ரொமான்ஸாக எடுத்த புகைப்படத்தை எல்லாம் தெரியாமல் ஃபேமிலி குரூப்பில் அனுப்பி இருந்தார்கள். இதை பார்த்த செந்தில், கதிர், சித்தப்பா மூவருமே அதிர்ச்சியாகி இருந்தார்கள். அந்த சமயம் பார்த்து பாண்டியன் அந்த போட்டோவை பார்த்துவிட்டு அதிர்ச்சியாகி இருந்தார். பின் மீனா- ராஜி- கோமதி எல்லோருமே தங்கமயில் அனுப்பிய போட்டோவை பார்த்து கிண்டல் கேலி செய்து இருந்தார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இதை வைத்து மீனா, பாண்டியனிடம் வம்பு இழுத்தார். கடைசியில் செந்தில், சரவணனுக்கு போன் செய்து போட்டோ விஷயத்தை சொல்ல, சரவணன்- தங்கமயில் இருவரும் அதிர்ச்சியாகி இருந்தார்கள். உடனே தங்கமயில் போட்டோவை டெலிட் செய்ய பார்த்தார். ஆனால், மாத்தி பண்ணி விட்டார். சரவணனனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. நேற்று எபிசோடில், தங்கமயில் அனுப்பிய போட்டோவை வைத்து பின் ராஜி- மீனா இருவரும் போன் செய்து ஒவ்வொரு போட்டோவை பற்றி பங்கமாக கலாய்க்கிறார்கள்.

சீரியல் கதை:

இன்னொரு பக்கம் வீடியோ கால் மூலம் செந்தில், கதிர் இருவரும் சரவணனுக்கு போன் செய்து கலாய்க்கிறார்கள். என்ன சொல்வது என்று புரியாமல் சரவணன்- தங்கமயில் இருவருமே அமைதியாக இருக்கிறார்கள். பின் ராஜியின் அப்பா, நகை எங்கே? என்று வடிவை கேட்டு கோபப்பட்டு பேசுகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில், உண்மையை சொல்லு என்று ராஜி அப்பா பயங்கரமாக சண்டை போடுகிறார்.

இன்றைய எபிசோட்:

வீட்டில் உள்ள பெண்கள் எல்லோருமே சமாளிக்கிறார்கள். கடைசியில் வடிவை அடித்து கீழே தள்ள போகும்போது மாரி, உங்கள் மகளுக்கு தான் கொடுத்தோம் என்று உண்மையை உளறி விடுகிறார். இன்னொரு பக்கம் ராஜியின் சித்தப்பாவிற்கு டியூசன் எடுக்கும் விஷயம் தெரிந்து அதிர்ச்சியாகி பயங்கரமாக சண்டை போட்டு வந்து விடுகிறார். என்ன செய்வது என்று புரியாமல் ராஜி பயத்தில் இருக்கிறார். என் வீட்டிற்கு வந்த சித்தப்பா, தன்னுடைய அண்ணனிடம் நடந்தது எல்லாம் சொல்ல, அண்ணனும் நகை விஷயத்தை அவரிடம் சொல்லி இருந்தார்.

சீரியல் ட்ராக்:

ஆத்திரத்தில் இருவருமே பாண்டியனிடம் சண்டை வாங்குகிறார்கள். பாண்டியனுக்கு ஒண்ணுமே புரியவில்லை. கோபத்தில் பாண்டியனும் சண்டைக்கு போகிறார். கடைசியில் சித்தப்பா, வீட்டு மருமகள்களை வேலைக்கு அனுப்பி சாப்பிடுகிறாயே, வெட்கமே இல்லையா? என்று மோசமாக பேசுகிறார்கள். அப்போது ராஜி, மீனாவிடம் நடந்ததை சொல்ல இருவருமே அதிர்ச்சியாகி நிற்கிறார்கள். என்ன நடக்குமோ என்ற ராஜி-கோமதி இருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full