ராஜியின் சித்தப்பாவிடம் சண்டைக்கு போன செந்தில், சப்போர்ட் செய்த சக்தி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் ராஜி போலீஸ் வேலைக்கு போகக்கூடாது என்று பாண்டியன் சண்டை போட்டார். அதற்கு கதிர், எதுவாக இருந்தாலும் என்னிடம் பேசுங்கள். இதற்கும் ராஜிக்கும் சம்பந்தமில்லை. அவள் விருப்பப்படி போலீஸ் ஆகுவார். அதற்கு நான் உறுதுணையாக நிற்பேன் என்று பாண்டியனை எதிர்த்து பேசி இருந்தார். கதிர், நண்பனின் திருமணத்திற்கு சென்னை போவதாக வீட்டில் சொன்னார். இதைக் கேட்டவுடன் கோபத்தில் பாண்டியன் சண்டை போட்டார். உண்மையில் கதிர், ராஜியின் தேர்வுக்காக தான் சென்னை போகிறார்.
இதனால் பாண்டியன்-கதிர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் தான் அதிகமானது. இன்னொரு பக்கம் மீனா வேலை செய்யும் இடத்திற்கு வந்த ராஜியின் சித்தப்பா, தனக்கு தெரிந்த அதிகாரியின் மூலம் பிரச்சனையை முடிக்க பார்த்தார். மீனா, எதுவாக இருந்தாலும் சட்டப்படிதான் செய்வேன். என்னால் யாருக்கும் சலுகை செய்ய முடியாது என்று அதிகாரியை திட்டி விட்டார். இதனால் ராஜியின் சித்தப்பா மீனாவின் மீது கோபப்பட்டார். கடைசியில் கதிர்- ராஜி இருவருமே சென்னைக்கு கிளம்பினார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
மேலும், கதிர் - ராஜி இருவருமே பாண்டியனிடம் சொல்லாமல் சென்னைக்கு கிளம்பி விட்டார்கள். இதனால் வீட்டில் என்ன கலவரம் வருமோ? என்ற பயத்தில் கோமதி இருந்தார். அந்த சமயம் பார்த்து பாண்டியன் வீட்டிற்கு வந்தார். அவர் எல்லோரையும் வரவைத்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது கதிர்-ராஜி வீட்டில் இல்லாததை அறிந்து பாண்டியன் விசாரித்தார்கள். அதற்கு கோமதி, இருவரும் சென்னை கிளம்பி விட்டார்கள் என்று சொன்னவுடன் கோபப்பட்டார்.
கடந்த வாரம் எபிசோட்:
ஆத்திரத்தில் பாண்டியன், அவரவர்கள் முடிவெடுப்பதற்கு இந்த வீட்டில் எதற்கு நான் இருக்கனும் என்றெல்லாம் கத்தி இருந்தார். அப்போது மீனா, ராஜி சித்தப்பா ஆஃபீஸ் வந்து மிரட்டியதை பாண்டியனிடம் சொன்னார். உடனே செந்தில் கோபப்பட்டு அவரிடம் சண்டைக்கு போக பார்த்தார். ஆனால், பாண்டியன் தடுத்து நிறுத்தி இதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். இன்னொரு பக்கம் கதிர்- ராஜி இருவரும் சென்னைக்கு சென்று கொண்டிருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
அப்போது ராஜி, பொய் சொல்லி போவதை நினைத்து வருத்தப்பட்டார். ஆனால், கதிர் அவருக்கு ஆறுதல் சொல்லி சப்போர்ட்டாக பேசி இருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கதிர்-ராஜி இருவரும் சென்னைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். போகும் வழியில் ராஜிக்கு எந்த ஒரு வருத்தமும் வராத அளவிற்கு பார்த்து பார்த்து கதிர் செய்கிறார். இன்னொரு பக்கம் சக்தி, அவருடைய அப்பாவும் வாக்கிங் சென்று கொண்டிருக்கிறார்கள். அப்போது செந்தில் வருகிறார்.
சீரியல் ட்ராக்:
அப்போது செந்தில், என் மனைவி இடம் தேவையில்லாமல் மிரட்டுவது, வம்பு இழுப்பது என்ற வேலையை வைத்துக் கொள்ளாதே என்று சொல்கிறார். உடனே சக்தி, அவர்களிடம் எதற்கு வம்புக்கு செல்கிறீர்கள் அப்பா, அமைதியாக இருங்கள். அவர்கள் வேலையை செய்யட்டும் என்று பாண்டியன் குடும்பத்துக்கு ஆதரவாக பேசுகிறார். இதைக் கேட்டு செந்தில் அமைதியாக செல்கிறார். பின் அரசியை திருமணம் செய்ய வேண்டும் என்றால் இப்படித்தான் பிராக்கெட் போட வேண்டும். நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சக்தி சொன்னவுடன் அவர் அப்பாவும் ஏற்றுக் கொள்கிறார். இன்னொரு பக்கம் கதிர்-ராஜி இருவரும் சென்னை சென்று விடுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.