அரசிக்காக பாண்டியன் எடுத்த முடிவு, மீனாவிடம் சண்டைக்கு போன சக்திவேல் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 14/4/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் கோவிலில் மாப்பிள்ளை அம்மாவும், கோமதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். உடனே மாப்பிள்ளை அம்மா, மீனா அவர்கள் தான் கிரியேட்டிவிட்டியாக கல்யாணம் பண்ண வர சொன்னார் என்று சொன்னவுடன் கோமதியால் எதுவுமே பேச முடியவில்லை அமைதியாக இருந்தார். மீனா-ராஜி இருவருமே மாட்டிக்கொண்டோம் என்று பயப்பட்டார்கள். அதற்கு பின் மாப்பிள்ளையை தனியாக அழைத்து சென்ற மீனா, நாங்கள் அரசி படிப்பு விஷயமாக பேச தான் அழைத்தோம். திருமணத்திற்கு பிறகும் அவள் படிக்க வேண்டும். உங்களுக்கு சம்மதமா? என்று கேட்க, மாப்பிள்ளையும் ஒத்துக்கொண்டார். வந்த வேலை நல்லபடியாக முடிந்தது என்று நினைத்து மீனா சந்தோஷப்பட்டார்.

அதற்குப்பின் கோமதி, எதற்காக மாப்பிள்ளை வீட்டில் வர வைத்தீர்கள்? கல்யாணத்தை நிறுத்த பார்க்கிறீர்களா? என்று ராஜி- மீனா இருவரிடமும் சண்டை போட்டார். அப்போது மீனா, அரசி படிப்பு விஷயமாக பேசத்தான் வர சொன்னோம். மாப்பிள்ளையும் ஒத்துக்கொண்டார் என்று சொன்னவுடன் கோமதி அமைதியாகி விட்டார். அதற்கு பின் கோயிலில் நடந்ததை பற்றி எல்லாம் பாண்டியன் இடம் கோமதி சொன்னார். அப்போது வீட்டிற்கு மாப்பிள்ளையும் அவருடைய அம்மாவும் வந்தார்கள். அப்போது மாப்பிள்ளையின் அம்மா, கல்யாண விஷயமாக பேச தான் வந்தேன். நகை போடுவதைப் பற்றி பேச வந்தேன் என்று சொன்னவுடன் பாண்டியன் ஷாக் ஆனார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

மாப்பிள்ளை அம்மா, பொண்ணுக்கு நீங்கள் விருப்பப்பட்ட நகையை போடுங்கள். மாப்பிள்ளைக்கு கார் வாங்கி கொடுங்கள். கல்யாணத்தை ரொம்ப கிராண்டாக நடத்துங்கள். அப்பதான் ஊர் மக்கள் பெருமையாக இருக்கும். எதையும் குறை வைக்காதீர்கள் என்று சொன்னவுடன் பாண்டியனுக்கு இடி மேல் இடி விழுந்தது. எதுவும் பேச முடியாமல் பாண்டியன் சம்மதம் சொன்னார். பின் தன்னுடைய அம்மாவிடம் மாப்பிள்ளை, எதற்காக இப்படி கேட்கிறீர்கள்? அவர்கள் விருப்பப்படி செய்யட்டும். நீங்கள் எதுவும் கேட்டு வாங்காதீர்கள் என்று கோபப்பட்டார்.

கடந்த வாரம் எபிசோட்:

இன்னொரு பக்கம் ஆபீஸில் மீனா, சட்டவிரோதமான கடைகளை இடிப்பதை பற்றி பேசிக் கொண்டிருந்தார் . அப்போது சக்திவேல் கடையை இடிக்கவில்லை என்று மற்றொரு அதிகாரி சொன்னார். உடனே மீனா, கடையின் மீது நடவடிக்கை எடுங்கள் என்று ஆர்டர் போட்டார். பின் வீட்டில் மூன்று ஜோடிகள் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது சரவணன், மாப்பிள்ளையின் அம்மா கேட்ட வரதட்சணையை பற்றி சொன்னவுடன் எல்லோருமே ஷாக் ஆகி இருந்தார்கள். உடனே பாண்டியன், நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் அதைப் பற்றி கவலைப்படாதீர்கள் என்று சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன், அரசி கல்யாணம் என்னுடைய பொறுப்பு. யாரும் அதைப்பற்றி யோசித்து கவலைப்பட வேண்டாம். எவ்வளவு லட்சம் ஆனாலும் பரவாயில்லை. நான் அரசி கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன். நீங்கள் எல்லோருமே அவர்கள் வேலையை பாருங்கள் என்று சொல்கிறார். அதனால் வீட்டில் உள்ள எல்லோருமே அமைதியாக விடுகிறார்கள். அதற்குப்பின் ரூமில் மீனா, செந்தில் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது செந்தில், அரசிக்காக லட்சக்கணக்கில் செலவு செய்ய என் அப்பா தயாராக இருக்கிறார். ஆனால், எனக்காக ஒரு ரூபாய் கூட தரம் தர மறுக்கிறார்.

சீரியல் ட்ராக்:

இதை நினைத்தால் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று வேதனைப்பட்டு பேசுகிறார். அடுத்த நாள் காலையில் தான் கனவில் சாமி வந்ததாக சொல்லி கோமதி கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று பாண்டியனிடம் சொல்கிறார். பாண்டியனும் சம்மதிப்பதால் எல்லோருமே கோயிலுக்கு செல்லலாம் என்று முடிவெடுக்கிறார்கள். அதற்குப்பின் மீனா, சக்திவேல் கட்டிடத்திற்கு நோட்டீஸ் ஓட்ட வந்திருக்கிறார். உடனே சக்திவேலும் அவருடைய மகன் குமாருமே மீனாவிடம் சண்டைக்கு போகிறார்கள். குடும்ப பகையை வைத்து தான் இப்படி எல்லாம் செய்கிறாய் என்று மீனாவை மோசமாக பேசுகிறார்கள். கோபத்தில் மீனா, சட்டப்படி தான் நடவடிக்கை எடுப்பேன் என்று சொல்கிறார். உடனே அங்கிருந்த பிரஸ்ஸை சக்திவேல் வரவைக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full