பாண்டியன் வீட்டில் விவேசம், கோபத்தில் கொந்தளிக்கும் பழனி அண்ணன்கள் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் மீனா, வேலை செய்யும் இடத்திற்கு வந்த ராஜியின் சித்தப்பா, சக்தி இருவரும் ஆக்கிரமிப்பு இடம் சம்மந்தமாக தகராறு செய்தார்கள். அதற்கு மீனா, பதிலடி கொடுத்து இருந்தார். கோபத்தில் அவர்கள் மீனாவிடம் சண்டை போட்டு மிரட்டி விட்டு சென்றார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் திருடனுக்கு பயந்து சிசிடிவி கேமராவை பொருத்தி அதை பார்த்து ரசித்து சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார் பாண்டியன். பின் அவர், தூங்காமல் கூட சிசிடிவி கேமராவை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கேமரா இருட்டாக தெரிகிறது என்று ஒரே ஆர்ப்பாட்டம் செய்து இருந்தார்.
அதன் பின் தங்கமயில், சரவணன் தன்னுடைய பிறந்தநாளுக்கு எந்த ஒரு பரிசுமே கொடுக்கவில்லை என்று வேதனைப்பட்டார். பின் ராஜி, கண்ணனை துரத்தும் வீடியோவை கதிர் பார்த்து கொண்டிருந்தார். அப்போது ராஜி, என்ன வீடியோ? என்று கேட்டதற்கு, எவ்வளவு வேகமாக ஓடுகிறாய் என்றார் கதிர். அதற்கு ராஜி, நான் அத்தலட் பிளேயர். எனக்கு போலீசாக வேண்டும் என்று தான் ஆசை என்று சொன்னவுடன் கதிர் ஆச்சரியப்பட்டார். பின் அவரை கிரவுண்டுக்கு அழைத்து சென்ற கதிர், நீ என்னை விட ஓடி வெற்றி பெற்றால் நீ சொல்வதை நான் கேட்கிறேன் என்றவுடன் ராஜி பந்தயத்திற்கு தயாரானார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
கதிர்- ராஜி இருவருமே ரன்னிங் ரேஸ் ஓடி இருந்தார்கள். அதில் ராஜி வெற்றி பெற்று இருந்தார். ராஜியின் ஓட்டத்தைக் கண்டு பிரமித்து போன கதிர், நீ எப்படியாவது போலீசாக வேண்டும். நான் உன்னை போலீஸ் ஆக்குகிறேன். நீ தினமும் பிராக்டிஸ் செய். எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அவருக்கு சப்போர்ட்டாக பேசி இருந்தார். முதலில் ராஜி மறுத்தாலும் கதிர் சொன்னதால் ஒத்து கொண்டார்.
பின் பாண்டியன், பழனிக்கு பெண் பார்த்து இருக்கிறேன்.
நேற்று எபிசோட்:
நல்ல குடும்பம், பெண் நல்ல படித்திருக்கிறார். மரியாதை தெரிந்த பெண். பெண் பார்க்க வீட்டிற்கு போகலாம் என்று சொன்னவுடன் எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். பழனி, குஷியில் வெட்கப்பட்டார். நேற்று எபிசோட்டில் பாண்டியன், வெளியே நின்று பழனிக்கு பெண் பார்க்க போகிறோம். நல்ல குடும்பம். சீக்கிரமாக பழனிக்கு கல்யாணம் பண்ணி வைக்க போகிறோம் என்று சொன்னவுடன் ராஜி சித்தப்பா கேட்டு கோபப்பட்டார். பின் இதைப்பற்றி வீட்டில் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார்.
சீரியல் ட்ராக்:
அந்த சமயம் வந்த பழனியிடம், அவன் யார் உனக்கு திருமணம் செய்ய? நாங்கள் பண்ணுகிறோம். உனக்கு சொத்தில் பங்கு கிடையாது என்று அவர் அண்ணன்கள் சண்டை போட்டார்கள். உடனே பழனி, எனக்கு எந்த சொத்தும் வேண்டாம். நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் தங்கமயில், ஸ்கூலில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது வந்த தலைமை ஆசிரியர், மற்ற ஆசிரியர் பார்த்து தங்கமயில் பயந்தார். பின் தங்கமயில் எடுக்கும் பாடத்தை மீனா, ராஜி ரசித்து பார்த்துக் பாராட்டி இருந்தார்கள்.
https://www.youtube.com/watch?v=H8tNGU_eHbQ
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பாண்டியன் குடும்பத்தினர் பழனிக்கு பெண் பார்க்கும் வீட்டிற்கு சென்றிருந்தார்கள். அங்கு பெருமையாக பாண்டியன் தன்னுடைய குடும்பத்தை அறிமுகம் செய்து வைத்தார். பின் பெண்ணை பார்த்தவுடன் பழனிக்கு ரொம்ப பிடித்து விட்டது. பெண் வீட்டிற்குமே மாப்பிளை பிடித்து விடுகிறது. இன்னொரு பக்கம் பழனியின் அண்ணன்கள், எப்படியும் அவனுக்கு பெண் கொடுக்க மாட்டார்கள். அவனை கேலி செய்து அனுப்பி விடுவார்கள் என்று கிண்டலாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வந்த பாண்டியன், பழனிக்கு பெண் பேசி முடிந்துவிட்டது. இன்னும் நாலு நாட்களில் நிச்சயதார்த்தம். அவருடைய அண்ணன்கள் வரலாம். என் தலைமையில் தான் திருமணம் நடக்கும் என்றவுடன் அவர் அண்ணன்கள் பயங்கரமாக கோபப்படுகிறார்கள்.