பாண்டியனுக்கு எதிராக நடக்கும் சதி, தங்கமயில் ஆதார் கார்டை கேட்கும் சரவணன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 12/11/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் வீட்டில் உள்ள பெண்கள் எல்லோருமே மாற்றி மாற்றி கேள்வி கேட்க, ஏதேதோ பதில் சொல்லி சமாளித்தார் தங்கமயில். இதையெல்லாம் கேட்ட சரவணனனுக்கு தங்கமயில் மீது சந்தேகம் வந்தது. பின் சமாளித்துவிட்டு தங்கமயில் அங்கிருந்து சென்று விட்டார். அதற்குப்பின் காலையில் சீக்கிரமாகவே கோமதி, தீபாவளி பண்டிகை என்பதால் எல்லோரையும் எழுப்பினார். எல்லோருமே குளித்துவிட்டு தீபாவளி பண்டிகைக்கு புது ஆடை அணிந்து சந்தோசமாக தயாராகினார்கள்.

தீபாவளி பண்டிகை என்பதால் பாண்டியன் வீட்டில் கறி விருந்து எல்லாம் ஏற்பாடு செய்து எல்லோருமே தடபுடலாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் பட்டாசு வெடித்து சந்தோசமாக எல்லோரும் கொண்டாடினார்கள். இன்னொரு பக்கம் சரவணன், வயசை பற்றி கேட்டார். பயந்து போய் தங்கமயில் ஏதேதோ சொன்னார். இருந்தாலுமே சரவணன் கேட்காமல் தங்கமயிலிடம் ஆதார் கார்டு கேட்டார். ஆனால், தங்கமயில் சமாளித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

பின் அடுத்து என்ன நடக்குமோ? என்று பயத்திலேயே தங்கமயில் புலம்பி கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் விருந்துக்கு சுகன்யா, பழனி இருவருமே மாமியார் வீட்டிற்கு செல்வதாக இருந்தார்கள். அதற்குள் பாண்டியன், பழனியை அழைத்து ஒரு இடத்திற்கு சென்று பணத்தை வாங்கி வர சொன்னார். இதை கேட்டு சுகன்யாவுக்கு பயங்கர கோபம் வருகிறது. பழனியும் எதுவும் சொல்லாமலே பணத்தை வாங்க சென்று விட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா எல்லோரிடம் சேர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார். செந்தில், எவ்வளவு கூப்பிட்டுமே மீனா வரவில்லை. பின் செந்தில் கோபப்பட்டு மீனாவின் அப்பா, அம்மா வீட்டிற்கு சென்று விடுகிறார். அப்போது செந்தில், மீனா எவ்வளவு சொல்லியுமே கேட்க மறுக்கிறார். என்னுடைய வீட்டிலேயே இருக்கிறார் என்றெல்லாம் புகார் சொல்கிறார். இதைக் கேட்டு மீனாவின் அம்மா-அப்பா இருவருமே நாங்கள் எப்படியாவது பேசி புரிய வைக்கிறோம் என்கிறார்கள். இன்னொரு பக்கம் சுகன்யா, தீபாவளி அன்றும் பழனி வேலைக்கு போனதை பற்றி முத்துவேலிடம் சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

அந்த சமயம் வந்த பழனி, சுகன்யாவை அழைக்கிறார் உடனே முத்துவேல், உனக்கு கடையை ஏற்பாடு செய்து விட்டோம். தீபாவளி பண்டிகை முடிந்த உடனே கடைக்கு நீ செல் என்றெல்லாம் சொல்கிறார். பழனி வேண்டாம் என்று சொல்லியுமே முத்துவேல் கேட்கவில்லை. பின் பழனியை தனியாக அழைத்து சென்ற சுகன்யாவிற்கு என்று தனி மரியாதை வேண்டும். நீ தனியாக கடையை வைத்து நடத்து. நான் மாப்பிள்ளை கோமதியிடம் பேசுகிறேன் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டில் எல்லோருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சரவணன், வாக்கெடுப்புக்காக எல்லோருடைய ஆதார் கார்டையும் கேட்கிறார்கள் என்று சொல்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே தங்களுடைய ஆதார் கார்டை கொடுக்கிறார்கள் .ஆனால் தங்கமயில் மட்டும் ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார் .சரவணன் இன்னும் கோபம் அதிகமாகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full