பிறந்தநாள் விழாவில் காந்திமதியின் ஆசைப்படி இரு குடும்பமும் சேர்ந்தார்களா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பிறந்தநாள் விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்தது. அப்போது காந்திமதி, கோமதி வந்துவிடட்டும் என்றார். இதை கேட்டு சக்திவேல் திட்டிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் கோயிலுக்கு வெளியில் பாண்டியன் குடும்பத்தில் எல்லோருமே வந்து விட்டார்கள். அப்போது பாண்டியன், எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது. யார் என்ன சொன்னாலும் சண்டை போடக்கூடாது என்று தன் மகன்களிடம் அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார்.
பாண்டியன் குடும்பத்தில் எல்லோருமே கோவிலுக்குள் சென்றார்கள். அவர்களை பார்த்து சக்திவேல் முறைத்துக் கொண்டிருந்தார். கோமதி தன்னுடைய அம்மாவிடம் பேச வரும்போது சக்திவேல், காந்திமதியை அழைத்துக் கொண்டு சென்றார். பின் எல்லோருமே சேர்ந்து கோயிலில் சாமி கும்பிட்டார்கள். அப்போது பழனிக்கு சாமி வந்துவிட்டது. பழனி, எல்லோருமே குடும்பமாக ஒன்றாக சேர்ந்து என்னை பார்க்க வந்தது சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு எந்த குறையும் இல்லை.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இதே மாதிரி வருடம் வருடம் என்னை பார்க்க குடும்பமாக சேர்ந்து வாருங்கள் என்றார். இதை கேட்டு சக்திவேலுக்கு பயங்கர கோபம் வந்து பழனிவேலை திட்டினார். உடனே எல்லோருமே சக்திவேலை தடுத்து நிறுத்தினார்கள். அதற்குப்பின் பிறந்தநாள் விழாவில் சக்திவேல் தன்னுடைய அம்மாவிற்கு 12 பவுனில் தங்கச் செயின் போடுவதாக பெருமையாக பேசி இருந்தார். இது எல்லாம் ஓரமாக நின்று பாண்டியன் குடும்பம் பார்த்துக் கொண்டிருந்தது.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் காந்திமதியின் பிறந்த நாளுக்காக கதிர் தன்னுடைய தாத்தாவுடன் இருக்கும் போட்டோவை கொடுக்கிறார். அதை பார்த்து காந்திமதி ரொம்ப எமோஷனலாக அழுகிறார். பின் பாண்டியன் குடும்பத்தில் உள்ள எல்லோருமே காந்திமதியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள். இதையெல்லாம் பார்த்து சக்திவேல் பயங்கரமாக கொந்தளிக்கிறார். அதற்குப்பின் காந்திமதி ரெண்டு குடும்பமும் சேர்ந்து நின்று ஒரு போட்டோ எடுக்கணும் என்று கேட்கிறார். முத்து, சக்திவேல் ஒத்துக் கொள்ளவே இல்லை. எல்லோரும் ரொம்பவே கெஞ்சி கேட்டு பேசிய பிறகுதான் முத்துவேல் ஒத்துக் கொள்கிறார்.
சீரியல் ட்ராக்:
பின் முத்துவேல்-பாண்டியன் இரண்டு குடும்பம் சேர்ந்து காந்திமதியுடன் போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள். இதை பார்த்து காந்திமதிக்கு சொல்ல வார்த்தைகளே இல்லை. அதற்குப்பின் காந்திமதி தன்னுடைய மகள் மருமகளுடன் சேர்ந்து யாருக்கும் தெரியாமல் தனியாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் கதிர்- ராஜி இருவருமே போட்டோ சூட் செய்து கொண்டிருக்கிறார்கள். பின் பாண்டியன் தன்னுடைய உறவினர்களுடன் பேசி கொண்டிருக்கிறார். இதையெல்லாம் பார்த்து சக்திவேலுக்கு வயிறு எரிகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது