தலைகால் புரியாமல் ஆடும் செந்திலால் கொந்தளித்த மீனா, காந்திமதி போட்ட கண்டிஷன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 14/10/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் செந்தில் வீட்டிற்கு வரவில்லை என்று மீனா போன் செய்து பேசி இருந்தார். ஆனால், செந்தில் நிறைய குடித்துவிட்டு போதையில் இருந்தார். இன்னொரு பக்கம் கோமதி, மீனாவை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அதற்கு பாண்டியன், ஆறுதல் சொன்னார். இதுதான் சந்தர்ப்பம் என்று சரவணன், தங்கமயில் உங்களுடன் வீட்டிலேயே இருக்கட்டும் என்றார். உடனே தங்கமயில், சாதுரியமாக பேசி சரவணன் போட்ட பந்தை திருப்பி அவருக்கு அனுப்பி விட்டார். இருந்தாலுமே கோமதி, மீனாவை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்.

கதிர்- பழனி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பழனி, தன்னுடைய அம்மாவின் 75வது பிறந்தநாள் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் ராஜி, குமார் சொன்னது நினைத்துக் கொண்டிருந்தார். அப்போது வந்த கதிர், பாட்டியின் 75வது பிறந்தநாள் பற்றி சொல்வதால், ராஜியுமே என்ன செய்வது என்று புரியவில்லை என்றார். பின் இருவருமே பிறந்தநாளுக்கு போவதை பற்றி பேசினார்கள். இன்னொரு பக்கம் செந்தில், வீட்டிற்கு நிறைய குடித்துவிட்டு வந்தார். இதை பார்த்து மீனா பயங்கரமாக சண்டை போட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

செந்தில், உன் வேலையை பார் என்று தெனாவட்டாக பேசிவிட்டு சென்றார். இன்னொரு பக்கம் காந்திமதியின் 75வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முத்துவேல் வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது காந்திமதி, என்னுடைய பிறந்தநாளுக்கு ரெண்டு குடும்பமும் ஒன்று சேரனும். என்னுடைய மகன்கள், மகள், பேரப்பிள்ளைகள் எல்லோருமே வரணும் என்றார். சக்திவேல், இது நடக்காத ஒன்று. அவர்களுடன் நாங்கள் சேர மாட்டோம் என்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காந்திமதி, என்னுடைய இரண்டு குடும்பமும் ஒன்றாக சேர்ந்து நடத்தினால் இந்த பிறந்த நாளை நான் கொண்டாடுவேன். இல்லை என்றால் நான் இந்த விழாவிற்கு வரமாட்டேன் என்று சொல்கிறார். இது எல்லாம் கேட்டு சக்திவேலுக்கு பயங்கர கோபம் வருகிறது. குமார், வீட்டின் மருமகள் எல்லோருமே அப்பத்தாவிற்கு தான் சப்போர்ட் செய்து கோமதியை அழைக்க சொல்கிறார்கள். ஆனால், சக்திவேல் முடியாது என்று வீம்பாக இருக்கிறார். இன்னொரு பக்கம் மீனா வேலைக்கு தயாராகி இருக்கிறார். போதை தெளிந்த செந்தில், காபி வேண்டும் என்கிறார்.

சீரியல் ட்ராக்:

மீனா, பால் இல்லை என்றார். உடனே செந்தில், இது கூட செய்ய முடியாதா என்றெல்லாம் பேசுகிறார். பின் செந்தில், யாரிடமும் கேட்காமல் பாண்டியன் கொடுத்த பணத்தை வைத்து வீட்டிற்கு தேவையான எல்லா பொருள்களையுமே வாங்கி போடுகிறார். இதையெல்லாம் பார்த்து மீனாவிற்கு பயங்கர கோபம் வருகிறது. இன்னொரு பக்கம் கோமதி வருவதை பார்த்த குமார், அவரிடம் பேசிய முயற்சிக்கிறார். ஆனால், கோமதி சரியாக பேசவில்லை திட்டி அனுப்பி விடுகிறார். அதற்கு பின் வீட்டில் எல்லோருமே சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். கோமதி, மீனாவை நினைத்துக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் வந்த மீனாவை பார்த்து வீட்டில் உள்ள எல்லாருமே சந்தோஷப்படுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full