கோவில் வாசலிலே பிரச்சனை செய்யும் சக்திவேல், காந்திமதி சொன்ன வார்த்தை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் முத்துவேல், கோயிலுக்கு பாண்டியன் வீட்டிலுமே வரட்டும். அன்னதானம் போடட்டும். எந்த பிரச்சனையும் செய்ய வேண்டாம். இது நம் அம்மாவினுடைய ஆசை. அது நிறைவேறட்டும் என்று சொல்கிறார். சக்திவேல் கோபப்பட்டு வீட்டில் உள்ள எல்லோரிடமும் சண்டை வாங்கி இருந்தார். முத்துவேல், அம்மாவின் பிறந்த நாளில் எந்த பிரச்சினையும் நடக்கக்கூடாது. அமைதியாக இரு என்று சொல்வதால் அங்கிருந்து சக்திவேல் கிளம்பி விட்டார்.
அப்பத்தாவின் பிறந்தநாளுக்கு பரிசு கொடுப்பதற்காக கதிர், தாத்தாவின் புகைப்படத்தை ஒரு நபரிடம் வரைய வைத்தார். ராஜியும் அதற்காக உதவி செய்தார். இன்னொரு பக்கம் அப்பத்தாவின் பிறந்தநாளுக்கு எல்லோரும் வாழ்த்துக்கள் சொன்னார்கள். சக்திவேல் மட்டும் கோபமாக இருந்தார். அப்பத்தா, பாண்டியன் குடும்பம் கோயிலுக்கு வந்தால் பிரச்சனை எல்லாம் செய்ய வேண்டாம் என்று கெஞ்சி கேட்டார். அதற்குப்பின் பாண்டியன் வீட்டில் ஒவ்வொரு ஜோடிகளும் தயாராகி வந்தார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
கோமதி, தன் அம்மாவின் பிறந்தநாளுக்கு பரிசு கொடுக்க புடவை, வளையல் என்று வாங்கி வைத்து இருந்தார். அதற்கு பின் வீட்டில் எல்லோருமே தயாராகி இருந்தார்கள். கோமதி, கோவிலில் பிறந்த நாளில் எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்று பயந்து கொண்டிருந்தார். பாண்டியன், கோயிலுக்கு சென்று பிறந்தநாள் வாழ்த்து சொல்லிவிட்டு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வந்துவிடலாம் என்றார். அதனால் வீட்டில் உள்ள எல்லோருமே சரி என்றார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்துவேல் குடும்பத்தில் எல்லோருமே கோயிலுக்கு வந்து விடுகிறார்கள். அப்போது காந்திமதி, தன் மகன்கள் வைத்திருக்கும் பேனரை பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் பாண்டியன் குடும்பத்தினர் வைத்திருக்கும் பேனரை பார்த்து சக்திவேல் பயங்கரமாக கோபப்பட்டு கத்துகிறார். குமாரிடம் சொல்லி அந்த பேனரை கிழித்து போட சொல்கிறார். உடனே காந்திமதி, கோயிலில் எந்த பிரச்சனையும் செய்து சண்டை போட மாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்து கொடுத்து உள்ளீர்கள். தயவு செய்து அமைதியாக இருங்கள் இல்லை என்றால் நான் இப்படியே வீட்டிற்கு போகிறேன் என்று சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
முத்துவேல், சக்திவேலை திட்டி அமைதியாக்குகிறார். அதற்குப்பின் பிறந்தநாள் விழாவிற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. அப்போது காந்திமதி, கோமதி வந்துவிடட்டும் என்று சொல்கிறார். இதை கேட்டு சக்திவேல் திட்டிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் கோயிலுக்கு வெளியில் பாண்டியன் குடும்பத்தில் எல்லோருமே வந்து விடுகிறார்கள். அப்போது பாண்டியன், எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது. யார் என்ன சொன்னாலும் சண்டை போடக்கூடாது என்று தன் மகன்களிடம் அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.