சுகன்யாவை வெளுத்து வாங்கிய கோமதி, உண்மையை சொன்ன பழனி - விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 19/7/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் அரசியை பாண்டியன் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். வீட்டில் உள்ள எல்லோருமே அரசியை இப்படி செய்ததைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்தார்கள். கடைசியில் பாண்டியன், இந்த விஷயத்தை இதோடு விடுங்கள். இனிமேல் அரசி திருமணத்தைப் பற்றி யாரும் பேச வேண்டாம் என்று சொன்னார். அரசியும் தன்னுடைய அப்பாவிடம் மன்னிப்பு கேட்டு, உங்கள் மீது இருந்த பயத்தால் தான் உண்மையை சொல்ல முடியவில்லை என்றார். இன்னொரு பக்கம் முத்துவேல், குமார் செய்த வேலைக்கு அடித்தார். இதனால் கோபப்பட்ட சக்திவேல், என் மகனை எதற்காக அடிக்கிறீர்கள்? அவன் செய்தது தான் சரி.

உங்கள் மகள் ஓடிப்போய் மானத்தை வாங்கி விட்டாள் என்று மீண்டும் தரகுறைவாக ராஜியை பற்றி பேசி இருந்தார். இதனால் கொந்தளித்த முத்துவேல், மூணு பேரை உன் மகன் கடத்திருக்கிறான். அவன் செய்வதற்கெல்லாம் நீ சப்போர்ட் செய்கிறார் என்று சொல்வதால் அண்ணன்- தம்பி இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமானது. உடனே அப்பத்தா, அவர்களை தடுத்து நிறுத்தி விட்டார். கடைசியில் மீனா, ராஜி, அரசி எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அரசி, நான் குமாரை பழி வாங்கவும், நம்ம வீட்டின் மீது இருந்த பயத்தால் தான் அங்கு போனேன். நான் தான் அவனை டார்ச்சர் செய்து கொண்டிருந்தேன். இப்போது அவன் ரொம்ப நிம்மதியாக இருப்பான் என்று சொன்னார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோட்டில் சந்தோஷத்தில் பாண்டியன் எல்லோருக்குமே பரோட்டா, சிக்கன் வாங்கி வந்திருந்தார். பின் எல்லோரையும் உட்கார வைத்து ஒவ்வொருவருக்குமே கையில் சாப்பாடு கொடுத்தார் பாண்டியன். அதற்கு பின் பாண்டியன், நீ எப்படி குமார் இடத்திற்கு போனாய்? என்று கேட்டார். அரசியால் எதுவுமே பேச முடியவில்லை. அப்போது மீனா, ராஜி இருவருமே இந்த எல்லா பிரச்சனைக்கும் காரணம் சுகன்யா தான் என்று சொல்லிவிட்டார்கள். சுகன்யா ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை அரசி வாழ்க்கையில் செய்ததை ஒன்று விடாத சொன்னார்கள்.

நேற்று எபிசோட்:

சுகன்யாவும் இல்லை என்று சமாளித்தார். இருந்தாலுமே சுகன்யா சொல்வதில் உண்மை இல்லை என்பது பாண்டியன் குடும்பத்திற்கு தெரிந்தது. அப்போது மீனா, குமார் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை காட்டி மிரட்டியதனால் தான் சுகன்யா வீட்டில் யாரிடமும் சொல்லாமல் அரசியை கொண்டு போய்விட்டார். அதற்கு பின் குமாரை கல்யாணம் செய்து கொள் என்று கட்டாயப்படுத்தியதும் சுகன்யா தான் என்று அடுக்கடுக்காக சுகன்யா மீதான குற்றசாட்டுகளை சொன்னார்கள். இதனால் பாண்டியன் குடும்பமே ஷாக் ஆனது. கோபத்தில் பழனி, சுகன்யாவை திட்டி இருந்தார். அதற்குப்பின் கோமதி, சுகன்யாவிடம் பேச வந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோமதி, இவர்கள் சொல்வது உண்மையா அரசி? என்று கேட்கிறார். சுகன்யா, இவர்கள் என் மீது வீண்பழி போடுகிறார்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை என்று சமாளிக்கிறார். உடனே அரசி, அண்ணி சொன்னது தான் உண்மை. அத்தையால் தான் என்னுடைய வாழ்க்கை சீரழிந்தது என்று சொல்கிறார். கொந்தளித்த கோமதி, சுகன்யா கன்னத்தில் பளார் பளார் என்று அடிக்கிறார். சுகன்யாவால் எதுவுமே பேச முடியவில்லை.

சீரியல் ட்ராக்:

கோமதி, என் குடும்பம் உனக்கு என்ன துரோகம் செய்தது. உனக்கு நாங்கள் நல்லது தானே நினைத்தோம் என்று மீண்டும் அடிக்கிறார். அதற்குப்பின் பாண்டியன், பழனி எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பழனி, அவளை கல்யாணம் செய்து கொண்டு வந்த நாளிலிருந்து இப்படித்தான் நடந்து கொள்கிறார். என்னிடம் எப்போதுமே சண்டை வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார். இரவு முழுவதும் என்னை தூங்க விடுவதில்லை. எதற்கெடுத்தாலும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். என்னுடைய வாழ்க்கையே போய்விட்டது என்று புலம்புகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full