தன் அம்மாவிற்காக கோமதி செய்த வேலை, பாண்டியனுக்கு தெரிய வருமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 24/10/2024

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் கடந்த வாரம் ராஜியின் அம்மா வீட்டில் சக்திக்கு திருமணமாகவில்லை என்று அவரின் அப்பா சண்டை போட்டுக் கொண்டிருந்தார். இதனால் வீட்டில் கலவரமே வெடித்தது. ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குறை சொல்லி கொண்டு இருந்தார்கள். ஒரு கட்டத்தில் ராஜியின் அப்பா அவருடைய மனைவியை அடிக்க போனார். இதை எல்லாம் பார்த்து அப்பத்தாவுக்கு நெஞ்சு வலி வந்து கீழே விழுந்தார். உடனே அவரை மொத்த குடும்பமும் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றது.

இன்னொரு பக்கம் ராஜி, வீட்டில் என்ன பிரச்சனை என்று தெரியாமல் பயத்தில் கோமதி இடம் சொல்லி புலம்பி இருந்தார். இந்த வாரம் ஹாஸ்பிடலில் அப்பத்தாவுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், மருத்துவர்கள் சரியான பதில் சொல்லாததால் எல்லோருமே பயத்தில் அழுது புலம்பி கொண்டிருந்தார்கள். இந்த விஷயம் அறிந்து வந்த பழனி ஹாஸ்பிடலிலேயே கதறி கதறி அழுதார். பின் பழனி இடம் நடந்ததை வீட்டுப் பெண்கள் சொல்ல, அவர் பயங்கரமாக கத்தி கோபப்பட்டார். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டில், குழப்பத்தில் ராஜி- கோமதி இருவருமே புலம்பி கொண்டிருந்தார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அந்த சமயம் பார்த்து வந்த கதிர் எல்லா உண்மையும் சொல்ல ராஜி- கோமதி இருவருமே வேதனைப்பட்டு அழுதார்கள். இந்த வாரம் வீட்டில் எல்லோருமே சமாதானம் செய்தும் கோமதி கேட்கவில்லை. அதேபோல் ஹாஸ்பிடலிலுமே எல்லோருமே கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், உண்மையில் பாட்டிக்கு ஒன்றுமே ஆகவில்லை. அவர் கண்விழித்து பார்த்து டாக்டரிடம், டென்ஷனில் மயங்கி விழுந்து விட்டேன். தயவு செய்து என்னை வீட்டுக்கு அனுப்பி விடாதீர்கள் என்று சொல்ல டாக்டரும் ஒத்துக் கொண்டார். பின் அனைவரும் அப்பத்தாவை பார்த்து நலம் விசாரித்தார்கள்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் தன்னுடைய அம்மாவின் நிலைமையை நினைத்து கோமதி அழுது புலம்பி இருந்ததை பார்த்து பாண்டியன் அவருக்கு ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் மருமகள் இரண்டு பேருமே மாமியார் நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்க, கடைசியில் அப்பத்தா உண்மையை சொன்னவுடன் அவர்களும் அவருடைய டிராமாவிற்கு ஒத்துக் கொண்டு நடிக்கிறார்கள். பின் தன்னுடைய கணவர்மார்களை உள்ளையே விடாமல் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு தன்னுடைய மாமியாருடன் ஜாலியாக கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:

மேலும், வீட்டிற்கு வந்த பழனி, தன் அம்மா நன்றாக இருக்கும் விஷயத்தை சொன்னவுடன் கோமதி அழுகையை நிறுத்தி விட்டார். உடனே பாண்டியன், எல்லோரும் போய் சமைக்கும் வேலையை பாருங்கள் என்று சொல்லிவிட்டு சென்று இருந்தார். இது எல்லாம் பார்த்து செந்தில்- கதிர் இருவருக்கும் கோபம் வந்தது. பின் தங்கமயில் கோமதியிடம் பேச வரும்போது அவர் கண்டுகொள்ளாமல் இருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோமதி வருத்தத்தில் இருப்பதால் சாப்பாடு ஓட்டலில் வாங்கிக் கொள்ளலாம் என்று மீனா சொல்ல, அந்த சமயம் வந்த பாண்டியன், ஓட்டலில் எல்லாம் வேண்டாம். காசு வீணாகும். வீட்டிலேயே செய்யுங்கள் என்று சொன்னார்.

சீரியல் ட்ராக்:

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் வந்தது. கடைசியில் இவர்கள் சமைக்கப் போகிறார்கள். ஆனால், அதற்கு முன்பு தங்கமயில் சமைத்து ரெடியாக வைத்திருக்கிறார். மறுநாள் காலையில் தன்னிடம் யாரும் முகம் கொடுத்து கூட பேசவில்லை என்று மீனாவிடம் வருத்தத்தில் தங்கமயில் புலம்ப, அவரும் ஆறுதல் சொல்லி அனுப்புகிறார். இன்னொரு பக்கம் கிச்சனில் விறுவிறுப்பாக கோமதி தன்னுடைய அம்மாவிற்காக சமைக்கிறார். பின் சாப்பாட்டை பழனியிடம் கொடுக்கும்போது பாண்டியன் வாங்கி பார்த்து கேட்கிறார். வேறு வழியில்லாமல் கோமதி உண்மையை உளறி விடுகிறார். இதனால் கோபத்தில் பாண்டியன் இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full