வசமாக கோமதியிடம் சிக்கிய மீனா-ராஜி, மாப்பிளை அம்மா சொன்னது - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் அரசிக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதால் வீட்டில் எல்லோருமே வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது மீனா, உனக்கு மாப்பிள்ளை பிடித்திருந்தால் மட்டும் ஓகே சொல்லு. தேவையில்லாததை பற்றி யோசிக்காதே. நாங்கள் உங்களுக்கு சப்போர்ட் செய்கிறோம் என்று ஆதரவாக இருந்தார். மறுநாள் காலையில் மாப்பிள்ளை வீட்டில் வருகிறார்கள் என்று எல்லோரும் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அரசியை மூன்று மருமகள்களுமே ரெடி செய்தார்கள். அப்போது வந்த சுகன்யா, உங்களுக்கு வேலை இருந்தால் போய் பாருங்கள். நான் அரசியை பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னார்.
உடனே மீனா, நாங்களே பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் வேறு வேலையை செய்யுங்கள் என்று அரசியிடம் சுகன்யாவை நெருங்கவிடாமல் பார்த்துக் கொண்டார். இதனால் சுகன்யாவிற்கு மீனா மீது பயங்கர கோபம் வந்தது. அதற்குப்பின் மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்து விட்டார்கள். மாப்பிள்ளைக்கு பாண்டியன் வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்தார்கள். அதற்குப்பின் மாப்பிள்ளை பற்றி அரசியின் அண்ணன்மார்கள் விசாரித்தார்கள். இன்னொரு பக்கம் அரசி இடம் கோமதி, தயவுசெய்து எந்த பிரச்சினையும் செய்யாதே. இந்த திருமணத்திற்கு சம்மதம் சொல் என்று ரொம்ப எமோஷனலாக பேசிக் கொண்டிருந்தார். அதற்கு பின் அரசியை அழைத்துக் கொண்டு வந்தார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோடில் அரசியை பார்த்தவுடன் மாப்பிள்ளைக்கு பிடித்து விட்டது. அவர் அரசியிடம் பேசி இருந்தார். ஆனால், அரசி எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கிறார். பின் தனியாக அழைத்து சென்று பேச சொல்கிறார்கள். பின் அரசியை மீனா அனுப்பி வைக்கிறார். மாப்பிள்ளை எவ்வளவு பேசியுமே வாயை திறந்து ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாகவே நிற்கிறார் அரசி. பின் எங்களுக்கு இந்த கல்யாணத்திற்கு சம்மதம் என்று மாப்பிள்ளை வீட்டில் சொல்கிறார்கள். உடனே மாப்பிள்ளை அம்மா, நிச்சயதார்த்தம் செய்துவிடலாம் என்று சொன்னவுடன் பாண்டியனின் மொத்த குடும்பமும் ஷாக் ஆகிறது.
இன்றைய எபிசோட்:
உடனே மாப்பிளை அம்மா, உங்களுக்கு நிச்சயதார்த்தம் தெரியாதா? என்று கேட்க, எங்களுக்கும் சம்மதம் என்றார் பாண்டியன். அதற்குப்பின் ரெண்டே மாதத்தில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நிச்சயதார்த்த ஓலையை படித்தார்கள். எதுவும் சொல்லாமல் அரசி அமைதியாக இருந்தார். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு அரசியும் மூன்று அண்ணிமார்களும் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது மீனா, கல்யாணம் முக்கியம்தான். ஆனால், உனக்கு படிப்பு முக்கியம். எப்படியாவது மாப்பிள்ளை இடம் நாங்கள் பேசி உன்னுடைய படிப்பிற்கு ஏற்பாடு செய்கிறோம். நீ எதைப் பற்றியும் கவலைப்படாதே. நாங்கள் இருக்கிறோம் என்று ஆறுதல் சொன்னார்.
சீரியல் ட்ராக்:
இன்றைய எபிசோடில் ராஜி- மீனா இருவருமே எப்படியாவது கோயிலில் மாப்பிள்ளை இடம் அரசி படிப்புக்கு சம்மதம் வாங்கி விட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே கோமதி வந்து விடுகிறார். பின் மூவருமே சேர்ந்து கோவிலுக்கு செல்கிறார்கள். மாப்பிள்ளையும் தன்னுடைய அம்மாவுடன் கோயிலுக்கு வந்து விடுகிறார். என்ன நடக்குமோ என்று கோமதி மீனா புலம்பி கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் கோமதியை ராஜி சமாளிக்கிறார். இன்னொரு பக்கம் மீனா, மாப்பிள்ளையும் அவர் அம்மாவையும் சமாளிக்கிறார். இருவரையும் சந்திக்க விடாமலும், அரசியை படிக்க விஷயம் எப்படியாவது மாப்பிள்ளை இடம் சொல்ல வேண்டும் என்றும் மீனா நினைக்கிறார்.
https://www.youtube.com/watch?v=HuIoBA-rM4Y
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அரசியின் படிப்பு விஷயமாக பேசுவதற்காக மாப்பிள்ளையை மீனா கோயிலுக்கு வர வைக்கிறார். கோயிலுக்கு மீனா, ராஜி உடன் கோமதி வந்து விடுகிறார்.
மாப்பிள்ளையுடைய அம்மாவையும் கோமதியும் சந்திக்க விடாமல் மீனா- ராஜி இருவரும் தடுக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இருவருமே சந்தித்து விடுகிறார்கள். அப்போது மாப்பிளையை மீனா, கோயிலுக்கு வர சொன்ன விஷயத்தை சொன்னவுடன் கோமதி கோபப்படுகிறார். அதற்குப்பின் கோமதி, கல்யாணத்தை நிறுத்த திட்டம் போடுகிறீர்களா? உங்களுடைய எண்ணம் தான் என்ன? என்று கேட்கிறார். இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்கள்.