ஹாஸ்பிடலில் தன் அம்மாவுடன் இருக்கும் கோமதி, பாண்டியனுக்கு தெரிய வருமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 28/10/2024

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் கடந்த வாரம் ராஜியின் அம்மா வீட்டில் நடந்த சண்டையில் அப்பத்தாவுக்கு நெஞ்சு வலி வந்ததால் ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணார்கள். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டில் குழப்பத்தில் ராஜி- கோமதி இருவருமே புலம்பி கொண்டிருந்தார்கள். அந்த சமயம் பார்த்து வந்த கதிர் எல்லா உண்மையும் சொல்ல இருவருமே வேதனைப்பட்டு அழுதார்கள். அதேபோல் ஹாஸ்பிடலிலுமே எல்லோருமே கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

அதோடு உண்மையில் பாட்டிக்கு ஒன்றுமே ஆகவில்லை. தன்னுடைய அம்மாவின் நிலைமையை நினைத்து கோமதி அழுது புலம்பி இருந்ததை பார்த்து பாண்டியன் அவருக்கு ஆறுதல் சொன்னார். ஆனால், அப்பத்தாவிற்கு ஒன்னும் ஆகவில்லை. பின் அப்பத்தா இந்த உண்மையை மருமகள்களிடம் சொல்ல, அவர்களும் டிராமாவிற்கு ஒத்துக் கொண்டு நடிக்கிறார்கள். மேலும், வீட்டிற்கு வந்த பழனி, தன் அம்மா நன்றாக இருக்கும் விஷயத்தை சொன்னவுடன் கோமதி ஆறுதல் அடைந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இந்த வாரம் தன்னிடம் யாரும் முகம் கொடுத்து கூட பேசவில்லை என்று மீனாவிடம் வருத்தப்பட்டு தங்கமயில் புலம்ப, அவரும் ஆறுதல் சொல்லி அனுப்பி இருந்தார். இன்னொரு பக்கம் கிச்சனில் விறுவிறுப்பாக கோமதி தன்னுடைய அம்மாவிற்காக சமைத்தார். பின் சாப்பாட்டை பழனியிடம் கொடுக்கும்போது பாண்டியன் வாங்கி பார்த்து விட்டார். வேறு வழியில்லாமல் கோமதி உண்மையை சொல்ல, பாண்டியன் எதுவும் சொல்லாமல் கொடுத்து விடு என்கிறார். பின் பழனியும் தன்னுடைய அம்மாவிடம் உன் மகள் செய்த சாப்பாடு என்று சொன்னவுடன் அவரும் சந்தோஷத்தில் சாப்பிட்டு தன் மகளை புகழ்ந்து தள்ளி இருந்தார்.

கடந்த வாரம் எபிசோட்:

அதை வீடியோவாக எடுத்து கோமதி இடம் பழனி காண்பித்தார். அதை பார்த்து கோமதி ரொம்ப சந்தோஷப்பட்டு அழுதார். பின் தன் அம்மாவை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று சொல்ல, மகன்கள் எல்லோரும் சேர்ந்து திட்டம் போட்டார்கள். பின் ராஜி வீட்டில் இருந்து யாருமே ஹாஸ்பிடலுக்கு வரக்கூடாது. அதற்கு நீங்கள் தான் பொறுப்பு என்று பழனி இடம் வேலையை ஒப்படைத்தார்கள். அவரும் வீட்டிற்கு சென்று தன் அண்ணன்களிடம் பேச்சிக் கொடுத்துக் கொண்டே இருந்தார்.

சீரியல் ட்ராக்:

மேலும், சக்திக்கு பெண் பார்ப்பதாக சொல்லி தன் அண்ணன்களை எங்கும் போக விடாமல் பழனி தடுத்து நிறுத்தி இருந்தார். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலுக்கு போக சொல்லி கதிர் சொல்ல, ஹாஸ்பிடலுக்கு கோமதி- ராஜி இருவருமே போனார்கள். தன் அம்மாவை பார்த்து கோமதி ஆனந்தத்தில் அழுது புலம்பி இருந்தார். ஆனால், ராஜி பேசியும் அவருடைய அம்மா முகம் கொடுத்து கூட பேசவில்லை. அவர் அந்த இடத்தை விட்டு சென்று விட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோமதி, தன்னுடைய அம்மாவிடம் மனம் விட்டு பேசி கொண்டிருக்கிறார். ஆனால், தன் அம்மா பேசாத கவலையில் ராஜூ இருக்கிறார். கோமதி பேச சொல்லியும் வடிவு பேச மறுத்து விட்டார். இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த பாண்டியன், எங்கே கோமதி என்று கேட்க? தங்கமயில்- மீனா ஏதேதோ காரணத்தை சொல்கிறார்கள். கடைசியில் பாண்டியன் எதுவும் பேசாமல் அமைதியாக சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் பெண் வீட்டார் வருவார்கள் என்று பழனியின் அண்ணன்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்களுக்கு கோபம் வந்து ஹாஸ்பிடலுக்கு போகலாம் என்று நினைக்கிறார்கள். பின் கோமதியும் தன்னுடைய கணவர் வந்து விடுவார் என்று கிளம்ப பார்க்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full