ஹாஸ்பிடலில் இருக்கும் தன் அம்மாவிற்காக கோமதி செய்த வேலை, பாண்டியன் சொன்ன வார்த்தை-பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 20/10/2024

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் தங்கமயில் பண விஷயத்தில் தவறு செய்ததை மனதில் வைத்துக் கொண்டு கோமதி அவரிடம் வம்பு இழுத்து பேசுகிறார். அதற்குப் பின் எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். ஆனால், தங்கமயிலை யாருமே கூப்பிடவில்லை. இதை நினைத்து அவர் ரொம்ப வருத்தப்பட்டார். அதற்குப்பின், மீனா- ராஜி இதுவருமே தங்கமயிலை சாப்பிட கூப்பிட, அவர் வரவே இல்லை. அதற்குப்பின் சரவணன் இடம் மீனா சாப்பாடு கொடுத்து அனுப்பி இருந்தார்.
ஆனால், அவர் பெரிதாக வருத்தப்படாமல் சாப்பாட்டை மேஜை மீது வைத்து சாப்பிடு என்று சொல்லிவிட்டு சென்றார்.

இதெல்லாம் பார்த்து தங்கமயில், ரொம்பவே கவலைப்பட்டார். இன்னொரு பக்கம் சித்தப்பு, தன்னுடைய மாமா செய்வது ரொம்ப தவறு என்று கோமதி இடம் அறிவுரை சொன்னார். இதனால் கோமதியும் பாண்டியனிடம் கதிரை அடித்ததை பற்றி பேசி அறிவுரை சொன்னார். சரவணன் தன்னிடம் எதுவும் பேசவில்லை என்ற வருத்தத்தில் சாப்பிடாமல் தங்கமயில் இருந்தார். அப்போது உள்ளே வந்த சரவணன், சாப்பாடு வீணாகப் போகிறது என்று கிச்சனில் கொண்டு போய் சாப்பிடுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இதைப் பார்த்து தங்கமயிலுக்கு இன்னும் கோபம் அதிகமானது. மறுநாள் காலையில் தங்கமயில், கோமதியிடம் பேச போனார். ஆனால், அவர் முகம் கொடுத்து கூட பேசவில்லை. பின் தங்கமயில், சரவணன் செய்த வேலையை மீனாவிடம் சொல்ல, மீனா இதை சரவணன் இடம் கேட்டார். ஆனால், அவர் மொக்கையாக ஒரு பதிலை சொன்னார். பின் கிச்சனில் சரவணன் செய்த வேலையை மீனா சொல்ல, என் மகன் சரியாகத்தான் செய்திருக்கிறான் என்று கோமதி சொன்னார்.

நேற்று எபிசோட்:

இதையெல்லாம் கேட்டு தங்கமயில் வருத்தப்பட்டு கொண்டிருந்தார். நேற்று எபிசோடில் கிச்சனில் மாமியாருக்கு உதவி செய்வதற்காக தங்கமயில் வந்தார். ஆனால், வழக்கம் போல் கோமதி அவரை நக்கலாக பேசி அனுப்பி விட்டார். இன்னொரு பக்கம் ராஜியின் வீட்டில் சண்டை நடந்தது. சக்திக்கு திருமணமாகவில்லை என்று அவரின் அப்பா சண்டை போட்டுக் கொண்டிருந்தார். இதனால் வீட்டில் கலவரமே வெடித்தது. ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குறை சொல்லி கொண்டு இருந்தார்கள்.

சீரியல் ட்ராக் :

கடைசியில் ராஜியின் அப்பா, சக்திக்கு திருமணம் நான் செய்து வைக்கிறேன் என்று வாக்கு கொடுத்தார். இருந்தாலுமே, அவருடைய தம்பி ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் பெண்கள் எல்லோருமே கோபப்பட்டு பேச, ராஜியின் அப்பா அவருடைய மனைவியை அடிக்க போனார். அப்போது அப்பத்தாவுக்கு நெஞ்சு வலி வந்து கீழே விழுந்தார். உடனே அவரை மொத்த குடும்பமும் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றது. இன்னொரு பக்கம் ராஜி, வீட்டில் என்ன பிரச்சனை என்று தெரியாமல் பயத்தில் கோமதி இடம் சொல்லி புலம்பி இருந்தார்.

https://www.youtube.com/watch?v=RZdaUxK3tEo

சீரியல் ப்ரோமோ:

இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில், அப்பத்தா நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். இதனால் மொத்த குடும்பம் சந்தோஷப்படுகிறது. கோமதி தன்னுடைய அம்மாவிற்காக ஆசையாக சமைத்து தன்னுடைய தம்பியிடம் கொடுக்கிறார். இதை பார்த்த பாண்டியன், என்ன? யாருக்கு? என்று கேட்க பயத்தில் கோமதி உண்மையை உளறி விடுகிறார். உடனே அவர், உங்கள் அண்ணன் மீது தான் எனக்கு கோபம். உன் அம்மா மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. சமைத்து நீ கொடு என்று சொல்லிவிட்டு செல்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full