பாண்டியன் பிறந்த நாளுக்காக தங்கமயில் போடும் பிளான், மீனா என்ன செய்யப் போகிறார்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் ராஜி டியூசன் எடுக்கும் விஷயம் பாண்டியன் குடும்பத்திற்கு தெரிந்து பயங்கர கலவரம் ஆகி இருந்தது. இதனால் மொத்த குடும்பமே ராஜி-மீனாவிடம் பேசாமல் இருந்தார்கள். கோமதியிடம் ராஜி, மீனா இருவருமே மன்னிப்பு கேட்டும் அவர் முகம் கொடுத்து கூட பேசாமல் திட்டிக் கொண்டிருந்தார். பின் நகையை பேங்கில் இருந்து வீட்டுக்கு கோமதி எடுத்து வந்து ராஜி நகையை தன் அண்ணன்களிடம் கொடுத்து விட்டார். அதோடு மற்றவர்களின் நகையை பேங்கில் வைக்கலாம் என்றவுடன் தங்கமயில் தடுமாறி இருந்தார்.
பாண்டியன், ராஜி-மீனாவிடம் பேசுவதில்லை. அவர்கள் எது கொடுத்தாலும் வாங்குவதில்லை. மேலும், வீட்டில் ராஜி-கதிர், செந்தில்- மீனா இடையே சண்டை வந்து நான்கு பேரும் பேசிக் கொள்ளாமல் இருக்கிறார்கள். ராஜி- மீனா இருவருமே தன்னுடைய மாமியாரிடம் பேச சொல்லி கட்டாயப் படுத்தி இருந்தார்கள். ஆனால், அவர் முடியாது என்று சொல்ல, நாங்கள் வீட்டை விட்டு போகட்டுமா? என்று கேட்டார்கள். பின் தங்கமயில், கோமதியை சமாதானம் செய்ய அவரும் மன்னித்து விட்டார். தங்கமயில் தன்னுடைய அம்மாவிடம் வீட்டில் நடந்ததை சொல்லிக் கொண்டிருக்க அவர், எதற்கு அவர்களை சேர்த்து வைத்தாய்? அவர்கள் ஒன்றாக இருந்தால் உன்னை தனியாக்கி விடுவார்கள் என்று அவருக்கு தேவையில்லாதது எல்லாம் சொல்லிக் கொடுத்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இந்த வாரம் ராஜி, மீனா, கோமதி மூவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். தங்கமயில் வந்த உடனே அவர்கள் அமைதியானால் தங்க மயிலுக்கு தன் அம்மா சொன்னதை நினைத்து வருத்தப்பட்டார். இன்னொரு பக்கம் கோமதியின் அண்ணன் வீட்டில் ராஜி ஓடிப்போன விஷயத்தை வைத்து பெண் கொடுக்கவில்லை என்று சொன்னவுடன் ராஜியும், அவருடைய அம்மாவையும் தான் திட்டிக் கொண்டிருந்தார்கள். இதுதான் சந்தர்ப்பம் என்று அவருடைய தம்பி ஏத்தி விட்டார். மீனா மன்னிப்பு கேட்டும் செந்தில் மனம் இறங்கவில்லை. ராஜி- மீனா வெளியில் படுத்ததை பார்த்து கோமதி தூங்க வெளியே வந்தார். இருவரும் வருத்தப்பட்டு தன்னுடைய மாமியாரின் மடியிலேயே படுத்து அழுதார்கள்.
சீரியல் கதை:
மறுநாள் காலையில் வேலைக்கு கிளம்பும் போது மீனா தன்னுடைய மாமனாரிடம் பேச, அவர் முகம் கொடுத்து கூட பேசாததால் வருத்தப்பட்டு அழுதுகொண்டே சென்றார் மீனா. நேற்று எபிசோடில், பாண்டியன் வருவதை பார்த்து ராஜி அந்த இடத்திலிருந்து கிளம்பி விட்டார். இதை கவனித்த கோமதி, எதற்காக இப்படி எல்லாம் நடந்து கொள்கிறீர்கள் என்று பாண்டியன் இடம் பேச, அவரும் தான் செய்த தவறை உணர்கிறார். கடைக்கு வந்த மீனா, நான் செய்தது தவறுதான். மன்னித்து விடுங்கள் என்று ரொம்ப வருத்தப்பட்டு அழுகிறார். இதனால் பாண்டியன் மனமும் மாறி மீனாவை மன்னித்து விடுகிறார்.
நேற்று எபிசோட்:
பின் மீனாவை வேலைக்கு கொண்டு போய் விட சொல்லி செந்திலிடம் சொல்ல, அவரும் மீனாவை அழைத்து செல்ல கேட்கிறார். ஆனால், மீனா கோபத்தில் வேண்டாம் என்று சொல்லி கிளம்புகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில், கல்லூரிக்கு போகும் வழியில் கதிர்- ராஜி இருவருமே மறைமுகமாக பேசிக்கொள்கிறார்கள். அதற்கு அவர்களுடைய நண்பர்கள், நீங்கள் நேரடியாகவே பேசிக் கொள்ள வேண்டியது தானே என்று சொல்ல ராஜி திட்டிவிட்டு அமைதியாகி விடுகிறார். வீட்டில் தன்னுடைய கணவரின் பிறந்தநாளை குறித்து கோமதி அவரின் தம்பியிடம் பேசிக் கொண்டிருக்கிற, இதைக் கேட்ட தங்கமயில் சந்தோசப்பட்டு தன்னுடைய அம்மாவிடம் போனில் செல்கிறார்.
இன்றைய எபிசோட்:
உடனே அவர், தேவையில்லாத வேலை செய்யாதே. உன்னுடைய புருஷனிடம் இருந்து சம்பளத்தை வாங்கும் வழியை பாரு என்று சொல்கிறார். மீனா- ராஜி இருவருமே பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது ராஜு, நான் மீண்டும் டியூஷன் எடுக்க போகிறேன் என்று சொன்னவுடன் மீனா அதிர்ச்சியாகி வீட்டில் சொல்லிவிடு என்று அறிவுரை சொல்கிறார். அந்த சமயம் வந்த தங்கமயில், பாண்டியனின் பிறந்தநாளை பற்றி சொல்கிறார். கடைசியில் பாண்டியன் வீட்டிற்கு வருகிறார். அவர் வந்தவுடன் ராஜி- மீனா என்று பெயரை சொன்னவுடன் இருவருமே சந்தோஷப்படுகிறார்கள். அத்துடன் சீரியல் முடிந்தது.