பாண்டியனிடம் அப்பத்தா சொன்ன வார்த்தை, அரசியை நினைத்து புலம்பும் கோமதி- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 13/8/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் முத்துவேல், வடிவு இருவருமே அரசியை அழைத்து போவதற்காக பாண்டியன் வீட்டிற்கு வெளியே வந்து கூப்பிட்டார்கள். சந்தோஷத்தில் ராஜி, தன்னுடைய அம்மாவை உள்ளே கூப்பிட்டார். அதற்கு வடிவு, உனக்கு விருப்பம் இல்லாமல் இந்த கல்யாணம் நடந்தது. உன்னை எங்களுடன் அழைத்து செல்ல வந்தேன். நம்முடைய வீட்டிற்கே வந்துவிடு என்று சொன்னார். இதனால் ராஜியால் எதுவுமே பேச முடியவில்லை. இது எல்லாம் கேட்டு கோமதி. மீனா எல்லோருமே ஷாக் ஆகி இருந்தார்கள். பின் பாண்டியனும் எதுவும் பேச முடியாமல் அமைதியாக சென்று விட்டார்.

அதற்குப்பின் ராஜி, கதிரிடம் கேட்டார். அதற்கு கதிர், உன்னுடைய விருப்பம் என்று சொன்னார். அதற்குப்பின் வெளியே வந்த ராஜி, இது எனக்கு விருப்பம் இல்லாமல் நடந்த கல்யாணம்தான். இருந்தாலும் கதிர் என்னை முறைப்படி கல்யாணம் செய்து கொண்டார். எங்களுடைய திருமணமும் ரிஜிஸ்டர் செய்திருக்கிறது. என்னை நன்றாக தான் பார்த்துக் கொள்கிறார்கள். என்னால் வர முடியாது என்று சொன்னார். இதை கேட்டு கோமதி-மீனா சந்தோசப்பட்டார்கள். வடிவு- முத்துவேல் இருவருமே ஷாக் ஆனார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோட்டில் ராஜி, கதிர் என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறான். என்னுடைய கனவு எல்லாம் நிறைவேற்றுகிறான். நான் இந்த வீட்டை விட்டு வரமாட்டேன் என்று சொன்னார். இதை கேட்டு வடிவு-முத்துவேல்எதுவுமே பேசாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள். ராஜி பேசியதை கேட்டு பாண்டியன் குடும்பமே சந்தோஷப்பட்டது. கதிர் சந்தோஷத்தில் யாருக்கும் தெரியாமல் ரூமுக்குள் நடனமாடினார். இதை பார்த்த மீனா சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் மீனா, ராஜி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ராஜி, கதிர் தனக்காக எதுவும் பேசவில்லை என்று வருத்தப்பட்டார். உடனே ராஜி, கதிர் ரொம்ப சந்தோஷப்பட்டான். அவனுக்கும் உள்ளுக்குள் உன் மீது பாசம் இருக்கிறது என்று சொன்னார்.

நேற்று எபிசோட்:

இன்னொரு பக்கம் முத்துவேல் வீட்டில் எல்லோருமே ராஜி பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். சக்திவேல், ராஜியை கட்டாயப்படுத்தியாவது இந்த வீட்டிற்கு அழைத்து வந்துவிடலாம் என்று சொன்னார். இதைக் கேட்ட முத்துவேல், இந்த விஷயத்தை இதோடு விடுங்கள். ராஜி அங்கேயே இருக்கட்டும் என்று சொன்னார். இதனால் சக்திவேல் பயங்கரமாக கோபப்பட்டார். இன்னொரு பக்கம் பாண்டியன், குமார் மீது கொடுத்த கேஸ் கோர்ட்டுக்கு வருவதால் அரசி அழைத்து வர சொன்னார். அதனால் நாளை கோர்ட்டுக்கு போகலாம் என்று சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோர்ட்டில் குமாரின் கேஸ் நடக்க இருப்பதால் அரசியை அழைத்து போகணும் என்று கோமதி ரொம்பவே மனமடைந்து வேதனையில் இருக்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே கோமதிக்கு ஆறுதல் செய்தும் அவர் கேட்கவில்லை. பின் வீட்டில் உள்ள எல்லோருமே அரசிக்கு துணையாக பேசுகிறார் அதற்கு அரசி, நானே பார்த்துக்கொள்கிறேன். எனக்கு எந்த பயமும் இல்லை என்று தைரியமாக பேசுகிறார். இன்னொரு பக்கம் முத்துவேல் குடும்பத்தில் எல்லோருமே குமார் மீண்டும் ஜெயிலுக்குப் போய் விடுவானா? என்று வருத்தப்பட்டு புலம்பி கொண்டிருக்கிறார்கள்.

சீரியல் 'ட்ராக்:

சக்திவேல் வழக்கம் போல் தன் அண்ணனையும், ராஜியையும் ஏளனமாக பேசிக் கொண்டிருக்கிறார், கோபத்தில் முத்துவேல், குமார் இனி ஜெயிலுக்கு போக மாட்டான். அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று செல்கிறார். இன்னொரு பக்கம் பாண்டியனை சந்தித்த அப்பத்தா, தயவு செய்து கேசை வாபஸ் வாங்கி விடுங்கள். வீட்டில் ஒரே பிரச்சினையாக இருக்கிறது என்று சொல்கிறார். அதற்கு பாண்டியன், என் மகன் தவறு செய்திருந்தாலும் நான் தண்டனை தான் வாங்கிக் கொடுப்பேன். குமாருக்கு நீங்கள் புத்திமதி சொல்லி வளர்த்திருக்கணும். இனிமேல் என்னால் எதுவும் செய்ய முடியாது என்று அங்கிருந்து கிளம்பி விடுகிறார். பின் வீட்டிற்கு வந்த பாண்டியன், அரசியை கோர்ட்டுக்கு கிளம்ப சொல்கிறார். புலம்பினாலும் கோமதி கோர்ட்டுக்கு செல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full