மீனா செய்த வேலையால் சக்திவேல் வீட்டில் நடக்கும் ரெய்டு, செந்தில் சொன்ன வார்த்தை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் சக்திவேல், குமார் அம்மா, அப்பத்தா எல்லோருமே என்ன ஆனது? என்று கேட்க, தவறி சாம்பார் மேலே கொட்டியது என்று ஏதே சொல்லி சமாளித்தார். அதற்குப்பின் சக்திவேல், குமாரை பயங்கரமாக கிண்டல் செய்தார். இன்னொரு பக்கம் கதிர், தேர்வு ரிசல்ட் வருவதால் வீட்டில் எல்லோரும் அதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் நிலத்தை விற்று லட்சக்கணக்கில் கட்டு கட்டாக முத்துவேல்- சக்திவேல் இருவரும் பணத்தை வீட்டில் வைத்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது வந்த சுகன்யா, பணத்தை பார்த்து வாயை பிளந்து பேசி இருந்தார். பின் பழனியை எப்படியாவது இந்த வீட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று முத்துவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் கதிர், ராஜி இருவருமே பாண்டியனின் கடைக்கு போனார்கள். அங்கு ராஜி, கடையில் வியாபாரம் பார்ப்பதால் பாண்டியன், அது எல்லாம். பரீட்சைக்கு படி என்றார். உடனே ராஜி, உங்களுக்கு தான் போலீஸ் வேலை பிடிக்காது என்றவுடன் பாண்டியன் வருத்தப்பட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் ராஜி, போலீஸ் வேலைக்கு படிப்பதற்கு பாண்டியன் எந்த ஒரு தடையுமே போடவில்லை அமைதியாகவே இருந்தார். இன்னொரு பக்கம் சக்திவேல் வீட்டில் கட்டு கட்டாக பணம் இருப்பதை பார்த்துவிட்டு வந்த சுகன்யா, பழனி இடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். இதையெல்லாம் கேட்ட மீனா, பழனிக்கு சப்போர்ட் செய்து பேசினார். இதனால் மீனாவை, சுகன்யா திட்டினார். அதற்குப்பின் மீனா, சுகன்யாவிடம் போட்டு வாங்கி சக்திவேல் வீட்டில் என்னென்ன இருக்கிறது என்று எல்லாமே தெரிந்து கொண்டார். இதனால் மீனா யாருக்கும் தெரியாமல் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு போன் செய்து சொல்லி விட்டார்.
நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் மீனாவின் அப்பா, செந்திலை சந்தித்து அரசாங்க வேலைக்கு பணம் கட்டுவது தொடர்பாக விசாரித்தார். செந்திலும் ரெடி பண்ணுகிறேன் என்றார். இன்னொரு பக்கம் தங்கமயில், சரவணனை நினைத்து ரொம்ப வேதனைப்பட்டு கொண்டிருந்தார். தங்கமயில், சரவணனுக்கு ஃபோன் செய்துமே அவர் எடுக்கவே இல்லை. அதற்குப்பின் மீனாவிடம் போன் செய்து தங்கமயில் பேசி இருந்தார். பின் மீனா, சரவணன் இடம் போன் கொடுத்து பேச சொன்னார். ஆனால், அவர் பேசாமல் என்னுடைய போனில் பேசுகிறேன் என்று கொடுத்து விட்டார். இதனால் மீனாவிற்கு சரவணன் மீது சந்தேகம் வந்தது.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசொட்டில் பாண்டியன், அரசியின் திருமணத்துக்காக கார் வாங்குவதற்காக பணத்தை ஏற்பாடு செய்து வைத்திருந்தார். அதை செந்தில் இடம் கொடுத்து பேங்கில் போட சொல்கிறார். செந்தில், அந்த பணத்தை வைத்து தன்னுடைய மாமனாரிடம் கொடுக்க நினைக்கிறார். பின் இதைப்பற்றி மீனாவிடம் செந்தில் சொல்கிறார். உடனே மீனா, வேண்டாம். பேங்கில் போடுங்கள். லஞ்சம் கொடுத்து வேலை வாங்க கூடாது என்று அறிவுரை சொல்கிறார். இன்னொரு பக்கம் வீட்டில் பணத்தை வைத்துக்கொண்டு குமார்-சக்திவேல் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வருமானவரித்துறை அதிகாரிகள் சக்திவேல் வீட்டில் சோதனை செய்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
சக்திவேல் எடுத்து சொல்லியுமே அவர்கள் கேட்கவில்லை. வீட்டில் இருந்த எல்லா பணத்தையும் எடுத்துக் கொண்டு, நீங்கள் எதுவாக இருந்தாலும் ஆபீஸில் வந்து பேசுங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பிறார்கள். அதற்குப்பின் இதை பற்றி முத்துவேலிடம் சக்திவேல் சொல்கிறார். பின் சக்திவேல், பாண்டியன் மகள் வந்த நேரம் தான் இப்படி எல்லாம் நடக்கிறது என்று அரசியை திட்டுகிறார். அதற்குப்பின் முத்துவேலுக்கு சம்பந்தப்பட்ட எல்லா இடங்களின் மீது ரெயிடு நடத்துவதாக தகவல் கிடைக்கிறது. இதனால் பதறி எடுத்துக் கொண்டு சக்திவேல், குமார் வருகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது