மீண்டும் மீண்டும் அவமானப்படும் மீனா, தன் மாமனாரின் கனவை நிறைவேற்ற போராடும் செந்தில்- பரபரப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 21/7/2024

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் இருப்பது “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2”. இந்த சீரியலின் முதல் பாகம் அண்ணன், தம்பிகளுக்கு இடையேயான பாசக்கதையை கொண்டது. கடந்த ஆண்டு தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகம் நிறைவடைந்தது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2- தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது. இரண்டாவது சீசனில் அப்பா- மகன்களுக்கு இடையேயான உறவை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும், முதல் சீசனில் அண்ணனாக நடித்த ஸ்டாலின் தற்போது அப்பாவாக நடிக்கிறார். ஸ்டாலினுக்கு மனைவியாக நிரோஷா நடிக்கிறார். இவர்களுடைய மகன்களாக விஜே கதிர், வசந்த், ஆகாஷ் நடிக்கிறார்கள். சீரியலில் தந்தை பாண்டியனுக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவர் பிள்ளைகளை தன்னுடைய கட்டுக்கோப்பில் வளர்த்து வருகிறார். இதனால் இவர் பெருமிதமாக இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் பாண்டியனின் இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலையில் எதிர்பாராத விதமாக காதல் திருமணம் நடந்து விடுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இதனால் பாண்டியன் ரொம்பவே மனம் உடைந்து விடுகிறார். பின் மூத்த மகன் சரவணனுக்கு எப்படியோ போராடி தங்கமயிலை திருமணம் செய்து வைத்து விடுகிறார். பாண்டியன் வீட்டுக்கு வந்ததிலிருந்து தங்கமயில் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறார். இதனால் தங்கமயில் பாண்டியன் வீட்டிற்கு வந்ததிலிருந்தே கலாட்டா கலவரங்களாக இருக்கிறது. அவர் செய்யும் வேலைகள் எதுவுமே மற்ற மருமகளுக்கும், மாமியாருக்குமே பிடிக்கவில்லை.

சீரியல் ட்ராக்:

குறிப்பாக சாப்பாடு எடுத்துக்கொண்டு கடைக்கு செல்வது மாமியாருக்கு பிடிக்கவில்லை. இதை அவர் மாமியாருக்கு சொல்லியும் தங்கமயில் கேட்கவில்லை. அது மட்டும் இல்லாமல் இவர் மாமனாரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று வீட்டில் உள்ள மற்றவர்களை போட்டுக் கொடுத்துக் கொண்டு தேவையில்லாத வேலைகளை செய்கிறார். இதனால் வீட்டில் பல கலவரங்கள் வருகிறது. இதனால் இந்த சீரியல் ஆரம்பத்த நாளை விட தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோடில், தங்கமயில், தன்னுடைய கணவர் எதையும் கண்டு கொள்ளவில்லையே என்று டிராமா செய்து அவரை தன் பக்கம் இழுக்க பார்க்கிறார். சரவணனும் நம்பி, உனக்கு நான் என்ன செய்தால் நம்புவாய் என்று கேட்பதற்கு ஹனிமூன் கூட்டிட்டு போங்க என்று சொல்கிறார். சரவணனும் எப்படியாவது வீட்டில் பேச வேண்டும் என்று நினைக்கிறார். இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் செந்தில் கதாபாத்திரத்தில் நடித்திருந்த வசந்த் விலகி தற்போது வெங்கட் நடித்து வருகிறார். ஏற்கனவே ஹேமா, வெங்கட்டின் ஜோடி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது இவர்கள் மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

https://www.youtube.com/watch?v=_AAlX3EXm0o

சீரியல் ப்ரோமோ:

சீரியலில் மீனா தன்னுடைய அப்பாவிற்காக கை கடிகாரத்தை கிஃப்ட் ஆக வாங்கி வைத்திருக்கிறார். அதை அவர்கள் கொடுத்தும் வாங்கவில்லை. வழக்கம்போல் மீனாவின் அப்பா திட்டி அனுப்பி விடுகிறார். பின் செந்தில், தன்னுடைய மகளுக்கு அரசாங்கவேலையில் இருப்பவரை தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று மாமனார் நினைத்த கனவை நிறைவேற்ற போராடுகிறார். இதை பார்த்து மீனா சந்தோஷப்படுகிறார். இனிவரும் நாட்களில் செந்தில் தன்னுடைய மாமனாரின் கனவை நிறைவேற்றினாரா? சரவணன் ஹனிமூன் செல்வாரா? தங்கமயில் உடைய ஆசை நிறைவேறியதா? போன்ற விறுவிறுப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

behindtalkies AMP · Quick view
View full