பாண்டியனை நடு ரோட்டில் இறக்கிவிட்ட கதிர், ராஜி சொன்ன வார்த்தை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் தங்கமயில் தன் அம்மாவிற்கு ஃபோன் செய்து வீட்டில் நடக்கும் விஷயங்களை எல்லாம் சொன்னார். குறிப்பாக, கதிருக்கு பாண்டியன் லோன் வாங்கி தரும் விஷயத்தை சொன்னார். இதனால் கோபப்பட்ட தங்கமயில் அம்மா, எப்படியாவது உன் கணவனை கைக்குள் போடு. உன்னுடைய புருஷனுக்குமே நல்ல வேலை வாங்கி கொடு என்று தேவையில்லாத ஐடியா எல்லாம் கொடுத்தார். அதற்குப்பின் சரவணனிடம் தங்கமயில், கதிர் லோன் விஷயத்தைப் பற்றி சொன்னார்.
இதனால் கோபப்பட்ட சரவணன், இதில் உனக்கு என்ன பிரச்சனை. இதெல்லாம் உன்னுடைய அம்மா கொடுத்த ஐடியாவா? என்றெல்லாம் திட்டினார். தங்கமயிலால் எதுவும் பேசமுடியவில்லை. தேவை இல்லாமல் வாய் கொடுத்து மாட்டிக்கொண்டார். மறுநாள் காலையில் செந்தில் வேலைக்கு கிளம்புவதற்காக அலப்பறை செய்து கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்து பாண்டியனுக்கு கடுப்பானது. அதற்கு பின் கதிரை அழைத்த பாண்டியன், லோன் வாங்க பேங்க்கு போகலாம் என்றார். உடனே கதிர், அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை. நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்வதால் பாண்டியன் கோபப்பட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பாண்டியன், நான் சொல்வதை மட்டும் செய். ஒழுங்கு மரியாதையாக பேங்குக்கு கிளம்பு என்று சொன்னார். இதனால் கதிர் எதுவும் பேசாமல் பேங்குக்கு கிளம்பி இருந்தார். இன்னொரு பக்கம் ராஜி - மீனா இருவரும் வந்து கொண்டிருந்தார்கள். அந்த வழியாகத்தான் குமாரின் அம்மா, உன்னால் தான் இந்த பிரச்சனை. காரணம், நீ கல்யாணத்திற்கு முந்தய நாள் ஓடிப்போனதால் தான் இவ்வளவு பிரச்சனை நடந்து கொண்டிருக்கின்றது என்று உண்மை புரியாமல் ராஜியை திட்டிக் கொண்டிருந்தார். இதனால் மீனாவிடம் ராஜி, நடந்த உண்மை எல்லாம் சொன்னால் இந்த பிரச்சனை முடிந்து விடுமா? என்றெல்லாம் புலம்பி இருந்தார். அதற்கு மீனா வேண்டாம் என்று தடுத்தார்.
கடந்த வாரம் எபிசோட்:
இன்னொரு பக்கம் வரும் வழியில் பாண்டியனை பார்த்து சக்திவேல், என் மகனை ஜெயிலுக்கு அனுப்பி விட்டாய் என்று சந்தோசப்படாதே, உன்னையும் உன் குடும்பத்தையும் சும்மா விடமாட்டேன் என்றெல்லாம் சவால் விட்டார். இதை பார்த்த கதிர், சக்திவேலை அடிக்கப் போகிறார். பாண்டியன் தடுத்து நிறுத்தி, பிள்ளைகளை எப்படி வளர்க்கணும் என்று என்னை பார்த்து கற்றுக்கொள் என்று என்று திட்டிவிட்டு அங்கிருந்து சென்றார். அதற்குப்பின் பேங்கில் கதிருக்கு லோன் சம்பந்தமாக பாண்டியன் பேசி இருந்தார். அப்போது அவர்கள், என்னென்ன தேவை என்று எல்லா விஷயத்தையும் சொன்னார்கள். இதனால் பாண்டியன் சம்மதிக்க, இதை எல்லாம் பார்த்து கதிர் உள்ளுக்குள் சந்தோஷப்பட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன், கதிர் இருவருமே காரில் வந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது பாண்டியன், இந்த டிராவல்ஸ் தொழில் உனக்கு தெரியுமா? இதில் ஏதாவது நஷ்டம் அடைந்தால் நீ சமாளிப்பாயா? இந்த லோன் விவகாரம் எல்லாம் கொஞ்சம் பயமாக இருக்கிறது. உனக்கு அந்த அளவுக்கு திறமை இருக்கிறதா? இந்த தொழில் வேண்டாம் நீ மேற்கொண்டு படித்துவிட்டு வேலைக்கு போ என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். கதிர், நானே என் பிரச்சினையை பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்வதால் கோபப்பட்டு பாண்டியன் காரில் இருந்து இறங்கி நடந்தே போகிறார்.
இன்னொரு பக்கம் கோமதி, பழனி இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சுகன்யா, பழனியை வழக்கம்போல திட்டுகிறார். ஆனால், இந்த முறை பழனி பயப்படாமல் பதிலுக்கு சுகன்யாவை திட்டுகிறார்.
சீரியல் ட்ராக்:
அதுமட்டுமில்லாமல் கோமதி இடமும் சுகன்யாவை பற்றி சொல்கிறார். இதை கேட்டவுடன் கோமதி இன்னும் கொந்தளித்து சுகன்யாவை திட்டி அனுப்பி விடுகிறார். அதற்குப்பின் பாண்டியன், கதிர் செய்ததைப் பற்றி கோமதியிடம் சொல்கிறார். இதை கேட்ட கோமதி கோபப்பட்டு கதிரை திட்டிக் கொண்டிருக்கிறார். ராஜி எடுத்து சொல்லியும் கோமதி கேட்கவில்லை. அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு கதிர் வருகிறார். கதிரை பார்த்தவுடன் கோமதி கோபப்படாமல் அன்பாக விசாரிக்கிறார். அதற்குப்பின் கதிர்- ராஜி இருவருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கதிர் நடந்ததை சொல்கிறார். ராஜி எப்படியாவது கதிருக்கு உதவ வேண்டும் பார்க்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது