ராஜியின் லட்சியத்திற்காக பாண்டியனை எதிர்த்து நிற்கும் கதிர், அடுத்து என்ன ? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் பழனி நிச்சயதார்த்தம் அவரின் அண்ணன்கள் சொல்லி தான் நின்றது என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தது. இதை அறிந்த பாண்டியன் குடும்பம் ரொம்ப வருத்தப்பட்டர்கள். பின் அப்பத்தா, வேதனையில் தன் மகன்களிடம் சண்டை போட்டார். ஆனால், அதைப் பற்றி எல்லாம் அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. பின் பாண்டியன், பழனியையும் பார்த்து ஏளனமாக ராஜியின் அப்பா, சித்தப்பா இருவருமே பேசி இருந்தார்கள். அப்போது பாண்டியன், கோமதி இருவரும் ரொம்ப ஆவேசமாக சண்டை போட்டார்கள். பின் வீட்டில் எல்லோருமே நடந்ததை நினைத்து வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருந்தார்கள்.
பழனி சோகத்தில் இருப்பதால் செந்தில், சரவணன், கதிர் மூவருமே அவருக்கு பியர் வாங்கிக் கொடுத்து கவலையை மறக்கடிக்க செய்தார்கள். இன்னொரு பக்கம் வேதனையில் இருக்கும் அம்மாவிடம் அவருடைய இரண்டு மகன்கள், பழனி அங்கிருக்கும் வரை திருமணம் நடக்காது. நாங்கள் பார்த்து கொள்கிறோம். சொத்தை மூன்றாக பிரித்து வைக்கிறோம் என்றெல்லாம் சொன்னார்கள். இதனால் பாண்டியனை தனியாக சந்தித்த அப்பத்தா, பழனியை வீட்டிற்கு வர சொல்லி ரொம்ப எமோஷனலாக அழுது பேச, பாண்டியனும் மனமுடைந்தார். பின் வீட்டிற்கு வந்த பாண்டியன், பழனியை அவர் வீட்டிற்கு போக சொன்னார். ஆனால், பழனி முடியாது என்று மறுத்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
உடனே கோபத்தில் பாண்டியன், பழனியை திட்டி விட்டார். இருந்தும் பழனி, நான் எங்கும் போக மாட்டேன் இங்குதான் இருப்பேன். என்னால் உங்களை விட்டு இருக்க முடியாது என்று அழுது கொண்டே பேசி இருந்தார். வீட்டில் எல்லோருமே கண் கலங்கி பழனிக்கு சப்போர்ட் செய்தார்கள். ஆனால், பாண்டியன் யார் சொல்வதையும் கேட்கவில்லை. பின் மனம் இல்லாமல் எல்லோரிடமும் அன்பாகவும், வீட்டினுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து ரொம்ப எமோஷனலாக பேசி பழனி அங்கிருந்து கிளம்பினார். ஆனால், பாண்டியன் எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் அப்பத்தா, பழனி வீட்டிற்கு வந்து விடுவான். அவனுக்கு பிடித்த சாப்பாடு செய்து விடுங்கள் என்று தன்னுடைய மருமகளிடம் சொன்னார். உடனே அவர்கள், எப்படி பழனி இங்கே வருவான்? என்று கேட்க, நான் கோமதியின் கணவரை சந்தித்து பழனியை அனுப்பி விட சொன்னேன் என்று அப்பத்தா சொன்னார். அதற்குப் பின் பழனி வீட்டிற்கு வந்தார். அப்போது அவருடைய அண்ணன்கள், பழனியை பார்த்து நக்கலாக பேசி இங்கேதான் இருக்கணும் கிளம்பக்கூடாது என்று சொன்னார்கள். பழனிக்கு மனதே இல்லை.
சீரியல் ட்ராக்:
அவருடைய நினைப்பு முழுவதுமே பாண்டியன் வீட்டின் மேல் தான் இருக்கிறது. அப்போது மாரி, பாண்டியனிடம் அப்பத்தா சொன்ன விஷயத்தை சொன்னவுடன் பழனி, ஷாக் ஆகி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். அப்போது அண்ணன்கள் பார்த்த பெண்ணின் போட்டோ எல்லாம் காண்பித்தார். ஆனால், பழனி போட்டோ எதையும் பார்க்காமல் சோகமாகவே இருந்தார். இன்னொரு பக்கம் காம்பிடிஷன் நடப்பதால் கதிர், ராஜியை அழைத்துக் கொண்டு கடைக்கு சென்று ஷு வாங்கி தந்தார். அதை எல்லாம் பார்த்து ராஜிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
https://www.youtube.com/watch?v=4p4GPQkDMJA
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கிரவுண்டில் கதிர்- ராஜி இருவருமே ப்ராக்டிஸ் செய்து கொண்டிருக்கிறார்கள். அதை பாண்டியன் பார்த்து விடுகிறார். அப்போது அங்கு வந்த நபர், உங்கள் மருமகள் போலீசாக போகிறார். அதற்காகத்தான் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னவுடன் பாண்டியனுக்கு ரொம்ப ஷாக் ஆகிறது. பின் வீட்டில் பாண்டியன், எங்கு சென்றீர்கள்? என்று கேட்க, டியூசன் போனேன் என்று ராஜி சொல்ல, உடனே கதிர், ராஜி போலீசாக போகிறார் என்று சொல்கிறார். அதற்கு பாண்டியன், போலீசெல்லாம் தேவையில்லை என்று சொன்னவுடன் கதிர் முடியாது என்று மறுக்கிறார். பின் கோமதி, அட்வைஸ் சொல்ல, கதிர் மறுத்து அவள் விருப்பப்படி தான் நடப்பேன். அவளுடைய ஆசையை கண்டிப்பாக நான் நிறைவேற்றுவேன் என்று கதிர் சொல்லும்போது ராஜி ரொம்ப பெருமையாக நினைக்கிறார்.