கதிரின் முடிவால் வீட்டில் நடந்த கலவரம், ராஜி என்ன செய்ய போகிறார்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் பாண்டியன் குடும்பம் குலதெய்வ கோயிலுக்கு சந்தோஷமாக போனார்கள். அங்கு பாண்டியன் உடைய அக்கா, மாமா இருப்பதை பார்த்து ரொம்ப எமோஷனலாக பழைய நினைவுகளை பற்றி பாண்டியன் பேசிக்கொண்டு இருந்தார். அதற்குப் பின் பாண்டியன், தன்னுடைய மொத்த குடும்பத்தையும் அறிமுகம் செய்து வைத்தார். பின் கோயிலில் பொங்கல் வைப்பதற்கான ஏற்பாடுகளை பாண்டியன் குடும்பம் செய்தது. அப்போது தங்கமயிலின் அப்பா, அம்மா வந்தார்கள். பின் மீனாவின் அப்பா- அம்மா வந்தார்கள். அவர்களை பார்த்தவுடன் மீனா சந்தோஷத்தில் துள்ளி குதித்தார்.
ராஜி தனக்கு யாரும் வரவில்லையே என்று வருத்தப்பட, கதிர் அவருக்கு ஆறுதல் சொன்னார். பின் கோயிலில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு போட்டிகள் நடந்தது. முதல் பரிசு கிரைண்டர் என்று சொன்னார்கள். உடனே கோமதி, எப்படியாவது அதை தூக்க வேண்டும் என்று தன்னுடைய குடும்பத்திடம் சொன்னார். ஒவ்வொரு போட்டியிலும் பாண்டியன் குடும்பத்தார் கலந்து கொண்டார்கள். அதேபோல் எல்லா போட்டியிலும் பாண்டியன் குடும்பத்தினர் தான் வெற்றி பெற்றார்கள். கடைசியாக கயிறு இழுக்கும் போட்டி நடந்தது. அதிலும் பாண்டியன் குடும்பமே வெற்றி பெற்று கிரைண்டரை தூக்கி விட்டார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பின் பாண்டியன், பழனிக்கு பெண் பார்க்க சொல்லி இருந்தேன். பெண் வீட்டிற்கு வர சொல்லி இருக்கிறார்கள் என்று சொன்னவுடன் பழனிமுகம் மாறி இருந்தது. உடனே பழனி, கல்யாணம் வேண்டாம் என்று சொன்னார். ஆனால், வீட்டில் உள்ள எல்லோருமே அவரை சம்மதிக்க வைத்தார்கள். பின் ராஜி, கோயிலில் கதிருடன் எடுத்த புகைப்படத்தை எல்லாம் பார்த்து சந்தோஷப்பட்டார். அப்போது வந்த கதிர், நீ பரிட்சையில் கவனம் செலுத்து. எப்படியாவது நீ போலீஸ் ஆக வேண்டும் என்று அவருக்கு உத்வேகம் கொடுத்தார். நேற்று எபிசோட்டில் தங்கமயில், பள்ளியில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.
நேற்று எபிசோட்:
அப்போது தலைமை ஆசிரியர், இன்னும் டூப்ளிகேட் சர்டிபிகேட் தரவில்லையா? ஏன் இப்படி செய்கிறீர்கள்? சீக்கிரம் கொடுங்கள் என்று சொல்ல, தங்க மயில் ரொம்பவே பயந்தார். இன்னொரு பக்கம் பழனிக்கு பெண் பார்க்க பாண்டியன் வீட்டில் சென்றிருந்தார்கள். அப்போது பாண்டியன், தன்னுடைய குடும்பத்தையும் பழனியையும் பற்றி பெண் வீட்டில் அறிமுகம் செய்து வைத்தார். அது மட்டும் இல்லாமல் பழனியின் அண்ணன்களால் வரும் பிரச்சனையும் முன்கூட்டியே சொல்வதால் அவர்கள் எல்லாத்திற்கும் சம்மதம் சொன்னார்கள்.
இன்றைய எபிசோட்:
பின் இரண்டு வீட்டிலுமே திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார்கள். பின் பாண்டியன்- கோமதி இருவருமே பெண் வீட்டில் நடந்ததை அப்பத்தாவிடம் சொல்ல, அவர் ரொம்ப சந்தோஷப்பட்டார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜி, போலீஸ் தேர்வு எழுதினால் என்ன பிரச்சனை வருமோ? என்று மீண்டும் பயந்து கொண்டிருக்கிறார். உடனே கதிர் அவருக்கு அறிவுரை சொல்லி சப்போர்ட்டாக இருக்கிறார். இன்னொரு பக்கம் தங்கமயில், பள்ளியில் சர்டிபிகேட் கொடுக்க சொன்னதை பற்றி சரவணன் இடம் பேசுகிறார். ஆனால், சரவணன் எதையும் பெரிதாக கண்டு கொள்ளவே இல்லை.
சீரியல் ட்ராக்:
பின் ராஜி-கதிர் இருவருமே கிரவுண்டில் ஓடிக்கொண்டிருக்கிறார். இதை பார்த்த பாண்டியனுக்கு பயங்கர கோபம் வருகிறது.பின் வீட்டில் இதை பற்றி பாண்டியன் சொல்ல, கதிர்-ராஜி வருகிறார்கள். அப்போது பாண்டியன், ராஜி போலீஸ் வேலைக்கு போகக்கூடாது என்று சண்டை போடுகிறார். அதற்கு கதிர், எதுவாக இருந்தாலும் என்னிடம் பேசுங்கள். இதற்கும் ராஜிக்கும் சம்பந்தமில்லை. அவள் விருப்பப்படி போலீஸ் ஆகுவார். அதற்கு நான் உறுதுணையாக நிற்பேன் என்று பாண்டியனை எதிர்த்து பேசுகிறார். இதனால் இருவருக்கும் இடையே பயங்கரமாக வாக்குவாதம் நடக்கிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.