போலீஸ் ஸ்டேஷனுக்கு போன ராஜி-கதிர், பயத்தில் புலம்பும் தங்கமயில்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 2/12/2024

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் குழலியின் மாமியார் வீட்டுக்கு போன பாண்டியன் சண்டை போட்டார். அப்போது குழலியின் கணவர் நடந்ததை சொல்ல, பாண்டியனால் எதுவுமே பேச முடியவில்லை. குழலி தான் மொத்த குடும்பத்தையும் கொடுமைப்படுத்துகிறார் என்று தெரிந்ததும் பாண்டியன் ரொம்பவே வருத்தப்பட்டார். அதன் பின் பழனி, நடந்ததை சொல்ல வீட்டில் எல்லோருமே ஷாக் ஆனார்கள். இதை குழலியிடம் கேட்க, அவர் அழுது புலம்பி அங்கிருந்து கிளம்பி விட்டார்.

கதிர், லீவு நாளில் கூட சவாரி இருக்கிறது என்று வெளியே கிளம்பி இருந்தார். அங்கு ஒரு பெண் மற்றும் அவர் ஆண் நண்பர்கள் டூர் போக வந்தார்கள். அந்த பெண்ணை அவர் நண்பர்கள் தவறாக கண்ணோட்டத்தில் பார்த்தார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் பாண்டியன், எல்லோரையும் அழைத்து தங்கமயிலுக்கு டீச்சர் வேலைக்கு பேசி இருக்கிறேன் என்று சொன்னவுடன் சந்தோஷப்பட்டார்கள். ஆனால், தங்கமயில் மட்டும் பதறி வேலைக்கு போகவில்லை என்று தயங்கி தயங்கி சொன்னார். உடனே கோமதி, வேலைக்கு போ என்று தங்கமயிலை வேலைக்கு அனுப்புவதில் உறுதியாக இருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

மேலும், கதிர் வாடகைக்கு அழைத்து செல்லும் பெண்ணிடம் அவருடைய நண்பர்கள் தப்பாக நடக்க பேசி இருந்தார்கள். இதையெல்லாம் பார்த்து அந்த பெண் ரொம்ப பயந்தார். பின் அவர்கள் கடைக்கு போகும் போது அந்த பெண் கதிரிடம், சும்மா டூர் என்று சொன்னார்கள். ஆனால், அவர்கள் நடந்து கொள்வது எனக்கு பயமாக இருக்கிறது என்று சொல்ல, பயப்படாதீர்கள் நான் இருக்கிறேன், பார்த்துக் கொள்கிறேன் என்றார் கதிர். இன்னொரு பக்கம் குழலி, மூன்று மருமகள்களையும் வேலை வாங்கிக்கொண்டு இருந்தார்.

கடந்த வாரம் எபிசோட்:

இதை பார்த்து கோமதிக்கு பயங்கர கோபம் வந்து, உன் வீட்டிற்கு கிளம்பு என்றார். அதற்கு குழலி, போக முடியாது, இங்கேதான் இருப்பேன் என்று என்றார். பின் பாண்டியன், அறிவுரை சொல்லியும் குழலி கேட்கவில்லை. அந்த சமயம் பார்த்து குழலியின் கணவர் வீட்டிற்கு வந்தார். கோபத்தில் கோமதி, குழலியை அறைந்து, அறிவுரை சொல்லி கிளம்பு சொல்ல, அவரால் எதுவுமே பேச முடியவில்லை. தன்னுடைய கணவருடன் வீட்டிற்கு சென்றார். இதையெல்லாம் பார்த்து மூன்று மருமகள்கள் ஷாக் ஆகி இருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கதிர், சவாரியில் வந்த அந்த பெண்ணிடம் அவர் ஆண் நண்பர்கள் தவறாக நடக்க பார்க்கிறார்கள். உடனே கதிர், ஏதோ காரணத்தை சொல்லி அவர்களை இறக்கிவிட்டு அந்த பெண்ணை பத்திரமாக அவருடைய வீட்டில் இறக்கிவிட்டு வருகிறார். இன்னொரு பக்கம் சரவணன், தங்கமயிலை ஆசிரியர் வேலைக்காக பள்ளிக்கு அழைத்து செல்கிறார். போகும் வழியில் ஏதேதோ காரணத்தை சொல்லியும் தங்கமயிலை சரவணன் விடவில்லை.

சீரியல் ட்ராக்:

பின் பள்ளியில் எல்லாம் விசாரிக்கிறார்கள். சர்டிபிகேட் கேட்டதற்கு இல்லை என்று தங்கமயில் சொன்னதுக்கு, பாண்டியன் சொன்னதால் எனக்கு அதெல்லாம் தேவையில்லை. தேவைப்பட்டால் கொண்டு வந்து கொடுங்கள் என்று வேலையில் சேர்த்துக் கொள்கிறார்கள். இதனால் தங்கமயில் ரொம்பவே பயப்படுகிறார். போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கதிருக்கு போன் வந்தது. உடனே அவர், ராஜியை அழைத்துக் கொண்டு போகிறார். அங்கு ராஜியை ஏமாற்றிய கண்ணன் இருப்பதை பார்த்து அவர்கள் ஷாக் ஆகிறார்கள்.= இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full