பணத்துக்காக பரிதவித்து நிற்கும் சரவணன், உண்மை அறிந்து கதிர் செய்தது - விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 9/8/2024

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் பாண்டியன், தன் மூத்த மகன் சரவணனுக்கு எப்படியோ போராடி தங்கமயிலை திருமணம் செய்து வைத்து விடுகிறார். தங்கமயில், வீட்டுக்கு வந்ததிலிருந்து எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்கிறார். இதனால் பாண்டியன் வீட்டில் கலாட்டா கலவரங்களாக இருக்கிறது. இன்னொரு பக்கம், கதிர் எப்படியாவது வீட்டில் சொன்ன பணத்தை கொடுக்க வேண்டும் என்று இரவும் பகலும் பார்க்காமல் விடுமுறை நாட்களில் கூட கார் ஓட்ட செல்கிறார்.

இதற்கிடையில் ராஜி டியூஷன் எடுப்பதற்கு வீட்டில் பொய் சொல்லி போகிறார். இறுதியில் பாண்டியன், மூணு ஜோடியையும் ஹனிமூன் போக சொல்ல எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். ஆனால், தங்கமயில் மட்டும் கோவப்பட்டு இருந்ததால் மீனா- ராஜு இருவரும், நாங்கள் ஹனிமூனுக்கு போகவில்லை. எங்களுக்கு லீவு இல்லை என்று சொன்னதும் பாண்டியன் கோபப்பட்டு கோமதி இடம் கத்தி இருந்தார். மேலும், ஹனிமூன் செல்வதற்கான ஏற்பாடுகளை பாண்டியன் செய்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அப்போது, 5000 தான் ஆகும் என்று ஆன்லைன் மூலம் தங்கமயில் ரூம் புக் செய்து இருந்தார். இதனால் சரவணன், உண்மையிலேயே ரூம் உடைய செலவு 5000 தானா? இதற்கு மேல் அப்பாவுக்கு செலவு வைக்கக்கூடாது என்று சொல்லி விட்டார். அந்த சமயம் பார்த்து, அட்வான்ஸ் தொகை தான் 5000, மீதி 21000 கட்ட வேண்டும் என்று தங்க மயிலுக்கு மெசேஜ் வந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியான தங்கமயில், தன்னுடைய அம்மாவிடம் போன் செய்து நடந்ததை சொல்ல, அவர் சென்னைக்கு போன பிறகு சொல் என்கிறார்.

சீரியல் கதை:

மேலும், இந்த வாரம் பாண்டியன் வீட்டில் செய்தித்தாள் போடுவது குறித்து சர்ச்சை எழுந்தது. இதில் பாண்டியன்-மீனா-செந்தில் இடையே வாக்குவாதம் வந்தது. அதன் பின் செந்தில், மீனா அப்பா, அம்மாவை பார்த்து சண்டை போட, அதற்கு அவர்களும் கோபமாக பேசி இருந்தார்கள். இறுதியில் மீனா அப்பாவிடம் செந்தில் சவால் விட்டார். இதை கதிர், போனில் ரெக்கார்டு செய்து மீனாவிடம் காண்பிக்க அதை பார்த்தவுடன் ஆனந்தத்தில் மீனா அழுதார். நேற்று எபிசோடில் தங்கமயில்-சரவணன் ஹனிமூன் செல்வதற்கு தயாராகி கிளம்பி இருந்தார்கள்.

நேற்று எபிசோட்:

மேலும், ஓட்டலுக்கு சென்ற பின் தான் சரவணனுக்கு உண்மையை தெரிகிறது. ரூம் மொத்த செலவு 25000 என்று சொன்னதை கேட்டு அதிர்ச்சியான சரவணன், தங்கமயில் இடம் கேட்க அவர் வழக்கம்போல் அழ ஆரம்பித்து விட்டார். பின் பணத்தை திருப்பி சரவணன் கேட்க அவர்கள் கொடுக்க முடியாது என்று மறுத்து விடுகிறார்கள். என்ன செய்வது என்று புரியாமல் சரவணன் அமைதியாக நிற்கிறார். இதை தங்கமயில் தன்னுடைய அம்மாவிடம் சொல்ல, அவர்கள் சரவணனை நக்கலாக திட்டி பேசுகிறார்.

இன்றைய எபிசோட்:

அதற்கு சரவணன், ரூம் செலவை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று போனை வைத்து எல்லோருக்கும் கால் செய்து நடந்ததை சொல்ல பார்க்கிறார். யாருமே எடுக்கவில்லை. இறுதியில் கதிரிடம் சொல்ல, கதிர் எப்படியாவது பணத்தை ரெடி பண்ண வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார். பின் இந்த விஷயம் செந்திலுக்கு தெரிய வந்து, செந்திலும் என்ன செய்வது என்று புரியாமல் இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது. இனி வரும் நாட்களில் கதிர் பணத்தை ரெடி பண்ணி தருவாரா? இந்த விவகாரம் பாண்டியனுக்கு தெரிய வருமா? போன்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது

behindtalkies AMP · Quick view
View full