தன் அம்மாவின் ஆசையை நிறைவேற்ற கதிர் செய்யும் வேலை, சந்தோஷத்தில் கோமதி-பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் கடந்த வாரம் ராஜியின் அம்மா வீட்டில் நடந்த சண்டையில் அப்பத்தாவுக்கு நெஞ்சு வலி வந்து கீழே விழுந்தார். உடனே அவரை மொத்த குடும்பமும் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று இருந்தார்கள். மருத்துவர்கள் சரியான பதில் சொல்லாததால் எல்லோருமே பயத்தில் அழுது புலம்பி கொண்டிருந்தார்கள். இந்த விஷயம் அறிந்து வந்த பழனி ஹாஸ்பிடலிலேயே கதறி கதறி அழுதார். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டில் குழப்பத்தில் ராஜி- கோமதி இருவருமே புலம்பி கொண்டிருந்தார்கள். அந்த சமயம் பார்த்து வந்த கதிர் எல்லா உண்மையும் சொல்ல இருவருமே வேதனைப்பட்டு அழுதார்கள்.
அதேபோல் ஹாஸ்பிடலிலுமே எல்லோருமே கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், உண்மையில் பாட்டிக்கு ஒன்றுமே ஆகவில்லை. அவர் கண்விழித்து பார்த்து டாக்டரிடம், டென்ஷனில் மயங்கி விழுந்து விட்டேன். தயவு செய்து என்னை வீட்டுக்கு அனுப்பி விடாதீர்கள் என்று சொல்ல டாக்டரும் ஒத்துக் கொண்டார். தன்னுடைய அம்மாவின் நிலைமையை நினைத்து கோமதி அழுது புலம்பி இருந்ததை பார்த்து பாண்டியன் அவருக்கு ஆறுதல் சொன்னார். கடைசியில் அப்பத்தா உண்மையை சொன்னவுடன் மருமகள்களும் அவருடைய டிராமாவிற்கு ஒத்துக் கொண்டு நடிக்கிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
மேலும், வீட்டிற்கு வந்த பழனி, தன் அம்மா நன்றாக இருக்கும் விஷயத்தை சொன்னவுடன் கோமதி ஆறுதல் அடைந்தார். உடனே பாண்டியன், எல்லோரும் போய் சமைக்கும் வேலையை பாருங்கள் என்று சொல்லிவிட்டு சென்று இருந்தார். அப்போது தங்கமயில், கோமதியிடம் பேச வரும்போது அவர் கண்டுகொள்ளாமல் இருந்தார். நேற்று எபிசோட்டில் கோமதி வருத்தத்தில் இருப்பதால் சாப்பாடு ஓட்டலில் வாங்கிக் கொள்ளலாம் என்று மீனா சொல்ல, வேண்டாம் காசு வீணாகும். வீட்டிலேயே செய்யுங்கள் என்று பாண்டியன் சொன்னார்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் வந்தது.
நேற்று எபிசோட்:
கடைசியில் மூவரும் சமைக்கப் போகிறார்கள். ஆனால், அதற்கு முன்பு தங்கமயில் சமைத்து ரெடியாக வைத்திருந்தார். மறுநாள் காலையில் தன்னிடம் யாரும் முகம் கொடுத்து கூட பேசவில்லை என்று மீனாவிடம் வருத்தத்தில் தங்கமயில் புலம்ப, அவரும் ஆறுதல் சொல்லி அனுப்பி இருந்தார் இன்னொரு பக்கம் கிச்சனில் விறுவிறுப்பாக கோமதி தன்னுடைய அம்மாவிற்காக சமைத்தார். பின் சாப்பாட்டை பழனியிடம் கொடுக்கும்போது பாண்டியன் வாங்கி பார்த்து கேட்டார். வேறு வழியில்லாமல் கோமதி உண்மையை உளறி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில், உன் அம்மா மீது எனக்கு எந்த கோபமும் கிடையாது. அதை என்னிடம் சொல்லிவிட்டு செய்யலாம் என்று பாண்டியன் சொன்னவுடன் கோமதி சந்தோஷப்படுகிறார். பின் தன்னுடைய அம்மாவிற்கு சாப்பாடு கொடுத்து அனுப்பி விடுகிறார் கோமதி. பழனியும் தன்னுடைய அம்மாவிடம் சாப்பாடு கொடுத்து, உன் மகள் செய்த சாப்பாடு என்று சொன்னவுடன் அவரும் சந்தோஷத்தில் சாப்பிட்டு தன் மகளை புகழ்ந்து தள்ளி இருந்தார். அதை வீடியோவாக எடுத்து கோமதி இடம் பழனி காண்பித்தார்.
சீரியல் ட்ராக்:
அதை பார்த்து கோமதி ரொம்ப சந்தோஷப்பட்டு அழுதார். பின் தன் அம்மாவை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று சொல்ல, உடனே கதிர், நான் அதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று வாக்குறுதி கொடுக்கிறார். அதற்குப்பின் தன் அம்மாவை அப்பத்தாவிடம் சேர்த்து வைக்க கதிர்- செந்தில்- சரவணன்- பழனி ஆகிய நான்கு பேருமே சேர்ந்து திட்டம் போடுகிறார்கள். பின் ராஜி வீட்டில் இருந்து யாருமே ஹாஸ்பிடலுக்கு வரக்கூடாது. அதற்கு நீங்கள் தான் பொறுப்பு என்று பழனி இடம் வேலையை ஒப்படைகிறார்கள். அவரும் வீட்டிற்கு சென்று தன் அண்ணன்களிடம் பேச்சிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.