குமாருக்கு சப்போர்ட் செய்த ராஜி, கோபத்தில் கத்தும் கதிர், பாண்டியன் என்ன செய்ய போகிறார்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மீனா, செந்திலை இந்த மாதிரி கட்டாயப்படுத்தி பணம் வாங்க வைத்தது அப்பா தான். அவர் யாருக்கும் தெரியாமல் பணத்தை எடுத்துக் கொடுத்தார். அதை சமாளிக்க லோன் வாங்கினேன் என்று நடந்ததை சொன்னார். அதற்குப்பின் ரூமில் தங்கமயில், அந்த வயல் சொத்து ஐந்து பேருக்கும் சமம். அதை எப்படி ரெண்டு பங்காக போட முடியும்? என்று கேட்டார். உடனே கோபத்தில் சரவணன், அது எங்களுடைய அப்பாவும் கஷ்டப்பட்டு வாங்கியது. அது யாருக்கு கொடுக்கணும், எப்போ கொடுக்கணும் என்று அவருக்கு தெரியும். உன் வேலையை மட்டும் பார் என்று திட்டினார்.
கதிர்-ராஜி இருவருமே கிரவுண்டில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். இதை பார்த்த குமார், தான் தவறாக புரிந்து கொண்டதை நினைத்து வருத்தப்பட்டார். இது ஒரு பக்கம் சக்திவேல், தன்னுடைய மகனுக்கு மீண்டும் திருமணம் செய்து வைப்பதற்காக பேசி இருந்தார். அதற்கு முத்துவேல், இந்த சமயத்தில் வேண்டாம். அவன் இந்த கேசில் இருந்து விடுபடட்டும் என்று சொன்னார். உடனே சக்திவேல் கோபப்பட்டு தன்னுடைய அண்ணனிடம் சண்டை போட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
முத்துவேலுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. பின் சுகன்யா, சக்திவேல் வீட்டில் நடந்ததை ராஜியிடம் சொன்னார். அதற்குப் பிறகு குமாரின் அம்மா மாரி கோயிலுக்கு வர சொன்னதால் ராஜியிமே கிளம்பி கோவிலுக்கு போனார். அங்கு மாரி, என் மகன் செய்தது தவறுதான். தயவுசெய்து அவனை மன்னித்துவிடு. உனக்காக தான் அவன் அப்படி செய்து விட்டான். என் மகனை விட்டு என்னால் இருக்க முடியாது. தயவு செய்து உன் மாமியார் வீட்டில் எடுத்து சொல்லி என் மகன் மீது போட்ட கேசை வாபஸ் வாங்க சொல்லு என்று கெஞ்சி அழுதார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் மாரி, அரசி பட்ட கஷ்டங்களை நான் மறக்கவில்லை. குமாருமே தான் செய்த தவறை உணர்ந்துவிட்டான். தயவுசெய்து உங்கள் வீட்டில் சொல்லி கேஸை வாபஸ் வாங்க சொல்லு என்று ரொம்பவே கெஞ்சி கதறி அழுதார். அதற்கு ராஜி, நான் குமாரை மட்டும் யோசிக்க முடியாது. என் மாமனார், அரசி பற்றி எல்லாம் யோசிக்கணும். என்னால் எதுவும் பண்ண முடியாது என்று சொன்னார். இதனால் கோபப்பட்டு மாரி, ராஜியை திட்டி விட்டு சென்றார். இன்னொரு பக்கம் வீட்டில் எல்லோருமே செந்தில் வரவில்லை என்று காத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது செந்தில் வீட்டில் உள்ள எல்லோருக்குமே முதல் மாத சம்பளம் வந்ததால் கிப்ட் வாங்கிக்கொண்டு வந்தார்.
சீரியல் ட்ராக்:
பின் ஒவ்வொருவருக்கும் தான் வாங்கிய பொருளை எல்லாம் கொடுக்க, பாண்டியன் கோபப்படு முறைத்துக் கொண்டே இருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோசமாக செந்தில் வாங்கி கொடுத்த கிப்ட்டை ஏற்றுக்கொண்டார்கள். பாண்டியனுக்கு வாட்ச் கொடுத்தார். பாண்டியன், இதெல்லாம் இப்போ தேவையா? பத்து லட்சம் லோன் வாங்கி வைத்துவிட்டு இந்த ஆடம்பர செலவு பண்ணனுமா? என்று திட்டிவிட்டு கிப்டையும் வாங்காமல் சென்றார். இதனால் செந்தில் பாண்டியன் மீது கோபப்பட்டார். பின் செந்தில், தன் மனைவியிடம் சொல்லி புலம்பி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் செந்தில் தன்னுடைய அப்பாவின் மீது கோபத்தில் இருப்பதால் மீனா அவரை சமாதானம் செய்கிறார். இருந்தாலுமே செந்திலுக்கு பாண்டியன் மீது கோபம் குறையவே இல்லை. இன்னொரு பக்கம் தன்னுடைய சித்தி,குமாரை பற்றி சொன்னதை கதிரிடம் சொல்கிறார். அதோட ராஜி, குமாருக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார். இதனால் கோபப்பட்ட கதிர், ராஜியை திட்டுகிறார். பின் இருவருக்கும் வாக்குவாதம் நடக்கிறது. உடனே ராஜி, கேசை வாபஸ் வாங்க சொல்லவில்லை என்கிறார். சக்திவேல் வீட்டில் குமாருக்கு பொண்ணு பார்த்த விஷயத்தை முத்துவேல் சொல்கிறார். அப்பத்தா, அரசி வாழ்க்கையும் வீணாகப் போய்விடும். அவர்கள் இருவரையும் திருமணம் செய்து வைக்கலாம் என்கிறார். ஆனால், முத்துவேல் கேட்கவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது.