கதிரின் ஆசையை பாண்டியன் நிறைவேற்றுவாரா? சுகன்யாவிடம் சித்திரவதைப்படும் பழனி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' ஹாஸ்பிடலில் மீனாவின் அப்பா, நீ அந்த வீட்டில் சந்தோசமாக இருக்கிறாயா? உன்னை பார்த்தால் தெரியவில்லை என்றார். அதற்கு மீனா, நான் ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன் என்றார். பின் மீனாவின் அம்மா, செந்திலையும் செந்தில் குடும்பத்தை பற்றியும் ரொம்ப பெருமையாக பேச, மீனா அப்பா அதை பெரிதாக கண்டு கொள்ளவே இல்லை. இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டிற்கு போலீஸ் வந்தார்கள். ராஜியின் நகை காணாமல் போன விஷயத்தைப் பற்றி கதிரை விசாரிக்கனும் கூப்பிடுங்கள் என்றார்.
வீட்டில் உள்ள எல்லோருமே பயந்து விட்டார்கள். பின் ராஜி, கதிருக்கு போன் செய்து வீட்டிற்கு வர வைத்தார். பின் மீனா, ராஜி இருவரும் போலீஸ் ஸ்டேஷனில் நகை காணாமல் போன விஷயத்தை புகார் கொடுத்ததை சொல்லி விட்டார்கள். கோமதி ஷாக் ஆனார். நேற்று எபிசோடில் எபிசோட்டில் போலீஸ் கதிரிடம் விசாரணை நடத்தியது. அப்போது ராஜி, நான் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு கதிர் உடைய நண்பர் கண்ணன் தான் நகையை என்னிடம் இருந்து எடுத்துக் கொண்டு சென்று விட்டார் என்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இதை கேட்டவுடன் பாண்டியன் வீட்டில் எல்லோருமே ஷாக் ஆனார்கள். வீட்டில் உள்ளவர்கள் மாத்தி மாத்தி அதை பற்றி ராஜியிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு போலீஸ், உங்க பிரச்சனை அப்புறம் வைத்துக் கொள்ளுங்கள். கதிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர வேண்டும் என்று சொன்னார்கள். உடனே மீனா எதுவாக இருந்தாலும் உள்ளே போய் பேசலாம். கதிர் போலீஸிடம் பேசிவிட்டு வரட்டும் என்றார். அப்போது போலீஸ், நகையை வாங்க முடியாது. முடிந்தவரை பணம் வாங்கி தருகிறோம் என்று சொன்னார்கள்.
நேற்று எபிசோட்:
அதற்குப்பின் பாண்டியன், ராஜியிடம் நடந்ததை விசாரிக்க, மீனா ஏதேதோ ஒரு காரணத்தை சொல்லி சமாளித்தார. ஆனால், கதிர் நகை எடுக்கவில்லை என்றவுடன்பாண்டியன், கதிரை திட்டியது நினைத்து வருத்தப்பட்டார். அதற்குப்பின் கோபத்தில் பாண்டியன், ராஜியின் அப்பாவிடம் இதைப் பற்றி சொல்ல வெளியே கூப்பிட்டார். அப்போது பாண்டியன், கதிருக்காக சப்போர்ட் செய்து நகை உண்மையை சொல்லி ஆவேசமாக ராஜியின் அப்பாவை திட்டி இருந்தார். அவர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் தன் மகன் மீது எந்த தவறும் இல்லை என்று தெரிந்தவுடன் சந்தோஷத்தில் பாண்டியன் மொட்டை மாடியில் சரக்கு அடித்துக் கொண்டிருக்கிறார். அப்போது வந்த ராஜி, யார் என்ன சொல்லி இருந்தாலும் நீங்கள் கதிர் மீது சந்தேகப்பட்டு இருக்க கூடாது. அவன் ரொம்ப நல்லவன். அவனை மட்டும் ஏன் நீங்கள் பாசமாக நடத்த மாட்டுகிறீர்கள். ஆனால், அவன் உங்கள் மீது நிறைய மரியாதை வைத்திருக்கிறான் என்று தன்னுடைய ஆதங்கத்தை எல்லாம் கொட்டுகிறார். இதை எல்லாம் கேட்டு பாண்டியன் வருத்தப்படுகிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் கீழே வந்த பாண்டியன், கதிரிடம் உட்கார்ந்து ரொம்ப சந்தோஷமாக பேசுகிறார். அப்போது அவர், உனக்கு என்ன வேண்டும் என்று கேளு என்று சொல்கிறார். உடனே கதிர், ராஜி போலீசாக வேண்டும். அதற்கு சம்மதம் கொடுங்கள் என்று சொன்னவுடன் வழக்கம்போல் பாண்டியன் கோபப்பட்டு திட்டி விட்டு செல்கிறார். இன்னொரு பக்கம் சுகன்யா- பழனி இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சுகன்யா, என்னை வெளியில் கூட்டிட்டு போங்கள். என்னால் இந்த வீட்டில் இருக்க முடியவில்லை என்று வழக்கம்போல அவரை திட்டிக் கொண்டிருக்கிறார். பழனிக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. சுகன்யா அடுத்து என்ன பிரச்சனை செய்வாள் என்ற பயத்திலேயே இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.