புதிய ட்ராவல்ஸை தொடங்கிய கதிர், யார் பெயர் வைத்து இருக்கிறார் தெரியுமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 21/9/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியன், லோன் போட்டு தந்த பத்து லட்சம் ரூபாய் செக்கை மீனாவிடம் கொடுத்தார். இதை பார்த்து மீனாவின் அப்பா, அம்மா எதுவும் சொல்லவில்லை. அதற்குப்பின் கதிரை அழைத்து டிராவல்ஸ் ஆரம்பிக்க பாண்டியன் பணம் கொடுத்தார். இதை எல்லாம் பார்த்து தங்கமயிலுக்கு கடுப்பானது. அதற்குப்பின் ராஜி- கதிர் இருவருமே டிராவல்ஸ் ஆரம்பிக்க இடத்தை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது சரவணன், தனக்கு தெரிந்த இடத்தை காண்பித்தார். அதைப் பார்த்த உடனே ராஜி-கதிர் இருவருக்குமே பிடித்து போனது.

பின் டிராவல்ஸ் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்தார்கள். பின் கதிர் ஸ்வீட் கொடுத்து டிராவல்ஸ் ஆரம்பிக்கும் விஷயத்தைப் பற்றி சொன்னார். அதை கேட்டு கோமதி- பாண்டியன் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். இன்னொரு பக்கம் செந்தில், என்னுடைய அப்பா பணத்தை திருப்பி கொடுத்ததற்கு செலிப்ரேட் பண்ணலாம் என்றார். உடனே மீனா, பணத்தை கொடுக்கும் போது மாமா அதற்கு பதில் நிலத்தை வாங்கணும் என்று சொன்னாரே, அது நினைவில் இருக்கிறதா. சொந்தமாக நிலம் வாங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என்றார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோட்டில் அப்பத்தா, அரசி எங்கே செல்கிறார்? என்று விசாரித்தார். அதற்கு சுகன்யா, காலேஜ் திறந்து விட்டது. அதனால் தான் அரசியை விட குடும்பத்துடன் சென்றிருக்கிறார்கள் என்றார். இன்னொரு பக்கம் கல்லூரியில் பாண்டியன் அறிவுரை சொன்னார். தங்கமயில், கதிர் எல்லோருமே அரசிக்கு தைரியம் சொல்லி அனுப்பினார்கள். அரசி சந்தோஷமாக கல்லூரிக்கு சென்றார். இன்னொரு பக்கம் வீட்டில் செந்தில், பாண்டியன் மாறியதற்கு தான் காரணம் என்று தம்மட்டம் அடித்துக் கொண்டார்.

சீரியல் ட்ராக்:

பின் வீட்டில் எல்லோருமே சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் அரசியை பார்ப்பதற்காக குமார் கல்லூரிக்கு சென்று இருந்தார். குமாரை பார்த்து கோபத்தில் அரசி திட்டினார். அப்போது குமார், எங்கு பார்த்தாலும் உன் ஞாபகமாகத்தான் இருக்கிறது. உனக்கு செய்த துரோகம் தான் என் கண்முன் வருகிறது. அந்த குற்ற உணர்ச்சியில் இருந்து வெளிவர நினைக்கிறேன் என்றெல்லாம் பேசினார். அதற்கு அரசி, நீ என்னை விட்டாலே அதுவே போதும். தயவு செய்து இங்கிருந்து போ என்று எல்லாம் திட்டி விட்டு சென்றார். குமார் வேதனையில் அழுதார்.

https://www.youtube.com/watch?v=RhcblROoG5c

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கதிர், சந்தோசத்துடன் தன்னுடைய டிராவல்ஸை ஆரம்பிக்கிறார். பின் அந்த திறப்பு விழாவிற்கு வீட்டில் உள்ள எல்லோருமே வருகிறார்கள். கடைக்கு என்ன பெயர் என்று எல்லோருமே ஆவலாக இருக்கிறார்கள். அப்போது பாண்டியன் டிராவல்ஸ் என்று எழுதி இருப்பதை பார்த்து பாண்டியன் ரொம்ப எமோஷனல் ஆகிவிடுகிறார். பின் தன் மகனுக்கு ஆசிர்வாதம் செய்து வாழ்த்துகிறார் பாண்டியன். வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோசப்படுகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full