போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற ராஜி, சொந்த தொழில் தொடங்க போராடும் கதிர் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 10/7/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் ராஜி, நீங்கள் அக்காவிடம் பேசவில்லை என்றால் நீங்கள் செய்த விஷயத்தை வெளியே சொல்லி விடுவேன் என்று பிளாக்மெயில் செய்தார். இதனால் வேறு வழி இல்லாமல் கோமதி, மீனாவிடம் பேசி இருந்தார். இதனால் மீனா ரொம்ப எமோஷனலாக அழுதார். அதற்கு கோமதி, நான் மாமா இருக்கும்போது பேசமாட்டேன். அவர் இல்லாத போது தான் பேசுவேன் என்று சொன்னார். அதற்குப்பின் செந்தில் வேலைக்கு கிளம்புவதால் வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷமாக இருந்தார்கள். எல்லோருமே செந்திலை வழியனுப்பி வைக்க, பாண்டியன் மட்டும் வரவே இல்லை.

இதனால் செந்தில் வருத்தப்பட்டார். அப்போது வந்த மீனாவின் அப்பா, செந்திலை வழி அனுப்பி வைத்தார். இதை எல்லாம் பார்த்து செந்திலும் மீனாவும் சந்தோஷப்பட்டார்கள். இன்னொரு பக்கம் பாண்டியன், சரவணன்-பழனி இருவரையுமே திட்டிக் கொண்டிருந்தார். கடை வேலையை யார் பார்ப்பது. அவன் என்ன ஒன்னும் தெரியாதவனா? என்றெல்லாம் செந்திலை வெளுத்து வாங்கி இருந்தார். அதற்குப்பின் செந்தில் அப்பாவை பார்க்க வேண்டும் கடைக்கு வண்டியை விடு என்று கதிரிடம் சொன்னார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோட்டில் செந்தில்-கதிர் இருவருமே பாண்டியனின் கடைக்கு வந்தார்கள். ஆனால், பாண்டியன் அங்கு இல்லை. அப்போது சரவணன், அப்பா உன் வேலையைப் பற்றிதான் பெருமையாக பேசி இருந்தார். இப்போது தான் அவசர வேலையாக கிளம்பி இருக்கிறார் என்று சொல்லி சமாளித்தார். அப்பாவை பார்ப்பதற்காக செந்திலும் அங்கே காத்துக் கொண்டிருந்தார். பாண்டியன் கோவிலில் செந்தில் பெயரில் அர்ச்சனை செய்தார். அந்த சமயம் வந்த கோமதி இதை பார்த்து விட்டார்.

நேற்று எபிசோட்:

பாண்டியனால் எதுவும் சொல்ல முடியவில்லை. பின் பாண்டியன்- கோமதி இருவருமே செந்திலுக்காக அர்ச்சனை செய்து சாமி கும்பிட்டார்கள். இன்னொரு பக்கம் செந்தில் வேலைக்கு நேரமாகிறது என்று கிளம்பினார். வரும் வழியில் அரசியை பார்த்தார் செந்தில். அப்போது அரசி, செந்திலுக்கு வாழ்த்து சொல்லி அனுப்பி இருந்தார். இன்னொரு பக்கம் ஆபீஸிக்கு சென்ற மீனா, மீனாவின் அப்பா இருவருமே செந்திலுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். நேரம் ஆகிறது என்று மீனாவின் அப்பா சொன்னார். அப்போது செந்தில் வந்து விட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் செந்தில் முதல் நாள் வேலையில் சேர்ந்து விடுகிறார். இதை கதிர், சரவணனுக்கு வீடியோ கால் பண்ணி பேசுகிறார். இதனால் எல்லோருமே சந்தோஷமாக இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் கதிர்- ராஜி இருவருமே செந்தில் வேலைக்கு போனதை பற்றி பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அப்போது போலீஸ் ஸ்டேஷனிலிருந்து நகை காணாமல் போன விஷயமாக போன் செய்கிறார்கள். உடனே ராஜி, கதிர் இருவருமே போலீஸ் ஸ்டேஷன் போகிறார்கள். அங்கு ராஜியிடம் இருந்து நகை திருடியவன், நிறைய பெண்களிடம் நகையை ஏமாற்றி இருக்கிறார் என்ற விஷயம் தெரிந்து ராஜிக்கு இன்னும் கோபம் அதிகமாகின்றது. பின்னர் ராஜி உடைய கொஞ்ச நகைகள் தான் கிடைக்கிறது.

சீரியல் ட்ராக்:

மீதம் உள்ள நகைகளை கூடிய சீக்கிரமே கண்டுபிடித்து தருவதாக போலீஸ் கூறுகிறார்கள். அதற்குப்பின் கதிர், எந்த நம்பிக்கையில் நீ அவனை காதலித்தாய் என்றெல்லாம் கேட்க, ராஜி ரொம்ப எமோஷனலாக பேசுகிறார். அதற்குப் பின் கதிர்- ராஜி இருவருமே லோன் விஷயமாக பேங்கிற்கு சென்று இருக்கிறார்கள். அப்போது பேங்கில் இருந்தவர், லோன் வாங்குவது பற்றி எல்லாம் விசாரிக்கிறார்கள். அதோடு நம்பிக்கையானவர் உங்களுக்கு சப்போர்ட் செய்ய வேண்டும் என்கிறார். இதனால் ராஜிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full