ராஜியிடம் கலாட்டா செய்யும் பசங்க, வெளுத்து வாங்கிய கதிர், செந்தில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 2/5/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் ராஜி, கதிருக்கு போன் செய்து குமார் வந்த விஷயத்தையும் அவன் இறந்த விஷயத்தையும் சொன்னார். இதனால் கதிர் ஷாக் ஆகிவிட்டார். அதற்குப்பின் கதிர், இந்த உண்மையை போலீஸிடம் சொல்ல வேண்டாம். எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன், தைரியமாக இருங்கள் என்று ராஜிக்கு ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் மீனா, செந்திலுக்கு போன் செய்து குமாரை கொலை செய்த விஷயத்தை சொன்னார். அதை கேட்டவுடன் செந்தில் என்ன சொல்லுவது என்று தெரியாமல் ஷாக் ஆனார்.

மீனா, நான்தான் கொலை செய்து விட்டேன். நான் தெரியாமல் செய்தேன். வேண்டுமென்று நான் அவனை அடிக்கவில்லை என்று சொன்னதையே சொல்லி புலம்பி அழுது கொண்டிருந்தார். ராஜி, கோமதி அரிசி மூவருமே மீனாவை சமாதியில் செய்தும் அவர் கேட்கவே இல்லை பக்கம் கதிர் செந்தில் இருவரும் மீனா குமாரை அடித்த விஷயத்தை பற்றி பேசி ரொம்ப வருத்தப்பட்டு கொண்டிருந்தார்கள். பின் இருவருமே கிளம்பி காரில் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது செந்தில், ஒரு வேலை குமார் இறந்தது உண்மை என்றால் நான் மீனாவை ஜெயிலுக்கு அனுப்ப விட மாட்டேன்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நானே பழியை ஏற்றுக்கொண்டு ஜெயிலுக்கு போய் விடுவேன் என்று சொல்லி ரொம்ப எமோஷனலாக சொல்லி புலம்பி கொண்டிருந்தார். உடனே கதிர், அதெல்லாம் ஒன்றும் இல்லை. நாம் நல்லபடியாக எல்லோரும் வீட்டுக்கு வருவோம் என்று ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் கோமதி, நீங்கள் அமைதியாக இருங்கள். நான் ஜெயிலுக்கு போய்விட்டால் அரசி கல்யாணத்தை மட்டும் எப்படியாவது நடத்தி விடுங்கள் என்று எமோஷனலாக பேசி இருந்தார். அப்போது குமாரின் கையசைவதை ராஜி பார்த்து எல்லோரிடமும் சொன்னார். பின் குமாருக்கு பேச்சு மூச்சு இருப்பது தெரிந்தது. இதனால் மொத்த பேருமே ரொம்ப சந்தோஷப்பட்டார்கள்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் உண்மையை சொல்வதற்கு கதிருக்கு போன் செய்த ராஜி, குமார் உயிரோடுதான் இருந்தார். அவன் இறக்கவில்லை மூச்சு விடுகிறான் என்று சொல்கிறார். இதைக் கேட்டவுடன் கதிர், செந்திலுக்கு உயிர் வந்தது. உடனே கதிர், எல்லோரும் ரூமை விட்டு வெளியே வந்து விடுங்கள். நாங்கள் வந்து விடுகிறோம் என்று சொன்னார்கள். இதனால் எல்லோருமே குமார் ரூமை விட்டு வெளியே வந்து உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். பின் நடந்ததை நினைத்து வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருந்தார்கள்.

சீரியல் ட்ராக்:

அப்போது வந்த கதிர், செந்தில் இருவரும் எல்லோரையும் சமாதானம் செய்துவிட்டு குமார் ரூமிற்கு சென்று அவரை தண்ணீர் தெளித்து எழுப்பி இருந்தார்கள். மயக்கத்தில் இருந்த குமாரும் தண்ணீர் பட்டவுடன் எழுந்து விட்டார். பின் கதிர், செந்தில் இருவரும் குமாரை விசாரித்தார்கள். மாட்டிக் கொண்டால் என்ன பண்ணுவது என்று அவர்களை தள்ளிவிட்டு குமார் ஓடிவிட்டார். குமாரை துரத்திக் கொண்டு கதிர்-செந்தில் போனார்கள். இருந்தாலும் குமார் தப்பித்து விட்டார். பின் வீட்டில் எல்லோருமே நடந்ததை நினைத்து எமோஷனலாக பேச கதிர், செந்தில் இருவரும் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி சமாதானம் செய்தார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜி- கதிர் இருவருமே குமார் விஷயத்தைப் பற்றியும், நடன போட்டியை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். மறுநாள் காலையில் ராஜிக்காக துணி வாங்க கதிர் கடைக்கு சென்று இருக்கிறார். அதற்குப்பின் எல்லோருமே நடன போட்டி நடக்கும் இடத்திற்கு சென்று விடுகிறார்கள். அப்போது அங்கு இருந்த இளைஞர்கள் ராஜிவிடம் போன் நம்பரை கேட்டு வம்பு இழுக்கிறார்கள். உடனே கதிர்- செந்தில் இருவருமே அந்த இளைஞர்களை அடித்து துரத்தி விடுகிறார்கள். அதற்கு பின்பு நடனப் போட்டியில் ஒவ்வொருவருமே வித்தியாசமாக நடனம் ஆடுகிறார்கள். ராஜி என்ன செய்வார் என்று கதிர் யோசித்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full