வேதனையில் தவிக்கும் ராஜி, மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசிய கதிர் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் ராஜியை வேறொரு நபருடன் சேர்ந்து நடனமாட சொன்னார்கள். ஆனால், ராஜிக்கு விருப்பமே இல்லை. அதுவும் ஒரு கிளாமரான பாட்டுக்கு இருவரையும் ஆட சொன்னார்கள். ராஜி தனியாக தள்ளி போய் நின்றார். இதையெல்லாம் பார்த்த அந்த நடுவர்கள் ராஜியை திட்டி நாங்கள் சொல்வது போல் தான் நீ நடனமாட வேண்டும் என்று மிரட்டினார்கள். இதனால் ராஜி வேதனையில் ரூமுக்கு சென்று விட்டார். அப்போது அங்கு வந்த ஒரு பெண், உனக்கு பணம் வேண்டும் என்றால் அவர்கள் சொல்வதைப் போல அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள் என்றார்.
அதற்கு ராஜி முடியாது என்றார். இன்னொரு பக்கம் பாண்டியனுக்கு கால் வழி என்பதால் அவரை அரசி பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டார். இன்னொரு பக்கம் கோமதியை கோவிலுக்கு அப்பத்தா வர சொன்னார். பின் கோவிலில் அப்பத்தா, குமார் நிலைமையை பற்றி எடுத்து சொல்லி கேஸை வாபஸ் வாங்க சொன்னார். உடனே கோமதி கோபப்பட்டு தன் அம்மாவை திட்டினார். இருந்தாலும் விடாமல் அப்பத்தா, குமார் கேஸை பற்றி தான் பேசி கொண்டு இருந்தார். கடைசியில் ராஜி, ஹோட்டலை விட்டு கிளம்ப பார்த்தார். அந்த சமயம் பார்த்து நடுவர்கள் அங்கு வந்து விட்டார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் ராஜியை போகவிடாமல் அந்த நடுவர்கள் எல்லோருமே அவரை ரூமில் அடைத்து வைத்தார்கள். ராஜி எவ்வளவோ கத்தி கதறி அழுதும் அவர்கள் கேட்கவில்லை. பின் அந்த நடுவர்கள், பணத்தை 10 லட்சம் கொடு இல்லையென்றால் நாங்கள் சொல்வதை செய் என்று மிரட்டினார்கள். அந்த சமயம் பார்த்து சரியாக கதிர் வந்து விட்டார். ஒவ்வொரு ரூமாக கதிர், ராஜியை தேடினார். உடனே ராஜியின் வாயை மூடினார்கள். இருந்தாலுமே கதிர் என்று ராஜி கத்தினார். அதைக் கேட்டவுடன் கதிர்
அந்த ரூமிற்கு வந்து கதவை உடைத்து ராஜியை காப்பாற்றினார்.
நேற்று எபிசோட்:
அப்போது ராஜி, இவர்கள் நல்லவர்களே கிடையாது, கெட்டவர்கள் தெரியாமல் வந்து விட்டேன். என்னை மன்னித்துவிடு என்று ரொம்ப எமோஷனலாக அழுதார். கதிர், ராஜி நிலைமையை புரிந்து கொண்டு அங்கிருந்த ஆட்களை எல்லாம் அடித்து போட்டு அங்கிருந்து அழைத்து வந்தார். இன்னொரு பக்கம் குமாரின் கேஸ் விஷயமாக கோமதி, பாண்டியனிடம் பேசினார். அதற்குள் பாண்டியன் திட்டுவதால் பயந்து கொண்டு உண்மை எதுவும் சொல்லாமல் கோமதி சென்று விட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜி, டான்ஸ் போட்டியில் நடந்ததை நினைத்து அழுது கொண்டிருக்கிறார். கதிர் அவருக்கு ஆறுதல் சொல்கிறார். அதற்குப்பின் ராஜி செய்த வேலைக்காக திட்டிய கதிர், இனி எனக்காக எதுவும் செய்யாதே என்று சொல்கிறார். அதற்கு பின் ஒரு ஓட்டலில் கதிர்- ராஜி இருவரும் சாப்பிடுகிறார்கள். அப்போது கதிர், ராஜி பற்றி தன் மனதில் இருக்கும் எண்ணத்தை எல்லாம் அவருடைய கையை பிடித்து சொல்கிறார். இதைக் கேட்டு ராஜி எமோஷனலாக அழுகிறார். கிட்டத்தட்ட கதிர், ராஜியை காதலிக்கும் விஷயத்தை சொல்கிறார். அதற்குப்பின் இருவருமே வீட்டிற்கு சந்தோஷமாக வருகிறார்கள்.