ராஜியின் கனவை அறிந்து கதிர் செய்த வேலை, கோபத்தில் கத்திய பாண்டியன்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் பாண்டியன், டீச்சர் வேலைக்கு வர சொல்லிவிட்டார்கள். சர்டிபிகேட் எங்கே? என்று கேட்க, தங்க மயிலால் எதுவும் பேச முடியவில்லை. உடனே அவருடைய அம்மா, சர்டிபிகேட் தொலைந்து விட்டது என்று புது கதை ஒன்று சொன்னார். இருந்தும் விடாமல் சரவணன், தங்கமயிலை வேலைக்கு அழைத்து போனார். தங்கமயில் பயத்தில் என்ன செய்வதென்றே புரியாமல் இருந்தார். அதன் பின் கோமதி, நீங்கள் செலவிற்கு பழனிக்கும், செந்திலுக்கு பணம் கொடுங்கள் என்று சொல்ல, பாண்டியனும் சரி என்றார்.
பின் கடையில் பாண்டியன், இருவரும் தினமும் 100 ரூபாய் எடுத்துக் கொள்ளுங்கள். வேற ஏதாவது செலவுக்கு வேண்டுமென்றாலும் சொல்லிட்டு எடுத்துக் கொள்ளுங்கள் என்றவுடன் செந்திலுக்கு இன்னும் கோபம் அதிகமானது. இதனால் செந்தில் தன்னுடைய அப்பாவிடம் சொல்லாமல் கல்லாவிலிருந்து 500 ரூபாய் எடுத்துக் கொண்டு பொய் கணக்கு எழுதி வைத்தார். இதை பார்த்த பழனி ஷாக் ஆகி இருந்தார். இன்னொரு பக்கம் மீனா, வேலை செய்யும் இடத்திற்கு வந்த ராஜியின் சித்தப்பா, சக்தி இருவரும் ஆக்கிரமிப்பு இடம் சம்பந்தமாக தகராறு செய்தார்கள். அதற்கு மீனா, பதிலடி கொடுத்து இருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
கோபத்தில் அவர்கள் மீனாவிடம் சண்டை போட்டு மிரட்டி விட்டு சென்றார்கள். செந்தில், மீனாவிற்காக ஹேண்ட் பேக்கை பார்த்து பார்த்து ஆசை ஆசையாக வாங்கி இருந்தார். ஆனால், அதனுடைய விலை அதிகமாக இருந்தால் பழனி இடம் பணம் வாங்கி கொடுத்து விட்டார். இன்னொரு பக்கம் வீட்டில் திருடனுக்கு பயந்து சிசிடிவி கேமராவை பொருத்தி அதை பார்த்து ரசித்து சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார் பாண்டியன். பின் தங்க மயிலின் பிறந்தநாள் என்பதால் கேக் வாங்கி கொண்டாடி இருந்தார்கள்.
நேற்று எபிசோட்:
அப்போது பாண்டியன் கேக் விலை தெரிந்து ரொம்ப ஷாக் ஆகி, இதெல்லாம் தேவையா? காசோட அருமை தெரியவில்லை என்று வழக்கம்போல கிளாஸ் எடுக்க ஆரம்பித்துவிட்டார். ஆனால், அதை யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அதற்குப்பின் செந்தில், தான் வாங்கின ஹேண்ட் பேக்கை மீனாவிடம் கொடுத்தார். அவரும் அதை பார்த்து ரொம்ப சந்தோசப்பட்டார். இன்னொரு பக்கம் பாண்டியன், தூங்காமல் கூட சிசிடிவி கேமராவை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கேமரா இருட்டாக தெரிகிறது என்று ஒரே ஆர்ப்பாட்டம் செய்து இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கேமரா வேலை செய்யவில்லை என்றவுடன் கதிர் வெளியே போய் செக் பண்ணி பார்த்தார். அங்கு கேமரா மீது கொசு உட்காந்திருந்தது. அதை துரத்தி விடுகிறார். அதற்குப்பின் கேமரா தெளிவாக தெரிகிறது. இருந்தாலும், இருட்டாக இருக்கிறது என்று பாண்டியன் பிரச்சனை செய்தார். இரவு நேரத்தில் இருட்டாக தான் இருக்கும். லைட் போடுங்கள், வெளிச்சம் வரும் என்றவுடன் பாண்டியன் அமைதியாக சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் தங்கமயில், சரவணன் தன்னுடைய பிறந்தநாளுக்கு எந்த ஒரு பரிசுமே கொடுக்கவில்லை என்று வேதனைப்படுகிறார்.
சீரியல் ட்ராக்:
பின் ராஜி, கண்ணனை துரத்தும் வீடியோவை கதிர் பார்த்து கொண்டிருக்கிறார். அப்போது ராஜி, என்ன வீடியோ? என்று கேட்டதற்கு, எவ்வளவு வேகமாக ஓடுகிறாய் கதிர் சொல்கிறார். அதற்கு ராஜி, நான் அத்தலட் பிளேயர். எனக்கு போலீசாக வேண்டும் என்று தான் ஆசை என்று சொன்னவுடன் கதிர் ஆச்சரியப்படுகிறார். பின் அவரை கிரவுண்டுக்கு அழைத்து சென்ற கதிர், நீ என்னை விட ஓடி வெற்றி பெற்றால் நீ சொல்வதை நான் கேட்கிறேன் என்றவுடன் ராஜி பந்தயத்திற்கு தயாராகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.