டான்ஸ் பெயரில் ட்ராப்பில் சிக்கிய ராஜி, பயத்தில் கதிர் எடுத்த முடிவு - விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 6/9/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் ராஜி, கதிரிடம் டான்ஸ் காம்பிடிஷன் பற்றி பேச, அதற்கு கதிர், நீ உன்னுடைய போலீஸ் வேலையில் மட்டும் கவனம் செலுத்து என்றார். அதற்கு பின் ராஜி, பாண்டியனிடம் நியூஸ் பேப்பரை கொடுத்து டான்ஸ் காம்பிடிஷன் பற்றி சொன்னார். இதைக் கேட்ட கோமதி கோபப்பட்டு ராஜியை திட்டினார். பாண்டியன், இதெல்லாம் சரிப்பட்டு வராதுமா என்றார். இருந்தாலுமே இதை ராஜி விடுவதாக இல்லை. அதற்குப்பின் பாண்டியனிடம் கோமதி, ராஜுவை டான்ஸ் காம்பிடிஷனுக்காக சென்னைக்கு அனுப்ப வேண்டாம்.

நீங்கள் ஏதாவது சொல்லி புரிய வையுங்கள் என்றார். குமார், அரசியை சந்தித்து மன்னிப்பு கேட்டார். ஆனால், அரசி எதுவுமே பேசவில்லை. இதையெல்லாம் பார்த்த சரவணன் கோபப்பட்டு குமாரை அடித்து விட்டு அரசியை அங்கு இருந்து அழைத்து சென்றார். இன்னொரு பக்கம் வீட்டில் டான்ஸ் காம்பிடிஷனில் கலந்து கொள்வதைப் பற்றி ராஜி சொன்னார். ஆனால், வீட்டில் யாருமே ஒத்துக்கொள்ளவில்லை. டான்ஸ் காம்பிடிஷனுக்கு அனுப்பாவிட்டால் நான் சாப்பிட மாட்டேன் என்று உண்ணாவிரதம் இருந்தார் ராஜி.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இதனால் பாண்டியன் கோபப்பட்டு ராஜியை திட்டி உன்னுடைய முடிவு. நீ என்ன வேணாலும் செய்து கொள் என்று சென்றார். அதற்குப் பின் கதிர், ராஜியை தனியாக அழைத்து சென்று சொல்லி புரிய வைத்தார். ஆனால், ராஜி ஏற்றுக் கொள்வதாகவே இல்லை. மறுநாள் காலையில் ராஜி தயாராகி வந்தார். அதை பார்த்த பாண்டியன், டான்ஸ் போட்டி பற்றி பேசாதே என்றார். அதற்கு ராஜி, அதை பற்றி தான் பேச வந்தேன் என்றார்.
ராஜி, கண்டிப்பாக நான் டான்ஸ் போட்டியில் கலந்து கொள்வேன் அடம் பிடித்தார். வீட்டில் உள்ள எல்லோருமே எவ்வளவோ எடுத்து சொல்லியுமே ராஜி கேட்கவில்லை.

நேற்று எபிசோட்:

பாண்டியன், எதுவாக இருந்தாலும் உன் முடிவு என்று கிளம்பி விட்டார். உடனே ராஜி சென்னைக்கு கிளம்பி இருந்தார். பின் கதிர்-ராஜி இருவரும் செல்லும் வழியில் வாக்குவாதம் ஏற்பட்டதால் கதிர், ராஜியுடன் சென்னை செல்லவில்லை. கதிர் கோபத்தில் வீட்டுக்கு வந்து விட்டார். இதை அறிந்த பாண்டியன் திட்டினார். இன்னொரு பக்கம் ராஜி சென்னைக்கு சென்று காம்பிடிஷன் நடக்கும் இடத்தில் தன்னுடைய பெயரை கொடுத்து போட்டியில் கலந்து கொண்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் டான்ஸ் போட்டியில் நடுவராக இருக்கும் ஒருவர், ராஜி உடன் சேர்ந்து நடனம் ஆட, அது பிடிக்காமல் ராஜி அங்கிருந்து வெளியே வந்து விடுகிறார். ராஜி என்ன செய்வது என்று புரியாமல் பயந்து கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து போன் செய்த கதிர், ஒன்னும் பிரச்சனை இல்லையா? என்று கேட்கிறார். அதற்கு ராஜி, எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். ராஜியை நினைத்து கதிர் ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் தங்கமயிலைபார்ப்பதற்காக அவருடைய அம்மா வீட்டிற்கு வந்திருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

அப்போது தங்கமயில், சொத்தை வித்து இரண்டு பங்காக செந்தில், கதிருக்கு கொடுக்கும் விஷயத்தை பற்றி சொல்கிறார். இதைக் கேட்டவுடன் தங்கமயில் அம்மா கோபப்பட்டு பேசுகிறார். இதையெல்லாம் பார்த்த சுகன்யாவும், தங்கமயிலுக்கு சாதகமாக பேசுகிறார். பின் தங்கமயிலின் அம்மா, தேவையில்லாத ஐடியாவை கொடுக்கிறார்கள். இன்னொரு பக்கம் ராஜி, பயத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அப்போது போட்டியில் கலந்து கொண்ட சிலர் அவருக்கு ஆறுதல் சொல்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full