டான்ஸ் என்ற பெயரில் பிரச்சனையில் சிக்கிய ராஜி, உண்மையை அறிவாரா கதிர்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 5/9/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியன் கோபப்பட்டு ராஜியை திட்டி உன்னுடைய முடிவு. நீ என்ன வேணாலும் செய்து கொள் என்று சென்றார். அதற்குப் பின் கதிர், ராஜியை தனியாக அழைத்து சென்று சொல்லி புரிய வைத்தார். ஆனால், ராஜி ஏற்றுக் கொள்வதாகவே இல்லை. மறுநாள் காலையில் ராஜி தயாராகி வந்தார். அதை பார்த்த பாண்டியன், டான்ஸ் போட்டி பற்றி பேசாதே என்றார். அதற்கு ராஜி, அதை பற்றி தான் பேச வந்தேன் என்றார். ராஜி, கண்டிப்பாக நான் டான்ஸ் போட்டியில் கலந்து கொள்வேன் அடம் பிடித்தார்.

வீட்டில் உள்ள எல்லோருமே எவ்வளவோ எடுத்து சொல்லியுமே ராஜி கேட்கவில்லை. பாண்டியன், எதுவாக இருந்தாலும் உன் முடிவு என்று கிளம்பி விட்டார். உடனே ராஜி சென்னைக்கு கிளம்பினார். பின் கதிர்-ராஜி இருவரும் செல்லும் வழியில் வாக்குவாதம் ஏற்பட்டதால் கதிர், ராஜியுடன் சென்னை செல்லவில்லை. கதிர் கோபத்தில் வீட்டுக்கு வந்து விட்டார். இதை அறிந்த பாண்டியன், கதிரை திட்டினார். இன்னொரு பக்கம் ராஜி சென்னைக்கு சென்று காம்பிடிஷன் நடக்கும் இடத்தில் தன்னுடைய பெயரை கொடுத்து போட்டியில் கலந்து கொண்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோட்டில் ராஜி தனக்கு கொடுத்த ரூமிற்கு சென்று விட்டார். இருந்தாலுமே புது இடம் என்பதால் உள்ளுக்குள் பயப்பட்டார். பின் ராஜிக்கு போன் செய்து கதிர் விசாரித்தார். அதற்குப்பின் மீனாவுமே போன் செய்து ராஜியிடம் விசாரித்தார். இன்னொரு பக்கம் சக்திவேல் வீட்டில் குமார் கேஸ் விஷயமாக எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது சக்திவேல், அரசியை நீ கடத்தவில்லை என்று சொல்ல வேண்டும் என்றார். அதற்கு குமார், நான் தான் கடத்தினேன். அதுதானே உண்மை.

சீரியல் ட்ராக்:

தயவுசெய்து இனிமேல் இதைப் பற்றி பேசாதீர்கள் என்றார். பின், அப்பத்தா குமாரிடம் பேசி இருந்தார். அப்போது குமார், நான் தான் தவறு செய்தேன். அரசியை ரொம்ப கஷ்டப்படுத்தினேன். அதற்கான தண்டனையை அனுபவிக்கிறேன் என்று சொல்லி ரொம்ப எமோஷனாக அழுதார். இன்னொரு பக்கம் ராஜி டான்ஸ் காம்பிடிஷன் நடைபெற இருக்கிறது. அங்கு நடப்பது எல்லாம் பார்த்து ராஜிக்கு ஒன்னும் புரியவில்லை,பயப்பட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் டான்ஸ் போட்டி நடக்கும் இடத்தில் விஷயங்கள் எதுவும் பிடிக்காததால் ராஜி ரொம்பவே கவலையில் இருக்கிறார். பின் கதிருக்கு போன் செய்து நடந்ததை சொல்ல பார்க்கிறார் ராஜி. ஆனால், அவரிடம் எதுவும் சொல்லாமல் அமைதியாகி விடுகிறார். கதிருமே டான்ஸ் காம்பிடிஷனை பற்றி தனக்கு தெரிந்தவர்களிடம் விசாரிக்கிறார். ஆனால், அவர்கள் எதுவும் பெரிதாக தெரியவில்லை என்கிறார்கள். அதற்குப்பின் அந்த நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் ஒருவர் ராஜியிடம் தவறாக அப்ரோஜ் செய்கிறார்.

சீரியல் ட்ராக்:

இரவு நேரத்தில் ராஜியின் கதவைத் தட்டி உள்ளே போக பார்க்கிறார். ஆனால், ராஜி உஷார் ஆகி கொண்டு கதவை திறக்கவில்லை. இதெல்லாம் பார்த்து ராஜிக்கு ரொம்பவே பயந்து விடுகிறார். இன்னொரு பக்கம் பாண்டியன், நிலத்தை விற்று வரும் பணத்தை வைத்து கதிர்- செந்திலுக்கு கொடுக்கும் விஷயத்தை பற்றி சொல்கிறார். இதை கேட்டு மீனா-கதிர் இருவருமே வேணாம் என்றார்கள். ஆனால், பாண்டியன் கேட்க வில்லை. பின்மேடையில் இல்லாமல் தனியாக ஒரு ரூமிற்கு வர வைத்து ராஜியை டான்ஸ் ஆட சொல்கிறார்கள். சங்கடமாக ராஜிமே டான்ஸ் ஆடுகிறார். அதையெல்லாம் பார்த்து நடுவராக இருப்பவர்களுக்கு பிடிக்கவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full