கோமதி போட்ட அடியில் மிரண்டு போன குழலி, மன்னிப்பு கேட்ட பாண்டியன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் பயத்தில் தங்கமயில், போலி நகையை பற்றி தன்னுடைய அப்பா- அம்மாவிடம் பேசி புலம்பி இருந்ததை ராஜி- மீனா இருவருமே கேட்டு ஷாக்காகி இருந்தார்கள். கடைசியில் தங்கமயில், வேறு வழியில்லாமல் உண்மையை சொல்ல, மீனா- ராஜி இருவருமே நாங்கள் யாரிடமும் சொல்ல மாட்டோம் என்றார்கள். பின் நல்லபடியாக மூவருக்குமே தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷன் நடந்தது. பின் அப்பத்தாவிடம் மூன்று ஜோடிகளும் ஆசீர்வாதம் வாங்கி இருந்தார்கள்.
இதனால் அப்பத்தா மற்றும் இரண்டு மகன்களுக்கும் இடையே வாக்குவாதம் வந்தது. இன்னொரு பக்கம் குழலியின் பிரச்சனையை பற்றி பாண்டியன் கேட்க, தன்னை ரொம்ப கொடுமைப்படுத்துகிறார்கள் என்று குழலி கதறி அழுதார். இதனால் கோபப்பட்டு பாண்டியன், குழலியின் மாமியார் வீட்டுக்கு போனார்கள். அப்போது குழலியின் கணவர் நடந்ததை சொல்ல, பாண்டியனால் எதுவுமே பேச முடியவில்லை. குழலி தான் மொத்த குடும்பத்தையும் கொடுமைப்படுத்துகிறார் என்று தெரிந்ததும் பாண்டியன் ரொம்பவே வருத்தப்பட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பின் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு வீட்டிற்கு வந்தார் பாண்டியன். அங்கு பழனி, நடந்த எல்லாத்தையும் சொல்ல எல்லோருமே ஷாக் ஆனார்கள். இதை குழலியிடம் கேள்வி கேட்க, அவர் அழுது புலம்பி அங்கிருந்து கிளம்பி விட்டார். பாண்டியன், தன் மூன்று மருமகள்களையும் புகழ்ந்து பேசி இருந்தார். நேற்று எபிசோட்டில் கதிர், லீவு நாளில் கூட சவாரி இருக்கிறது என்று வெளியே கிளம்பி இருந்தார். இதை பார்த்து கோமதி வருத்தப்பட்டார். பின் சவாரிக்கு சென்ற இடத்தில் ஒரு பெண் மற்றும் அவர் ஆண் நண்பர்கள் டூர் போக வந்தார்கள்.
நேற்று எபிசோட்:
அந்த பெண்ணை அவர் நண்பர்கள் தவறாக கண்ணோட்டத்தில் பார்த்தார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் பாண்டியன், எல்லோரையும் அழைத்து தங்கமயிலுக்கு டீச்சர் வேலைக்கு பேசி இருக்கிறேன் என்று சொன்னவுடன் சந்தோஷப்பட்டார்கள். ஆனால், தங்கமயில் மட்டும் பதறி வேலைக்கு போகவில்லை என்று தயங்கி தயங்கி சொன்னார். உடனே கோமதி, நானாக இருந்தால் ஜாலியாக கிளம்பி இருப்பேன். நீ ஏன் தயங்கி இருக்கிறாய்? எல்லா வேலையும் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ சந்தோஷமாக வேலைக்கு போ என்று சொல்ல, பாண்டியன் எதுவும் பேசாமல் இருந்தார்.
இன்றைய எபிசோட்:
பின் தங்கமயில், சர்டிபிகேட் எல்லாம் அம்மா வீட்டில் இருக்கிறது என்று ஏதேதோ காரணத்தை சொன்னாலும் தங்கமயிலை வேலைக்கு அனுப்புவதில் உறுதியாக இருந்தார்கள். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் கதிர், வாடகைக்கு அழைத்து செல்லும் பெண்ணிடம் அவருடைய நண்பர்கள் தப்பாக நடக்க பேசுகிறார்கள். இதையெல்லாம் பார்த்து அந்த பெண் ரொம்ப பயப்படுகிறார். பின் அவர்கள் இறங்கி கடைக்கு போகும் போது அந்த பெண் கதிரிடம், சும்மா டூர் என்று சொன்னார்கள். ஆனால், அவர்கள் நடப்பது எனக்கு பயமாக இருக்கிறது என்று சொல்ல, பயப்படாதீர்கள் நான் இருக்கிறேன், பார்த்துக் கொள்கிறேன் என்றார் கதிர். இன்னொரு பக்கம் குழலி, மூன்று மருமகள்களையும் வேலை வாங்கிக்கொண்டு இருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
இதை பார்த்து கோமதிக்கு பயங்கர கோபம் வந்து, உன் வீட்டிற்கு கிளம்பி போ என்று என்றார். அதற்கு குழலி, போக சொல்ல முடியாது. இங்கேதான் இருப்பேன் என்று என்கிறார். பாண்டியன், அறிவுரை சொல்லியும் குழலி கேட்கவில்லை. அந்த சமயம் பார்த்து குழலியின் கணவர் வீட்டிற்கு வருகிறார். ஆனால், குழலி எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அமைதியாக இருக்கிறார். கோபத்தில் கோமதி, குழலியை அறைந்து விட்டு அறிவுரை சொல்லி கிளம்பு சொல்ல, அவரால் எதுவுமே பேச முடியவில்லை. தன்னுடைய கணவருடன் வீட்டிற்கு செல்கிறார். இதையெல்லாம் பார்த்து மூன்று மருமகள்கள் ஷாக் ஆகிவிடுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.