அரசி மீது சந்தேகப்படும் கோமதி, செந்திலின் ஆசையை பாண்டியன் நிறைவேற்றுவாரா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 8/3/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' அரசி- குமார் இருவரும் பேசி கொண்டு இருந்தார்கள். யாராவது பார்த்து விடுவார்களோ என்று அரசி பயந்தார். ஆனால், குமார் அதைப் பற்றி கவலை கொள்ளாமல் அரசியை அழைத்து கொண்டு பைக்கில் ஊர் சுற்றி இருந்தார். அந்த வழியாக பைக்கில் பழனி-சுகன்யா வந்தார்கள். உடனே அரசி ஒழிந்து கொண்டார். ஆனால், சுகன்யா பார்த்து விட்டார். பின் பயத்தில் அரிசி வீட்டிற்கு வந்து விட்டார். அப்போது கோமதி, ஏன் இவ்வளவு? என்று கேட்க, ஏதேதோ சொல்லி அரசி சமாளித்தார். இருந்தாலுமே கோமதிக்கு அரசி மீது சந்தேகம் வந்தது.

இன்னொரு பக்கம் பழனி, சுகன்யாவை தியேட்டருக்கு அழைத்து சென்றார். அது சின்ன தியேட்டர் என்பதால் சுகன்யா அங்கேயே சண்டை போட்டார். பழனி எடுத்து சொல்லியும் சுகன்யா கேட்கவே இல்லை. அதோடு பழனியிடம் 500 ரூபாய் தான் இருக்கிறது என்று சொன்னவுடன் பொது இடத்திலேயே ருத்ர தாண்டவம் ஆடி, சினிமாவே வேண்டாம் என்றார். பின் பழனி அண்ணன்கள் வீட்டிற்கு சென்ற சுகன்யா, தியேட்டருக்கு சென்ற கதையை சொன்னார். உடனே அவர்கள் பாண்டியன் குடும்பத்தை மோசமாக பேசி இருந்தார்கள். பழனிக்கு பயங்கரமாக கோபம் வந்தது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோட்டில் சுகன்யா, முறைத்துக்கொண்டே நான் வரவில்லை என்றார். பழனியால் எதுவும் பேசாமல் அங்கிருந்து வந்து விட்டார். பின் பாண்டியன் வீட்டில், படம் பார்க்கவில்லையா? இதற்கு தான் கிளம்பினாயா? என்றெல்லாரும் கேள்வி கேட்டார்கள். பழனி, உண்மை எதுவுமே பேச முடியாமல் தயங்கி இருந்தார். பழனியின் நிலைமை புரிந்து கொண்டு கதிர்- செந்தில் இருவருமே அவருக்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார்கள். ஆனால், வழக்கம்போல் பாண்டியன் எல்லோரையும் திட்டிக் கொண்டிருந்தார்.

நேற்று எபிசோட்:

அதற்குப் பின் மாடியில் கதிர்,செந்தில், சரவணன், பழனி நான்கு பேருமே கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தார்கள். கவலை எல்லாம் மறந்து பழனி சந்தோஷமாக இருந்தார். ஆனால், கதிருக்கு பழனியின் நடவடிக்கையில் சந்தேகம் வந்தது. இன்னொரு பக்கம் தங்கமயில், தன்னுடைய அம்மாவிடம் போன் பேசினார். அப்போது அவர், நீ கர்ப்பமானால் வேலைக்கு நிறுத்தி விடுவார்கள். அதற்கான ஏற்பாடு செய் என்றார். இன்னொரு பக்கம் அரசி படிப்பதாக சொல்லி எதிர் வீட்டில் இருக்கும் குமாரிடம் கடலை போட்டுக் கொண்டிருந்தார். இதை சுகன்யா பார்த்து விட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அரசியிடம் சுகன்யா, குமாரை திருமணம் செய்து கொள். உனக்கு நான் துணையாக இருக்கிறேன். இரண்டு வீட்டு ப்ரச்சனை தீர்ந்து விடும் என்று அவருடைய மனதை சலவை செய்கிறார். அரசியுமே சுகன்யா சொல்வதற்கெல்லாம் சரி என்கிறார். அந்த சமயம் பார்த்து மீனா வெளியே வந்தவுடன் இருவரும் பேச்சை மாற்றிக் கொள்கிறார்கள். அதற்குப்பின் அரசி போன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த கோமதி கோபப்பட்டு திட்டுகிறார். அதற்கு பின் கோமதி, அரசி போனை வாங்கி செக் பண்ணுகிறார். பின் அரசியை திருப்பி திருப்பி கோமதி கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

இதையெல்லாம் பார்த்து மீனாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. உடனே மீனா, அரசி எந்த தவறும் செய்ய மாட்டாள் என்று அவளுக்கு சப்போர்ட் செய்கிறார். ஆனால், கோமதிக்கு தான் பயமாக இருக்கிறது. அதற்குப் பின் பழனி, சுகன்யா வீட்டுக்கு வருவாளா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது வந்த செந்தில், கவர்ன்மென்ட் வேலை ரெடியாக இருக்கிறது. 10 லட்சம் பணம் கட்ட வேண்டும் என்று சொல்கிறார். உடனே பாண்டியன் வருகிறார். பின் பாண்டியன் இடம் கதிர், செந்திலுக்கு கிடைக்கும் கவர்மெண்ட் வேலையை பற்றி சொல்கிறார். அது மட்டும் இல்லாமல் பணம் கட்ட வேண்டும் என்று சொன்னவுடன் பாண்டியன் ஷாக் ஆகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full