பாண்டியனை பழிவாங்க குமார் செய்த வேலை, பதிலடி கொடுத்த அரசி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் தங்கமயில்- சரவணன் இருவருமே ரூமில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது தங்கமயில், உங்களுக்கு அப்பாவானது சந்தோசமாக இல்லையா? என்று கேட்டார். அதற்கு சரவணன், அப்பா ஆனதை நினைத்தால் எல்லோரும் சந்தோஷம்தான். இருந்தாலும் நீ சொல்வதில் எனக்கு சந்தேகம் தான் வந்தது. என்னால் முன்பு போல் உன்னிடம் பழக முடியாது. என்னுடைய குழந்தைக்கு அப்பாவாக, குழந்தையின் அம்மாவிற்கும் எந்த பிரச்சனையும் வராமல் பாதுகாப்பேன். ஆனால், பழையபடி நான் உன்னிடம் இருப்பேன் என்று மட்டும் நினைக்காதே. மீண்டும் நீ பொய் சொன்ன விஷயம் தெரிந்தால் கண்டிப்பாக உன்னை விட்டு நான் பிரிந்து விடுவேன் என்று சொன்னார்.
இன்னொரு பக்கம் ராஜி, எதற்காக அரசியை கஷ்டப்படுத்துகிறார்? நானும் அந்த வீட்டில் வாழ்கிறேன். கொஞ்சம் கூட உனக்கு அக்கறை இல்லையா? என்று கேட்டார். குமார், ராஜியை திட்டி விட்டு அரசியை கஷ்டப்படுத்தினால் தான் பாண்டியன் குடும்பம் கஷ்டப்படும் என்று சொன்னார். இதனால் ராஜிக்கு பயங்கர கோபம் வந்தது. பின் ராஜி, தன்னுடைய அப்பாவை சந்தித்து குமார் செய்த விஷயத்தை பற்றி சொன்னார். ஆனால், அவர் அதைப் பற்றி பெரிதாக கண்டு கொள்ளவே இல்லை. உடனே ராஜி, அரசி வாழ்க்கையில் பிரச்சனை என்றால் என்னுடைய வாழ்க்கையிலும் தான் பிரச்சனை வரும். யோசித்து முடிவெடுங்கள் என்று சொன்னார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் குமாரிடம் அரசி, என்னிடம் போடுவதற்கு துணிகள் இல்லை. ஷாப்பிங் பண்ணனும் என்று சொன்னார். அதற்கு குமார் முடியாது என்று திட்டி விட்டு வந்தார். அதற்குப்பின் முத்துவேலிடம் அரசி, எனக்கு துணி எடுக்கணும். குமாரை அழைத்துப் போக சொல்லுங்கள் என்று சொன்னார். உடனே முத்துவேல், அந்தப் பொண்ணு கேட்பதையெல்லாம் வாங்கி கொடு என்று சொன்னார். இதை பார்த்த சக்திவேல் சந்தேகப்பட்டு குமாரிடம் விசாரித்தார். அப்போது குமார், ராஜி சொன்னதை சொன்னார். அதற்கு சக்திவேல், நீ என்ன வேணாலும் செய். எல்லார் கண்ணிலும் ரத்தம் தான் வரவேண்டும் என்று தன் மகனை ஏத்தி விட்டார்.
நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் முத்துவேல்- சக்திவேல் இருவருமே ரோட்டில் நடந்து கொண்டு நடந்து வந்தார்கள். அப்போது எதிரே வந்த பாண்டியனை பார்த்த முத்துவேல், உங்களுடைய மகளுக்கு எந்த பிரச்சனையும் எங்கள் வீட்டில் இல்லை. என்னுடைய மகளுக்கும் பிரச்சினை வராது என நினைக்கிறேன் என்று சூசகமாக பேசி இருந்தார். இதையெல்லாம் கேட்டு பாண்டியன் எதுவும் சொல்லாமல் அமைதியாக சென்று விட்டார். இதை பார்த்த சக்திவேலுக்கு பயங்கர கோபம் வந்தது. இன்னொரு பக்கம் தங்கமயில், சரவணனுக்கு பார்த்து பார்த்து சமைத்து பரிமாறி இருந்தார். இருந்தாலுமே சரவணன் அதை பெரிதாக கண்டு கொள்ளவே இல்லை. கடைசியில் குமார், திட்டிக்கொண்டே அரசியை அழைத்துக் கொண்டு துணி கடைக்கு போனார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அரசி, ஒவ்வொரு துணியாக வைத்து பார்த்து குமாரை வெறுப்பேத்திக் கொண்டிருக்கிறார். இதனால் குமார் கடுப்பாகி வீட்டிற்கு சென்று விடுகிறார். அரசி தனக்கு தேவையான ஷாப்பிங் செய்து கொண்டிருக்கிறார். பின் வீட்டிற்கு வந்த குமார், தன்னுடைய அப்பாவிடம் தினம் தினம் அரசி செய்யும் சேட்டைகள் எல்லாம் சொல்லி கொண்டிருக்கிறார். இதனால் கோபப்பட்ட சக்திவேல், நீ அவளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். அவள் வடிக்கிற ஒவ்வொரு கண்ணீருக்கும் பாண்டியனுக்கு ரத்தம் வரவேண்டும் என்றெல்லாம் தன் மகனை ஏற்றி விடுகிறார். பின் குமார், அரசியை துணி கடையில் விட்டு வந்த விஷயத்தை சொன்னவுடன் சக்திவேல் சந்தோஷப்படுகிறார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் அரசி துணியெல்லாம் எடுத்துவிட்டு குமார் கார்டை வைத்து மொத்த பணத்தையும் கொடுத்து விடுகிறார். பின் அக்கவுண்டில் இருந்து பணம் போன விஷயம் தெரிந்த உடன் குமார் பதறி அடித்துக் கொண்டு துணி கடைக்கு வருகிறார். அப்போது அரசி, எவனாவது பின் நம்பரை போனில் சேவ் பண்ணி வைத்திருப்பானா? என்று சொல்கிறார். கோபத்தில் குமார், துணியைக் கொண்டு போய் கடையில் கொடு என்கிறார். ஆனால், அரசி முடியாது என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் தங்கமயிலை வீட்டில் உள்ள எல்லோருமே பார்த்து பார்த்து கவனிக்கிறார்கள். தங்கமயிலுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.