அரசி காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட குமார், ஆத்திரத்தில் சக்திவேல் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 15/9/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோமதி, குமார் மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்க சொல்லி தைரியமாக பாண்டியனிடம் பேசினார். இதனால் கோபப்பட்ட பாண்டியன் முடியாது என்று கோமதியை திட்டினார். இதனால் கோமதி, தன் அண்ணன் குடும்பத்தை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டு பேசி இருந்தார். ஆனால், பாண்டியன் மனம் மாறவே இல்லை. மறுநாள் காலையில் கோர்ட்டுக்கு குமார் கிளம்பினார். அப்போது குமார் வீட்டில் உள்ள எல்லோருமே குமாரை நினைத்து கதறி அழுதார்கள்.

கோர்ட்டில் குமார்- அரசி கேஸ் நடந்தது. அப்போது குமார், தான் செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு , தண்டனையும் கேட்டார். இதையெல்லாம் பார்த்து அரசிக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்குப்பின் அரசி, இந்த கேஸை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்றார். அதைக் கேட்டவுடன் சக்திவேல், குமார், பாண்டியன் குடும்பத்தில் எல்லோரும் ஷாக் ஆனார்கள். அதற்கு பின் பாண்டியன்- அரசி இருவரும் வீட்டில் பேசியதை காண்பித்தார்கள். அப்போது அரசி, இந்த கேசை வாபஸ் வாங்கி விட்டால் ரெண்டு குடும்பமும் சேர்ந்து விடும்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அம்மா, அப்பத்தா ரொம்பவே வருத்தப்பட்டார்கள். நான் அந்த வீட்டில் இருக்கும் வரை என்னை அப்பத்தா, அத்தைகள் எல்லோருமே நன்றாகத்தான் பார்த்துக் கொண்டார்கள். இன்னும் ரெண்டு குடும்பத்தின் பகை அதிகமாக தான் ஆகும். அதனால் நான் கேசை வாபஸ் வாங்குகிறேன் என்றார். அதனால் பாண்டியனுமே சரி என்றார். பின் கோர்ட்டில் அரசி, இந்த விஷயத்தால் ரெண்டு குடும்பத்தில் உள்ளவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். செய்த தவறை உணர வேண்டும் என்று நினைத்தேன். மற்றபடி அவருக்கு தண்டனை வாங்கி தருவதில் எனக்கு விருப்பமில்லை என்றார்.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் கோர்ட்டில் குமார், அரசியின் காலை பிடித்து மன்னிப்பு கேட்கிறார். அதை பார்த்து பாண்டியன் குடும்பத்தில் எல்லோருமே ஷாக் ஆகிறார்கள். அப்போது குமார், நான் உனக்கு செய்தது பெரிய துரோகம். நீ கேசை வாபஸ் வாங்குவாய் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. என்னை மன்னித்துவிடு என்று அழுது கெஞ்சுகிறார். இதையெல்லாம் பார்த்த சக்திவேல் கோபப்பட்டு குமாரை திட்டுகிறார். ஆனால், குமார் அதைப் பற்றி பெரிதாக கவலைப்படாமல் அரசி இடம் எமோஷனலாக பேசிக் கொண்டிருக்கிறார். அதற்குப்பின் வீட்டிற்கு குமாரை அழைத்து வருகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

கோர்ட்டில் அரசி கேஸ் வாபஸ் வாங்கின விஷயத்தை பெருமையாக பேசுகிறார்கள். இதனால் கோபப்பட்ட சக்திவேல், அரசி குடும்பத்தை பற்றி மோசமாக திட்டிக் கொண்டிருக்கிறார். மாரி- வடிவு எல்லோருமே பாண்டியன் குடும்பத்தை பற்றி பெருமையாக பேசுகிறார்கள். குமாரும் தான் செய்த தவறை உணர்ந்து பேசுகிறார். இன்னொரு பக்கம் அரசி, கேஸ் வாபஸ் வாங்கியதைப் பற்றி பாண்டியன் வீட்டில் எல்லோருமே மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து வந்த அப்பத்தா, அரசி-பாண்டியன் இடம் நன்றி சொல்லி எமோஷனலாக பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full