கோர்ட்டில் விசாரணைக்கு வந்த குமார் கேஸ், அரசி கொடுத்த வாக்குமூலம் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 14/8/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் ராஜி, நான் இந்த வீட்டை விட்டு வரமாட்டேன் என்று சொன்னார். இதை கேட்டு வடிவு-முத்துவேல் எதுவுமே பேசாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள். ராஜி பேசியதை கேட்டு பாண்டியன் குடும்பமே சந்தோஷப்பட்டது. கதிர் சந்தோஷத்தில் யாருக்கும் தெரியாமல் ரூமுக்குள் நடனமாடினார். இதை பார்த்த மீனா சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் மீனா, ராஜி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ராஜி, கதிர் தனக்காக எதுவும் பேசவில்லை என்று வருத்தப்பட்டார். உடனே ராஜி, கதிர் ரொம்ப சந்தோஷப்பட்டான். அவனுக்கும் உள்ளுக்குள் உன் மீது பாசம் இருக்கிறது என்று சொன்னார்.

இன்னொரு பக்கம் முத்துவேல் வீட்டில் எல்லோருமே ராஜி பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். சக்திவேல், ராஜியை கட்டாயப்படுத்தியாவது இந்த வீட்டிற்கு அழைத்து வந்துவிடலாம் என்று சொன்னார். இதைக் கேட்ட முத்துவேல், இந்த விஷயத்தை இதோடு விடுங்கள். ராஜி அங்கேயே இருக்கட்டும் என்று சொன்னார். இதனால் சக்திவேல் பயங்கரமாக கோபப்பட்டார். இன்னொரு பக்கம் பாண்டியன், குமார் மீது கொடுத்த கேஸ் கோர்ட்டுக்கு வருவதால் அரசி அழைத்து வர சொன்னார். அதனால் நாளை கோர்ட்டுக்கு போகலாம் என்று சொன்னார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோட்டில் கோர்ட்டில் குமாரின் கேஸ் நடக்க இருப்பதால் அரசியை அழைத்து போகணும் என்று கோமதி ரொம்பவே மனமடைந்து வேதனையில் இருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே கோமதிக்கு ஆறுதல் செய்தும் அவர் கேட்கவில்லை. பின் வீட்டில் உள்ள எல்லோருமே அரசிக்கு துணையாக பேசி இருந்தார். அதற்கு அரசி, நானே பார்த்துக்கொள்கிறேன். எனக்கு எந்த பயமும் இல்லை என்று தைரியமாக பேசினார். இன்னொரு பக்கம் முத்துவேல் குடும்பத்தில் எல்லோருமே குமார் மீண்டும் ஜெயிலுக்குப் போய் விடுவானா? என்று வருத்தப்பட்டு புலம்பி கொண்டிருந்தார்கள்.

நேற்று எபிசோட்:

சக்திவேல் வழக்கம் போல் தன் அண்ணனையும், ராஜியையும் ஏளனமாக பேசிக் கொண்டிருக்க, கோபத்தில் முத்துவேல் திட்டிவிட்டு சென்றார். இன்னொரு பக்கம் பாண்டியனை சந்தித்த அப்பத்தா, தயவு செய்து கேசை வாபஸ் வாங்கி விடுங்கள். வீட்டில் ஒரே பிரச்சினையாக இருக்கிறது என்று சொன்னார். அதற்கு பாண்டியன், என் மகன் தவறு செய்திருந்தாலும் நான் தண்டனை தான் வாங்கிக் கொடுப்பேன். குமாருக்கு நீங்கள் புத்திமதி சொல்லி வளர்த்திருக்கணும். இனிமேல் என்னால் எதுவும் செய்ய முடியாது என்று அங்கிருந்து கிளம்பி விட்டார். பின் வீட்டிற்கு வந்த பாண்டியன், அரசியை கோர்ட்டுக்கு கிளம்ப சொன்னார். பின் கோமதி கோர்ட்டுக்கு போனார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் குமார்- அரசி கேஸ் நடக்கிறது. கோமதி, யாராவது என்ன சொல்வார்களோ? என்ற பயத்தில் புலம்பிக்கொண்டே இருக்கிறார். பின் கோர்ட்டில் குமாரை விசாரிக்கிறார்கள். அதற்குப்பின் அரசியையும் மாற்றி மாற்றி கேள்வி கேட்டு விசாரிக்கிறார்கள். இதை எல்லாம் பார்த்து கோமதி ரொம்ப பதறுகிறார். அதற்குப்பின் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வேறொரு தேதிக்கு ஒத்தி வைக்கிறார். பின் வீட்டில் கோர்ட்டில் நடந்ததை பற்றியெல்லாம் விசாரிக்கிறார்கள். கோமதி, பாண்டியன் சொன்னார்கள்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் கதிரிடம் பாண்டியன், பேங்கிற்கு போய் கையெழுத்து போடுகிறேன். லோன் எடுத்துக் கொள் என்று சொல்கிறார். இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். பின் பாண்டியன், நான் லோன் வாங்கி தருவேன். உன்னுடைய விருப்பத்திற்கு எல்லாம் ஆட முடியாது என்று கண்டிஷன் போடுகிறார்.
இதைக் கேட்டு கோபப்பட்ட கதிர் தன்னுடைய அம்மாவிடம் சொல்கிறார். கோமதிக்கு ஒன்றுமே புரியவில்லை. பின் கதிர், அப்பா எனக்கு எந்த உதவியும் செய்ய தேவையில்லை. நீங்களே சொல்லிடுங்க என்கிறார். உடனே கோமதி, நீங்கள் எந்த கையெழுத்தும் போட்டு தர தேவையில்லை. அவனே பார்த்துக்கொள்ளட்டும் என்று சொல்கிறார். பாண்டியனும் கோபத்தில் திட்டி விட்டு சென்று விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full