அரசியை மோசமாக பிளாக்மெயில் செய்யும் குமார், பாண்டியனுக்கு தெரிய வருமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 15/5/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் தங்கமயில் உண்மை அறிந்து சரவணனுக்கு இடிமேல் இடி விழுந்தது. தங்கமயில் மன்னிப்பு கேட்டு கதறி அழுதார். ஆனால், சரவணன் அதை கேட்காமல் கோபத்தில், இதோடு உன் மேல் இருந்த நம்பிக்கை போனது. இனி நம் உறவு முடிந்து விட்டது என்று அங்கிருந்து சென்று விட்டார். தங்க மயில், என்ன செய்வது என்று புரியாமல் தலையில் அடித்துக் கொண்டு அழுதார். இன்னொரு பக்கம் சுகன்யா, அரசியின் மனதை மாற்ற முயற்சி செய்தார். ஆனால், அரசி கேட்கவில்லை. அப்போது போன் செய்த மாப்பிள்ளை சதீஷ், அரசிடம் பேசி இருந்தார். அரசியும் சதீஷிடம் நன்றாக பேசினார். இதை கேட்டு சுகன்யா ஷாக் ஆனார்.

தங்கமயில் என்ன செய்வதென்று புரியாமல் தன்னுடைய அம்மாவிடம் போன் செய்து நடந்ததை சொன்னார். அதற்கு அவர், எதற்கு உண்மை சொன்னாய்? என்று திட்டி இருந்தார். வேறு வழியே இல்லை என்று தங்கமயில் அழுதார். அதற்கு பின் அந்த இடத்திற்கு வந்த சரவணன், உன் மீது எனக்கு நம்பிக்கையே இல்லை. நீ எது சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். இதனால் வீட்டில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று தான் நான் வந்தேன். இனி நமக்குள் எந்த உறவும் கிடையாது. அரசி கல்யாணம் முடியட்டும் என்று தங்கமயிலை வீட்டிற்கு அழைத்து வந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே கல்யாண வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது சரவணன், தங்கமயில் இனி வேலைக்கு போக வேண்டாம். கல்யாணம் முடியும் வரை அம்மாவுடன் இருக்கட்டும் என்று சொன்னவுடன் வீட்டில் உள்ள எல்லோருமே சரி என்று ஒத்துக் கொண்டார்கள்.
இன்னொரு பக்கம் பைக்கில் தன்னை கதிர் அழைத்து போகாது நினைத்து ராஜி வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அப்போது வந்த கதிர், ராஜியை எழுப்பி பைக்கில் அழைத்து லாங் ட்ரைவ் சொன்னார்

இன்றைய எபிசோட்:

இன்றைய எபிசோட்டில் கல்யாணத்திற்கு துணி எடுப்பதற்காக பாண்டியன் எல்லோரையும் அழைக்கிறார். அப்போது கோமதி, எல்லோருமே போயிட்டு வாருங்கள். வீட்டில் இருக்கும் வேலையை நான் பார்க்கிறேன் என்று சொல்கிறார். உடனே சரவணன், நீங்கள் வீட்டில் எப்படி தனியாக சமாளிப்பீர்கள்? தங்கமயில் வீட்டிலேயே இருக்கட்டும் என்று சொல்கிறார். அதற்கு பாண்டியனும் ஒத்துக்கொள்கிறார்.
அதற்குப் பின் ரூமில் தங்கமயில், சரவணனிடம் மன்னிப்பு கேட்கிறார். சரவணன், என் தங்கை கல்யாணம் முடியும் வரை நமக்குள் எந்த பேச்சு வார்த்தையுமே வேண்டாம்.

சீரியல் ட்ராக்:

உனக்கு இந்த வீட்டில் எந்த உரிமையும் கிடையாது. அரசி கல்யாணம் முடிந்த உடன் எல்லா விஷயத்தையும் நான் அப்பா அம்மாவிடம் சொல்லப் போகிறேன். அதற்குப்பின் எதுவாக இருந்தாலும் அவர்கள் முடிவெடுக்கட்டும் என்று சொல்கிறார். தங்கமயில், இதனால் ரொம்பவே உடைந்து போகிறார். பின் வீட்டில் வேலை எல்லாம் முடித்து சரவணனுக்காக சாப்பாடு எடுத்துக்கொண்டு தங்கமயில் செல்கிறார். அதற்கு சரவணன், தங்கமயிலை மோசமாக திட்டி அனுப்பி விடுகிறார். இதனால் வேதனையில் தங்கமயில் தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று நடந்ததை சொல்லி வருத்தப்படுகிறார். அவர்களுமே அவருக்கு ஆறுதல் சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் குமார், அரசியின் திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று தாங்கள் இருவரும் எடுத்த போட்டோவை தவறாக எடிட் பண்ணி தர சொல்கிறார்.

https://www.youtube.com/watch?v=nEl9d9yWEmA

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் குமார், அரசி போட்டோவை தவறாக மோசமாக எடிட் செய்து சுகன்யாவுக்கு அனுப்பி வைக்கிறார். இதை சுகன்யா, அரசி இடம் காண்பித்து, என்ன இது? என்று கேட்க, பயத்தில் அரசி, நாங்கள் இருவரும் அந்த மாதிரி எடுக்கவில்லை என்றார். பின் குமார், அரசிக்கு போன் செய்து பேசுகிறார். அப்போது குமார், நீ வேற யாராவது திருமணம் செய்து கொண்டால் ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டுவேன் என்று பயமுறுத்துகிறார். பின் அரசி, தன் அப்பா-அண்ணன்களிடம் உண்மையை சொல்ல நினைக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full