பாண்டியன் குடும்பத்தை பழிவாங்க குமார் செய்த வேலை, பதிலடி கொடுத்த அரசி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் தங்கமயில் அம்மா, இன்னும் இரண்டு நாள்தான் உனக்கு டைம். நீ உன்னுடைய மாமியார் வீட்டுக்கு கிளம்பும் வேலையை பார் என்று தங்கமயிலை மோசமாக திட்டி விட்டார். இதனால் தங்கமயில், சரவணன் வேலை செய்யும் இடத்திற்கு போனார். ஆனால், அவர் அங்கு இல்லை. பின் சரவணனுக்கு போன் செய்து பேசி இருந்தார் தங்கமயில். அப்போது சரவணன் திட்டி போனை வைத்து விட்டார். இன்னொரு பக்கம் சக்திவேல்- முத்துவேல் எல்லோருமே பணம் பறிபோனதை நினைத்து புலம்பி கொண்டிருந்தார்கள். வீட்டில் உள்ள எல்லோருமே வரி கட்டவில்லையா? என்ன பிரச்சனை? என்றெல்லாம் கேட்க, சக்திவேல் வழக்கம்போல எல்லோரிடமும் கத்தி கொண்டிருந்தார்.
பின் அவர், அரசி வந்த நேரம் தான் இப்படி எல்லாம் நடக்கிறது என்று திட்டிக் கொண்டிருந்தார். இதனால் அப்பத்தா சக்திவேலை திட்டினார். இன்னொரு பக்கம் செந்தில், பணத்தை மாமனார் இடம் கொடுத்த விஷயத்தை சொன்னவுடன் மீனா ஷாக் ஆனார். உடனே மீனா, நீங்கள் பணத்தை வாங்கி பேங்கில் போடுங்கள். இல்லையென்றால் உண்மையை மாமாவிடம் சொல்லுங்கள் என்றார். ஆனால், செந்தில் அமைதியாக இருந்தார். அதற்கு பின் ரூமில் குமார், அரசி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது குமார், நீ போன் செய்தாயா? என்று கேட்க, இந்த உண்மை தெரிந்திருந்தால் கண்டிப்பாக நானே சொல்லி இருப்பேன் என்று அரசி திமிராக பேசினார். இதனால் கோபத்தில் குமார், அரசியின் கழுத்தைப் பிடித்து நெருக்குகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
குமார், அரசியின் கழுத்தை ரொம்ப வேகமாக அழுத்தி பிடித்தார். உடனே அரசி கோபத்தில் குமாரின் கையை முறுக்கி அவனுடைய கழுத்தையே நெருக்கினார். வலி தாங்க முடியாமல் குமார் கத்தினார். பின் குமாரை பிடித்து கீழே தள்ளி விட்டார் அரசி. சத்தத்தை கேட்டு வீட்டில் உள்ள எல்லோருமே வந்து கதவை திட்டினார்கள். உடனே அரசி கதவை திறந்து குமார் தன்னை அடித்தது போல அழுது டிராமா செய்தார். ஆனால், குமார் சொல்வதை யாருமே கேட்கவில்லை. வீட்டில் உள்ள எல்லோருமே குமாரை தான் திட்டி விட்டு போனார்கள். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டில் எல்லோருமே பேசிக் கொண்டிருந்தார்கள்.
கடந்த வாரம் எபிசோட்:
அப்போது மீனா, செந்தில் இடம் உண்மையை சொல்ல சொன்னார். அப்போது தேர்வின் ரிசல்ட் வந்ததால் எல்லோருமே அதைப்பற்றி தான் பேசி இருந்தார்கள். அப்போது ராஜி, பாஸாகி விட்டேன் என்று ரொம்ப சந்தோஷப்பட்டார். ஆனால், கதிர் 4 சப்ஜெக்ட்டில் பெயில் என்று சொல்வதால் மொத்த குடும்பமே வருத்தப்பட்டது. பாண்டியன் வழக்கம்போல் கதிரை திட்டி விட்டு சென்றார். இன்னொரு பக்கம் அரசி, எல்லா தேர்விலும் 80 சதவீதத்திற்கும் மேல் அதிக மார்க் வாங்கி பாஸாகிவிட்டார். இதை அப்பத்தாவிடம் சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டார். உடனே அப்பத்தா, அரசியை கோயிலுக்கு அழைத்து செல்ல குமாரிடம் சொன்னார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் குமார், கோவிலுக்கு எல்லாம் கூட்டிட்டு போக முடியாது என்று சொல்கிறார். உடனே அப்பத்தா திட்டியவுடன் வேறு வழியில்லாமல் அரசியை அழைத்துக் கொண்டு குமார் செல்கிறார். இன்னொரு பக்கம் ராஜி, கதிர் இருவருமே வெளியே சென்று கொண்டிருக்கிறார்கள். அப்போது ராஜி நல்ல மதிப்பெண் எடுத்ததை நினைத்து பெருமையாக கதிர் பேசுகிறார். பின் கதிர் இருப்பதை பார்த்தவுடன் குமார், அரசியை வம்பு இழுத்து அவளை தள்ளி விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
இதையெல்லாம் பார்த்து கதிருக்கு பயங்கர கோபம் வருகிறது. உடனே அரசி ஏதோ சொல்லி சமாளித்து விடுகிறார். அதற்குப்பின் குமார், பாண்டியன் முன் அரசியை அசிங்கப்படுத்த நினைக்கிறார். அங்கேயும் அரசி சமாளித்து விடுகிறார். பின் மீண்டும் பாண்டியனிடம் வம்பிழுக்க குமார் போகிறார். உடனே போலீஸ் அந்த இடத்திற்கு வந்தவுடன் அரசி, குமார் என்னை அடித்துக் கொடுமை படுத்துவதாக புகார் கூறுகிறார். இதனால் குமாருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை, அமைதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.