குமார் செய்யும் டார்ச்சலால் பதறும் அரசி, சந்தோஷத்தில் பாண்டியன் குடும்பம் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் கல்யாணத்திற்கு தேவையான உடைகளை எல்லாம் எடுத்து கொண்டு பாண்டியன் குடும்பம் வந்தது. அப்போது செந்தில்- கதிர் இருவருமே அரசி திருமணத்தை பற்றி ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார்கள். அதற்கு பின் அரசி தன்னுடைய கல்யாண புடவை எல்லாம் எடுத்து பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார். அப்போது வந்த சுகன்யா, அரசி குமாருடன் இருக்கும் நெருக்கமான புகைப்படத்தை காண்பித்தார். அதை பார்த்தவுடன் அரசி ஷாக் ஆகிறார். உடனே சுகன்யா, இந்த வேலையெல்லாம் நீ செய்துவிட்டு வேறு ஒரு திருமணமா? என்று கேட்டார். அதற்கு அரசி, நான் எதுவும் செய்யவில்லை. இந்த போட்டோ உண்மை இல்லை என்று கதறி இருந்தார். பின் குமாரிடம் போன் பேச சொல்கிறார் சுகன்யா. ஆனால், அரசி முடியாது என்றார்.
சுகன்யா வலுக்கட்டாயமாக குமாரிடம் அரசியை பேச வைத்தார். அப்போது குமார், நீ என்னை தவிர வேறு யாரையாவது திருமணம் செய்தால் இந்த போட்டோவை ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டுவேன் என்று மிரட்டி இருந்தார். அந்த சமயம் பார்த்து ராஜி உள்ளே வந்தவுடன் சுகன்யா போனை வாங்கிக் கொண்டு வெளியே சென்று விட்டார். அப்போது ராஜி, சித்தி ஏதாவது சொன்னார்களா? குமார் ஏதாவது பிரச்சனை செய்கிறானா? என்று கேட்டார். ஆனால், அரசி எதுவும் இல்லை என்று சமாளித்தார். பின் தன்னுடைய அப்பாவிடம் எல்லா உண்மையும் சொல்லிவிடலாம் என்று அரசி வெளியே வந்தார். பாண்டியன், மகளின் திருமணத்தை பற்றியும் மாப்பிள்ளை பற்றியும் பெருமையாக பேசிக் கொண்டிருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அதனால் அரசி எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருந்தார். அரசி, குமார் செய்த கேவலமான வேலையை பாண்டியனிடம் சொல்ல பார்த்தார். ஆனால், அவரால் கடைசி வரை சொல்லவே முடியவில்லை. அதற்கு பின் அரசிக்கு போன் செய்த குமார், நீ வெளியே வரவேண்டும். நான் சொல்வதை எல்லாம் நீ கேட்க வேண்டும். இல்லையென்றால், உன் போட்டோவை ஊர் முழுக்க ஒட்டுவேன் என்று மிரட்டி இருந்தார். அதனால் வேறு வழியில்லாமல் அரசியும் வெளியே வந்தார். ஆனால், வெளியில் அவருடைய அண்ணன்கள் இருப்பதை பார்த்து அமைதியாக விட்டார். குமாரும் உள்ளே சென்று விட்டார்.
கடந்த வாரம் எபிசோட்:
அப்போது அவருடைய அண்ணன்கள் கல்யாணத்தைப் பற்றி ரொம்ப சந்தோஷமாக அரசி இடம் பேசி இருந்தார்கள். அரசி தன்னுடைய அண்ணன்களிடமாவது உண்மையை சொல்லலாம் என்று நினைத்தார். அந்த சமயம் பார்த்து கோமதி வந்ததால் அமைதியாகிவிட்டார். இன்னொரு பக்கம் தங்கமயில், சரவணனிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால், சரவணன் அதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்தார். இதனால் வேதனையில் தங்கமயில் அழுது புலம்பி இருந்தார். அதற்குப் பின் அரசி, குமார் செய்த வேலையை நினைத்து அழுது புலம்பி இருந்தார். அப்போது கோமதி, என்ன ஆச்சு? என்ன நடந்தது? என்று கேட்டார். கடைசி வரை உண்மையை சொல்லாமல் அரசி ஏதோ சமாளித்து விட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் அரசி- குமார் போட்டோவை பாண்டியன் வீட்டிற்கு வெளியே ஒட்டி இருக்கிறார்கள். இதை பார்த்தவுடன் பாண்டியன் குடும்பம் மொத்தமாக அழுது கொண்டிருக்கிறது. அதற்கு பின்பு தான் அது அரசி கண்ட கனவு என்பது என்று தெரிகிறது. அதற்கு பின் வீட்டில் திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கிறது. எல்லோரும் வீட்டில் மெகந்தி வைத்துக் கொண்டு சந்தோசமாக திருமணத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது குமார், கோமதி மொபைலுக்கு கால் செய்து வேறொருவர் பேசியது போல் அரசி இடம் பேசுகிறார்.
சீரியல் ட்ராக்:
அப்போது குமார், இந்த திருமணம் நடக்காது. உன் அப்பா தேவையில்லாமல் கடன் வாங்கி இதெல்லாம் செய்கிறார். நான் சொல்வதைக் கேட்டால் உன்னுடைய மானம் போகாது என்றெல்லாம் பேசி மிரட்டுகிறார். அரசிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் ரொம்ப பயப்படுகிறார். மறுநாள் காலையில் எல்லோருமே நலங்கு வைப்பதற்கு தயாராக இருக்கிறார்கள். அப்போது ராஜி, கதிருகாக மேட்சிங் உடையை எடுத்துக் கொடுக்கிறார். ஆனால், கதிர் போட மாட்டேன் என்று சொல்வதால் ராஜி வருத்தப்பட்டு சென்று விடுகிறார். அதற்குப்பின் கோமதி, தன்னுடைய மருமகளிடம் கழுத்து நிறைய நகைகளை போட்டு வாருங்கள் என்று சொன்னவுடன் தங்கமயில் பதறுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.