அரசிடம் பேச குமார்- சுகன்யா சேர்ந்து போடும் திட்டம், கோமதி என்ன சொல்லப் போகிறார்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 31/3/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் கோமதி, திருமணமே செய்து வைத்துவிடலாம் என்று சொன்னார். பாண்டியன், அரசி இடம் திருமணத்தை பற்றி பேசி இருந்தார். அரசி, நான் தெரியாமல் தவறு செய்து விட்டேன். நீங்கள் என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன். எனக்கு திருமணத்திற்கு சம்மதம் என்று சொன்னவுடன் பாண்டியன் ரொம்ப சந்தோஷப்பட்டார். அதற்கு பின் அரசி தனியாக வெளியில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்போது சுகன்யா, நீ ஏன் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டாய்? குமாரின் காதலை மறந்து விட்டாயா? என்றெல்லாம் அரசியின் மனதை மாற்றும் அளவிற்கு பேசிக் கொண்டிருந்தார். ஆனால், அரசி வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருந்தார்.

இதை எல்லாம் கேட்ட மீனா கோபப்பட்டு சுகன்யா இடம் சண்டைக்கு போனார். அப்போது மீனா, நீங்கள் எதற்கு தேவையில்லாமல் அரசி மனதை சலவை செய்ய பார்க்கிறீர்கள். நீங்கள் தான் அரசியல் காதலுக்கு சப்போர்ட் செய்தீர்களா? என்றெல்லாம் கேட்க, சுகன்யாவால் எதுவுமே பேச முடியவில்லை. பின் மீனா, தயவு செய்து நீங்கள் அரசி விஷயத்தில் ஒதுங்கியிருங்கள் என்று அரசியை அழைத்துக்கொண்டு உள்ளே சென்று விட்டார். அதற்குப்பின் சுகன்யா, சக்திவேல் வீட்டிற்கு சென்று பாண்டியன் வீட்டில் நடந்ததை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். அடுத்து என்ன செய்வது என்று மூவருமே பேசிக்கொண்டு இருப்பதை கேட்டவுடன் ராஜி அம்மா, கோபப்பட்டு சுகன்யாவை திட்டி இருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அரசி நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தார். அவரை பார்த்து கோமதி வருத்தத்துடன் கதிரிடம் புலம்பி கொண்டிருந்தார். பாண்டியனுமே தன் மகளை நினைத்து வருத்தப்பட்டார். இதை எல்லாம் கதிர், ராஜிடம் ரொம்ப எமோஷனலாக பேசி அழுதார். இன்னொரு பக்கம் பழனி தன் அண்ணன் வீட்டில் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். இந்த சத்தத்தை கேட்டு சுகன்யா கோபப்பட்டு பழனியை எழுப்பி திட்டி இருந்தார். பழனியும் என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியாக இருந்தார். பின் சுகன்யா, வெளியே போய் தூங்குங்கள். இங்கு நான் தூங்கணும் என்று அனுப்பி விட்டார்.

கடந்த வாரம் எபிசோட்:

மறுநாள் காலையில் ராஜியின் அம்மா வடிவு, பழனி வெளியே தூங்கி இருப்பதை பார்த்து எதுவும் பேசாமல் அமைதியா இருந்தார். அதற்குப்பின் சுகன்யா, பழனியை எழுப்பி இருந்தார். அவர் எழவில்லை என்றவுடன் மோசமாக திட்டிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் ஓரமாக நின்று வடிவு பார்த்து விட்டார். பின் அந்த சமயம் பார்த்து அப்பத்தா வந்தவுடன் சுகன்யா நடித்தார். வெளியில் பழனி தூங்கியதற்கு ஏதேதோ காரணத்தை சொல்லி சுகன்யா தப்பித்தார். ஆனால், வடிவிற்கு பயங்கர கோபம் வந்தது.

இன்றைய எபிசோட்:

உண்மை தெரிந்திருக்குமோ என்று சுகன்யா பார்த்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியனின் மகன்கள், மருமகள்கள் எல்லோருமே அரசியின் படிப்பை பற்றியும் வாழ்க்கை பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது மருமகள்கள் மூவருமே அரசிக்கு சப்போர்ட் செய்து கல்லூரிக்கு போவது பற்றி பேசுகிறார்கள். பின் பாண்டியன் வந்தவுடனே அவருடைய மூன்று மகன்களுமே அரசி கல்லூரிக்கு போவதற்கு அனுமதி கேட்க, கோமதி முடியாது என்று மறுக்கிறார். பின் எப்படியோ பேசி கோமதியிடம் அனுமதி வாங்கி விடுகிறார்கள். இன்னொரு பக்கம் சுகன்யாவிடம் குமார், எப்படியாவது அரசியை கல்லூரிக்கு அழைத்து வாருங்கள்.

சீரியல் ட்ராக்:

நான் அவரிடம் பேச வேண்டும். வேறு எங்கும் பேசுவதற்கு முடியாது என்று கேட்கிறார். அதற்கு சுகன்யா, சரி நாம் முயற்சி செய்கிறேன். அரசி மனம் மாறுவாரா என்று தெரியாது என்கிறார். அதற்கு பின் கல்லூரிக்கு அரசி தயாராக இருக்கிறார். கோமதி, செந்திலை கொண்டு போய் விட சொல்கிறார். உடனே சுகன்யா, நான் அரசியை கல்லூரிக்கு அழைத்து செல்கிறேன் என்று சொன்னவுடன் மீனாவிற்கு சந்தேகம் வருகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full