குமரவேலிடம் வசமாக சிக்கிய அரசி, பாண்டியன் குடும்பத்திற்கு தெரிய வருமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 18/5/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் சரவணன், அரசி கல்யாணம் முடிந்த உடன் எல்லா விஷயத்தையும் நான் அப்பா அம்மாவிடம் சொல்லப் போகிறேன். அதற்குப்பின் எதுவாக இருந்தாலும் அவர்கள் முடிவெடுக்கட்டும் என்று சொன்னார். தங்கமயில், இதனால் ரொம்பவே உடைந்து போனார். இதனால் வேதனையில் தங்கமயில் தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று நடந்ததை சொல்லி வருத்தப்பட்டார். அவர்களுமே அவருக்கு ஆறுதல் சொன்னார்கள். இன்னொரு பக்கம் குமார், அரசியின் திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று தாங்கள் இருவரும் எடுத்த போட்டோவை தவறாக எடிட் பண்ணி தர சொன்னார்கள்.

கல்யாணத்திற்கு தேவையான உடைகளை எல்லாம் எடுத்து கொண்டு பாண்டியன் குடும்பம் வந்தது. அப்போது செந்தில்- கதிர் இருவருமே அரசி திருமணத்தை பற்றி ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார்கள். அதற்கு பின் அரசி தன்னுடைய கல்யாண புடவை எல்லாம் எடுத்து பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார். அப்போது வந்த சுகன்யா, அரசி குமாருடன் இருக்கும் நெருக்கமான புகைப்படத்தை காண்பித்தார். அதை பார்த்தவுடன் அரசி ஷாக் ஆகிறார். உடனே சுகன்யா, இந்த வேலையெல்லாம் நீ செய்துவிட்டு வேறு ஒரு திருமணமா? என்று கேட்டார். அதற்கு அரசி, நான் எதுவும் செய்யவில்லை. இந்த போட்டோ உண்மை இல்லை என்று கதறி இருந்தார். பின் குமாரிடம் போன் பேச சொல்கிறார் சுகன்யா. ஆனால், அரசி முடியாது என்றார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

சுகன்யா வலுக்கட்டாயமாக குமாரிடம் அரசியை பேச வைத்தார். அப்போது குமார், நீ என்னை தவிர வேறு யாரையாவது திருமணம் செய்தால் இந்த போட்டோவை ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டுவேன் என்று மிரட்டி இருந்தார். அந்த சமயம் பார்த்து ராஜி உள்ளே வந்தவுடன் சுகன்யா போனை வாங்கிக் கொண்டு வெளியே சென்று விட்டார். அப்போது ராஜி, சித்தி ஏதாவது சொன்னார்களா? குமார் ஏதாவது பிரச்சனை செய்கிறானா? என்று கேட்டார். ஆனால், அரசி எதுவும் இல்லை என்று சமாளித்தார். பின் தன்னுடைய அப்பாவிடம் எல்லா உண்மையும் சொல்லிவிடலாம் என்று அரசி வெளியே வந்தார். பாண்டியன், மகளின் திருமணத்தை பற்றியும் மாப்பிள்ளை பற்றியும் பெருமையாக பேசிக் கொண்டிருந்தார். அதனால் அரசி எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் அரசி, குமார் செய்த கேவலமான வேலையை பாண்டியனிடம் சொல்ல பார்த்தார். ஆனால், அவரால் கடைசி வரை சொல்லவே முடியவில்லை. அதற்கு பின் அரசிக்கு போன் செய்த குமார், நீ வெளியே வரவேண்டும். நான் சொல்வதை எல்லாம் நீ கேட்க வேண்டும். இல்லையென்றால், உன் போட்டோவை ஊர் முழுக்க ஒட்டுவேன் என்று மிரட்டி இருந்தார். அதனால் வேறு வழியில்லாமல் அரசியும் வெளியே வந்தார். ஆனால், வெளியில் அவருடைய அண்ணன்கள் இருப்பதை பார்த்து அமைதியாக விட்டார். குமாரும் உள்ளே சென்று விட்டார்.

சீரியல் ட்ராக்:

அப்போது அவருடைய அண்ணன்கள் கல்யாணத்தைப் பற்றி ரொம்ப சந்தோஷமாக அரசி இடம் பேசி இருந்தார்கள். அரசி தன்னுடைய அண்ணன்களிடமாவது உண்மையை சொல்லலாம் என்று நினைத்தார். அந்த சமயம் பார்த்து கோமதி வந்ததால் அமைதியாகிவிட்டார். இன்னொரு பக்கம் தங்கமயில், சரவணனிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால், சரவணன் அதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்தார். இதனால் வேதனையில் தங்கமயில் அழுது புலம்பி இருந்தார். அதற்குப் பின் அரசி, குமார் செய்த வேலையை நினைத்து அழுது புலம்பி இருந்தார். அப்போது கோமதி, என்ன ஆச்சு? என்ன நடந்தது? என்று கேட்டார். கடைசி வரை உண்மையை சொல்லாமல் அரசி ஏதோ சமாளித்து விட்டார்.

https://www.youtube.com/watch?v=YONPMipAXuw

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் குமார் அரசிக்கு போன் செய்து பேசினார். அப்போது அரசி, தெரியாமல் உன்னை நான் காதலித்து விட்டேன். என்னை மன்னித்துவிடு. நான் எங்குமே வரமாட்டேன். தயவுசெய்து என்னை தொந்தரவு செய்யாதே என்று சொல்கிறார். அதற்கு குமார், நீ நேரில் வந்து மன்னிப்பு கேள் என்று சொன்னதால் அதையும் நம்பி அரசி சென்று விடுகிறார். அப்போது குமார், இனி நீ என்னிடமிருந்து தப்பிக்க முடியாது என்று மிரட்டுகிறார். பின் அரசி தப்பித்துப் போகும்போது குமாரின் நண்பர்கள் அவரை வழிமறித்து காரில் ஏற்றுகிறார்கள். இன்னொரு பக்கம் அரசி காணவில்லை என்று பாண்டியன் குடும்பம் தேடுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full