யாருக்கும் தெரியாமல் அரசியை கடத்தும் குமார், பாண்டியன் நிலை என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 22/5/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் மீனா- ராஜி இருவருமே உங்களுடைய நகைப் பற்றி வெளியே தெரியாமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் பயப்படாதீர்கள் என்று தங்கமயிலுக்கு ஆறுதல் சொன்னார்கள். தங்கமயில் நகைக்களை எடுத்து பார்த்தால் எல்லாமே கருகி போயிருக்கிறது. உடனே மீனா, யாருக்கும் தெரியாமல் ஒளித்து வையுங்கள். அத்தையிடம் ஏதாவது சொல்லி சமாளிக்கலாம் என்றார். அப்போது வந்த செந்திலின் உடையை பார்த்து ராஜி ஆச்சரியப்பட்டார். காரணம், மீனா- செந்தில் இருவருமே மேட்சிங் உடைய போட்டிருந்தார்கள். உடனே மீனா, கதிரும் உனக்கு மேட்சிங்கா ட்ரெஸ் போட்டு இருக்கிறாரா? என்று கேட்டவுடன் ராஜி கோபப்பட்டு கதிரை திட்டி இருந்தார்.

இதை வெளியே இருந்த கதிர் கேட்டு விட்டார். அதற்குப்பின் ராஜிக்காக அவர் தன்னுடைய சட்டையை மாற்றிக் கொண்டு வந்தார். அதை பார்த்ததும் ராஜிக்கு ஒரே குஷி. பின் மாப்பிள்ளை வீட்டில் வந்து விட்டார்கள். நலங்கு பங்க்ஷன் நடக்கிறது. குமார் ஏதாவது பிரச்சனை செய்வாரா? என்று ஒரு அரசி பயந்து கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் வீட்டில் எல்லோருமே சந்தோஷமாக இருக்கிறார்கள். அப்போது குமார், சுகன்யாவுக்கு போன் மேல் போன் செய்து கொண்டே இருந்தார். என்ன செய்வது என்று புரியாமல் சுகன்யாவும் அமைதியாக இருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோட்டில் நல்லபடியாக நலங்கு வைக்கும் பங்க்ஷன் முடிந்து விட்டது. வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷத்தில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று இருந்தார்கள். ஆனால், சுகன்யா மட்டும் பதட்டத்திலேயே இருந்தார். காரணம் குமார், சுகன்யாவுக்கு போன் செய்தபடியே இருந்தார்.
ஆனால், சுகன்யாவால் போன் பேச முடியவில்லை. நல்லபடியாக ஃபங்ஷன் முடிந்த பிறகு அரசியை தனியாக சந்தித்து சுகன்யா பேசினார். அப்போது சுகன்யா, குமார் போன் செய்து கொண்டிருக்கிறான். நீ பேசு என்று சொன்னார். ஆனால், அரசி போனை வாங்க மறுத்தார்.

நேற்று எபிசோட்:

பின் சுகன்யா, குமார் போன் செய்தவுடன் வலுக்கட்டாயமாக அரசிடம் கொடுத்து பேச வைத்தார். அப்போது குமார், நல்லபடியாக ஃபங்ஷன் முடிந்து விட்டதா? ஆனால், இந்த திருமணம் நடக்காது என்று வழக்கம்போல அவரை போட்டோவை வைத்து மிரட்டி இருந்தார். அதற்கு அரசி, நான் என் அப்பா அம்மா சொல்வதை தான் கேட்பேன். தயவு செய்து உன்னை காதலித்ததற்கு என்னை மன்னித்துவிடு என்று கேட்டார். உடனே குமார், நீ நேரில் வந்து மன்னிப்பு கேள் என்று சொன்னார். அதற்கு சுகன்யா, மன்னிப்பு தானே போய் நேரில் கேட்டு விட்டு வந்துவிடு. இந்த பிரச்சனை முடிந்துவிடும் என்று அரசியை அனுப்பி வைக்க பார்த்தார்.

இன்றைய எபிசோட்:

அரசி வீட்டில் யாருக்கும் தெரியாமல் வெளியே கிளம்பப் பார்த்தார். அந்த சமயம் பார்த்து அரசியின் அண்ணன், அம்மா வந்து விட்டார்கள். ஆனால், அரசி ஏதோசொல்லி சமாளித்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சுகன்யா, அரசியை எப்படியாவது குமாரிடம் கொண்டு போய் சேர்த்து விட வேண்டும் என்று முயற்சிக்கிறார். அப்போது வீட்டில் உறவினர்கள் எல்லோருமே இருப்பதால் வெளியில் போக கஷ்டமாகிறது. பின் எப்படியோ போராடி அரசியை வெளியே அனுப்பி விடுகிறார் சுகன்யா. இன்னொரு பக்கம் குமாரை சந்தித்து மன்னிக்க கேட்கிறார் அரசி.

சீரியல் ட்ராக்:

அப்போது குமார், நான் உன்னை காதலிக்கவில்லை. என் வலையில் சிக்க வைக்க தான் நான் இப்படி செய்தேன் என்று சொல்கிறார். இதை கேட்டவுடன் அரசி பயந்து அங்கிருந்து தப்பிக்க பார்க்கிறார். உடனே குமாரின் ஆட்கள் அரசியை பிடித்து விடுகிறார்கள். அரசி எவ்வளவு முயற்சித்தும் குமாரிடமிருந்து தப்பிக்க முடியவில்லை. குமார் அரசியை ஒரு காரில் ஏற்றுக் கொண்டு அங்கிருந்து சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் எல்லோரும் திருமண வேலைகள் செய்து கொண்டிருக்கிறார்கள். அரசியை பார்க்க கோமதி போகிறார். உடனே சுகன்யா, அரசி ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கிறார், எழுப்ப வேண்டாம் என்று சமாளித்து அனுப்பி விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full