குமார் விரித்த வலையில் சிக்குவாரா அரசி? சகுனி வேலை செய்யும் சுகன்யா- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் அரசி- குமார் போட்டோவை பாண்டியன் வீட்டிற்கு வெளியே ஒட்டி இருந்தார்கள். இதை பார்த்தவுடன் பாண்டியன் குடும்பம் மொத்தமாக அழுது கொண்டிருந்தது. அதற்கு பின்பு தான் அது அரசி கண்ட கனவு என்பது என்று தெரிந்தது. அதற்கு பின் வீட்டில் திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கிறது. எல்லோரும் வீட்டில் மெகந்தி வைத்துக் கொண்டு சந்தோசமாக திருமணத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது குமார், கோமதி மொபைலுக்கு கால் செய்து வேறொருவர் பேசியது போல் அரசி இடம் பேசி இருந்தார்.
அப்போது குமார், இந்த திருமணம் நடக்காது. உன் அப்பா தேவையில்லாமல் கடன் வாங்கி இதெல்லாம் செய்தார். நான் சொல்வதைக் கேட்டால் உன்னுடைய மானம் போகாது என்றெல்லாம் பேசி மிரட்டி இருந்தார். அரசிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் ரொம்ப பயந்தார். மறுநாள் காலையில் எல்லோருமே நலங்கு வைப்பதற்கு தயாராக இருந்தார்கள். அப்போது ராஜி, கதிருகாக மேட்சிங் உடையை எடுத்துக் கொடுத்தார். ஆனால், கதிர் போட மாட்டேன் என்று சொன்னதால் ராஜி வருத்தப்பட்டு சென்று விட்டார். அதற்குப்பின் கோமதி, தன்னுடைய மருமகளிடம் கழுத்து நிறைய நகைகளை போட்டு வாருங்கள் என்று சொன்னவுடன் தங்கமயில் பயந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் மீனா- ராஜி இருவருமே உங்களுடைய நகைப் பற்றி வெளியே தெரியாமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் பயப்படாதீர்கள் என்று தங்கமயிலுக்கு ஆறுதல் சொன்னார்கள். தங்கமயில் நகைக்களை எடுத்து பார்த்தால் எல்லாமே கருகி போயிருக்கிறது. உடனே மீனா, யாருக்கும் தெரியாமல் ஒளித்து வையுங்கள். அத்தையிடம் ஏதாவது சொல்லி சமாளிக்கலாம் என்றார். அப்போது வந்த செந்திலின் உடையை பார்த்து ராஜி ஆச்சரியப்பட்டார். காரணம், மீனா- செந்தில் இருவருமே மேட்சிங் உடைய போட்டிருந்தார்கள். உடனே மீனா, கதிரும் உனக்கு மேட்சிங்கா ட்ரெஸ் போட்டு இருக்கிறாரா? என்று கேட்டவுடன் ராஜி கோபப்பட்டு கதிரை திட்டி இருந்தார்.
நேற்று எபிசோட்:
இதை வெளியே இருந்த கதிர் கேட்டு விட்டார். அதற்குப்பின் ராஜிக்காக அவர் தன்னுடைய சட்டையை மாற்றிக் கொண்டு வந்தார். அதை பார்த்ததும் ராஜிக்கு ஒரே குஷி. பின் மாப்பிள்ளை வீட்டில் வந்து விட்டார்கள். நலங்கு பங்க்ஷன் நடக்கிறது. குமார் ஏதாவது பிரச்சனை செய்வாரா? என்று ஒரு அரசி பயந்து கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் வீட்டில் எல்லோருமே சந்தோஷமாக இருக்கிறார்கள். அப்போது குமார், சுகன்யாவுக்கு போன் மேல் போன் செய்து கொண்டே இருந்தார். என்ன செய்வது என்று புரியாமல் சுகன்யாவும் அமைதியாக இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நல்லபடியாக நலங்கு வைக்கும் பங்க்ஷன் முடிந்து விடுகிறது. வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷத்தில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று இருக்கிறார்கள். ஆனால், சுகன்யா மட்டும் பதட்டத்திலேயே இருக்கிறார். காரணம் குமார், சுகன்யாவுக்கு போன் செய்தபடியே இருக்கிறார்.
ஆனால், சுகன்யாவால் போன் பேச முடியவில்லை. நல்லபடியாக ஃபங்ஷன் முடிந்த பிறகு அரசியை தனியாக சந்தித்து சுகன்யா பேசுகிறார். அப்போது சுகன்யா, குமார் போன் செய்து கொண்டிருக்கிறான். நீ பேசு என்று சொல்கிறார். ஆனால், அரசி போனை வாங்க மறுக்கிறார்.
சீரியல் ட்ராக்:
பின் சுகன்யா, குமார் போன் செய்தவுடன் வலுக்கட்டாயமாக அரசிடம் கொடுத்து பேச வைக்கிறார். அப்போது குமார், நல்லபடியாக ஃபங்ஷன் முடிந்து விட்டதா? ஆனால், இந்த திருமணம் நடக்காது என்று வழக்கம்போல அவரை போட்டோவை வைத்து மிரட்டுகிறார். அதற்கு அரசி, நான் என் அப்பா அம்மா சொல்வதை தான் கேட்பேன். தயவு செய்து உன்னை காதலித்ததற்கு என்னை மன்னித்துவிடு என்று கேட்கிறார். உடனே குமார், நீ நேரில் வந்து மன்னிப்பு கேள் என்று சொல்கிறார். அதற்கு சுகன்யா, மன்னிப்பு தானே போய் நேரில் கேட்டு விட்டு வந்துவிடு. இந்த பிரச்சனை முடிந்துவிடும் என்று அரசியை அனுப்பி வைக்க பார்க்கிறார். அரசி வீட்டில் யாருக்கும் தெரியாமல் வெளியே கிளம்பப் பார்க்கிறார். அந்த சமயம் பார்த்து அரசியின் அண்ணன், அம்மா வந்துவிடுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது