அரசியை நினைத்து வேதனைப்படும் குமார், சவாலில் பின் வாங்குவாரா ராஜி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 4/9/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் ராஜி, கதிரிடம் டான்ஸ் காம்பிடிஷன் பற்றி பேச, அதற்கு கதிர், நீ உன்னுடைய போலீஸ் வேலையில் மட்டும் கவனம் செலுத்து என்றார். அதற்கு பின் ராஜி, பாண்டியனிடம் நியூஸ் பேப்பரை கொடுத்து டான்ஸ் காம்பிடிஷன் பற்றி சொன்னார். இதைக் கேட்ட கோமதி கோபப்பட்டு ராஜியை திட்டினார். பாண்டியன், இதெல்லாம் சரிப்பட்டு வராதுமா என்றார். இருந்தாலுமே இதை ராஜி விடுவதாக இல்லை. அதற்குப்பின் பாண்டியனிடம் கோமதி, ராஜுவை டான்ஸ் காம்பிடிஷனுக்காக சென்னைக்கு அனுப்ப வேண்டாம்.

நீங்கள் ஏதாவது சொல்லி புரிய வையுங்கள் என்றார். குமார், அரசியை சந்தித்து மன்னிப்பு கேட்டார். ஆனால், அரசி எதுவுமே பேசவில்லை. இதையெல்லாம் பார்த்த சரவணன் கோபப்பட்டு குமாரை அடித்து விட்டு அரசியை அங்கு இருந்து அழைத்து சென்றார். இன்னொரு பக்கம் வீட்டில் டான்ஸ் காம்பிடிஷனில் கலந்து கொள்வதைப் பற்றி ராஜி சொன்னார். ஆனால், வீட்டில் யாருமே ஒத்துக்கொள்ளவில்லை. டான்ஸ் காம்பிடிஷனுக்கு அனுப்பாவிட்டால் நான் சாப்பிட மாட்டேன் என்று உண்ணாவிரதம் இருந்தார் ராஜி.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இதனால் பாண்டியன் கோபப்பட்டு ராஜியை திட்டி உன்னுடைய முடிவு. நீ என்ன வேணாலும் செய்து கொள் என்று சென்றார். அதற்குப் பின் கதிர், ராஜியை தனியாக அழைத்து சென்று சொல்லி புரிய வைத்தார். ஆனால், ராஜி ஏற்றுக் கொள்வதாகவே இல்லை. மறுநாள் காலையில் ராஜி தயாராகி வந்தார். அதை பார்த்த பாண்டியன், டான்ஸ் போட்டி பற்றி பேசாதே என்றார். அதற்கு ராஜி, அதை பற்றி தான் பேச வந்தேன் என்றார். ராஜி, கண்டிப்பாக நான் டான்ஸ் போட்டியில் கலந்து கொள்வேன் அடம் பிடித்தார்.

இன்றைய எபிசோட்:

வீட்டில் உள்ள எல்லோருமே எவ்வளவோ எடுத்து சொல்லியுமே ராஜி கேட்கவில்லை. பாண்டியன், எதுவாக இருந்தாலும் உன் முடிவு என்று கிளம்பி விட்டார். உடனே ராஜி சென்னைக்கு கிளம்பினார். பின் கதிர்-ராஜி இருவரும் செல்லும் வழியில் வாக்குவாதம் ஏற்பட்டதால் கதிர், ராஜியுடன் சென்னை செல்லவில்லை. கதிர் கோபத்தில் வீட்டுக்கு வந்து விட்டார். இதை அறிந்த பாண்டியன், கதிரை திட்டினார். இன்னொரு பக்கம் ராஜி சென்னைக்கு சென்று காம்பிடிஷன் நடக்கும் இடத்தில் தன்னுடைய பெயரை கொடுத்து போட்டியில் கலந்து கொண்டார்.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜி தனக்கு கொடுத்த ரூமிற்கு சென்று விடுகிறார். இருந்தாலுமே புது இடம் என்பதால் உள்ளுக்குள் பயப்படுகிறார். பின் ராஜிக்கு போன் செய்து கதிர் விசாரிக்கிறார். அதற்குப்பின் மீனாவுமே போன் செய்து ராஜியிடம் விசாரிக்கிறார். இன்னொரு பக்கம் சக்திவேல் வீட்டில் குமார் கேஸ் விஷயமாக எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சக்திவேல், அரசியை நீ கடத்தவில்லை என்று சொல்ல வேண்டும் என்றார். அதற்கு குமார், நான் தான் கடத்தினேன். அதுதானே உண்மை. தயவுசெய்து இனிமேல் இதைப் பற்றி பேசாதீர்கள் என்கிறார்.

சீரியல் ட்ராக்:

பின், அப்பத்தா குமாரிடம் பேசுகிறார். அப்போது குமார், நான் தான் தவறு செய்தேன். அரசியை ரொம்ப கஷ்டப்படுத்தினேன். அதற்கான தண்டனையை அனுபவிக்கிறேன் என்று சொல்லி ரொம்ப எமோஷனாக அழுகிறார். இன்னொரு பக்கம் ராஜி டான்ஸ் காம்பிடிஷன் நடைபெற இருக்கிறது. அங்கு நடப்பது எல்லாம் பார்த்து ராஜிக்கு ஒன்னும் புரியவில்லை,பயப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full