நகைகளை கேட்கும் பாண்டியன்,பயத்தில் உளறும் தங்கமயில்-உண்மை வெளிவருமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 9/6/2024

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் இருப்பது “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2”. இந்த சீரியலின் முதல் பாகம் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக்கதையை மையமாக கொண்டது. கடந்த ஆண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகம் நிறைவடைந்தது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது. இரண்டாவது சீசனில் அப்பா- மகன்களுக்கு இடையேயான உறவை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும், முதல் சீசனில் அண்ணனாக நடித்த ஸ்டாலின் தற்போது அப்பாவாக நடிக்கிறார். ஸ்டாலினுக்கு மனைவியாக நிரோஷா நடிக்கிறார். இவர்களுடைய மகன்களாக விஜே கதிர், வசந்த், ஆகாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். சீரியலில் தந்தை பாண்டியனுக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவர் பிள்ளைகளை தன்னுடைய கட்டுக்கோப்பில் வளர்த்து வருகிறார். இதனால் இவர் பெருமிதமாக இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் பாண்டியனின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மகன்களுக்கு எதிர்பாராத விதமாக திருமணம் நடந்து விடுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இதனால் பாண்டியன் ரொம்பவே மனம் உடைந்து விடுகிறார். அதோடு மூத்த மகன் சரவணனுக்கு திருமணம் ஆகவில்லை என்று வீட்டில் எல்லோருமே வருத்தப்பட்டு, அவருக்கு எப்படியாவது என்று செய்து வைக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக சரவணனுக்கு சம்மந்தம் பேசி முடிக்கப்படுகிறது. தங்க மயிலை தான் சரவணன் திருமணம் செய்ய இருக்கிறார். தாங்கள் வசதியான குடும்பம் என்று பொய் சொல்லி தங்கமயில் வீட்டில் திருமணம் செய்கிறார்கள் .

சீரியல் கதை:

கடந்த வாரம் திருமணத்திற்கான எபிசோடுகள் கலகலப்பாக சென்றது. இன்னொரு பக்கம், கடனை திருப்பிக் கொடுக்கவில்லை என்றால் தங்கமயில் வீட்டில் ப்ரச்சனை செய்கிறார்கள். ஆனால், அதை எப்படியோ தங்கமயில் வீட்டில் மறைத்து விடுகிறார்கள். அதோடு தங்கமயில் போட்டு இருக்கும் நகை அனைத்தும் போலியே. இதை பொய் சொல்லி திருமணத்தை செய்து விடுகிறார்கள். மேலும், பாண்டியன் வீட்டுக்கு வந்ததிலிருந்து தங்கமயில் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறார்.

சீரியல் ட்ராக்:

இதனால் அவருடைய மாமியார், ,மற்ற மருமகளுக்கும் பயங்கரமாக கடுப்பில் இருக்கிறார்கள். குறிப்பாக, பாண்டியன் தங்கமயிலை புகழ்ந்து பேசுகிறார். இது மற்றவர்களுக்கு பிடிக்கவே இல்லை. இப்படி இருக்கும் நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், பாண்டியன் வீட்டிற்குள் திருடன் யாரோ வந்திருக்கிறார். இதை குறித்து எல்லோருமே வீட்டில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பின் நகைகளை எல்லாம் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று பாண்டியன் சொல்கிறார்.

https://youtu.be/jiCvQ4h9SVA?si=7oOxm3sG8WMibysQ

சீரியல் ப்ரோமோ:

அதற்கு தங்கமயில், என்னுடைய அம்மாவிடம் லாக்கர் இருக்கிறது. நகையை அங்கே வைத்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார். உடனே பாண்டியன், உன் மாமியாரிடமே லாக்கர் இருக்கிறது கொடுத்துவிடுங்கள் என்று கூறுகிறார். எல்லோருமே நகைகளை அவர்களுடைய மாமியாரிடம் கொடுக்க வருகிறார்கள். அப்போது தங்கமயில், நகையை உரசி பார்ப்பீர்களா? என்று நிறைய திரும்பத் திரும்ப கேட்கிறார். இதனால் எல்லோருக்கும் சந்தேகம் வருகிறது. இனி வரும் நாட்களில் தங்கமயில் போட்டிருக்கும் நகை போலி என்ற உண்மை தெரிய வருமா? தங்கமயில் வீட்டில் போடும் நாடகம் பாண்டியன் கண்டுபிடிப்பாரா? போன்ற பரபரப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full